ஃபோர்டு, பிஎம்டபிள்யூ எல்லாம் டூப்பு; ஹூண்டாய் தான் டாப்பு.. அமெரிக்க நிறுவனம் கண்டுபிடிப்பு

பிஎம்டபிள்யூ, ஃபோர்டு போன்ற பெரிய நிறுவனங்களில் கார்களின் தரத்தை விட ஹூண்டாய் கார்களின் தரம் தான் நன்றாக இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

By Balasubramanian

பிஎம்டபிள்யூ, ஃபோர்டு போன்ற பெரிய நிறுவனங்களில் கார்களின் தரத்தை விட ஹூண்டாய் கார்களின் தரம் தான் நன்றாக இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அனைத்து நிறுவனங்களும் ஆண்டிற்கு ஆண்டு தரமான கார்களின் தயாரிப்பில் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 ஃபோர்டு, பிஎம்டபிள்யூ எல்லாம் டூப்பு; ஹூண்டாய் தான் டாப்பு.. அமெரிக்க நிறுவனம் கண்டுபிடிப்பு

ஜேடி பவர் என்ற அமெரிக்க நிறுவனம் தரமான கார்கள் குறித்த ஆய்வை ஆண்டு தோறும் நடத்துகிறது. அதன் படி விற்பனையாகும் கார்களில் எவ்வளவு கார்களில் குறைகள் உள்ளது என்பதை பொருத்து கணக்கிடுகிறது.

 ஃபோர்டு, பிஎம்டபிள்யூ எல்லாம் டூப்பு; ஹூண்டாய் தான் டாப்பு.. அமெரிக்க நிறுவனம் கண்டுபிடிப்பு

இந்த கணக்கீடு என்பது தனித்தனி கார் மாடல்களுக்கு என்று இல்லாமல் ஒரு பிராண்ட் கார்களை கணக்கில் கொண்டு கணக்கிடப்படுகிறது அதாவது டாடா பிராண்ட் கார்கள் என்றால் ஒட்டு மொத்த எல்லா மாடல் கார்களையும் ஒரே கணக்காக கொண்டு கணக்கிடப்படுகிறது.

 ஃபோர்டு, பிஎம்டபிள்யூ எல்லாம் டூப்பு; ஹூண்டாய் தான் டாப்பு.. அமெரிக்க நிறுவனம் கண்டுபிடிப்பு

இதுவும் கார் வாங்கி முதல் 3 மாதங்களுக்கு அதாவது 90 நாட்களுக்கு பிரச்னை என சர்வீஸ் சென்டர்களுக்கு வரும் கார்களை கணக்கில் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

 ஃபோர்டு, பிஎம்டபிள்யூ எல்லாம் டூப்பு; ஹூண்டாய் தான் டாப்பு.. அமெரிக்க நிறுவனம் கண்டுபிடிப்பு

இந்த ஆய்வின் 2018ம் ஆண்டிற்கான அறிக்கை சமீபத்தில் வெளியானது. நாம் அனைவரும், பிஎம்டபிள்யூ, ஆடி, ஃபெராரி போன்ற பிராண்ட்கள் முதல் இடத்தை பிடித்திருக்கும் என நாம் நினைத்து கொண்டிப்போம் ஆனால் நிலைமை வேறு விதமாக இருக்கிறது.

 ஃபோர்டு, பிஎம்டபிள்யூ எல்லாம் டூப்பு; ஹூண்டாய் தான் டாப்பு.. அமெரிக்க நிறுவனம் கண்டுபிடிப்பு

ஆய்வில் முதல் இடத்தை ஜெனிசிஸ் என்ற கார் பிராண்டும், இரண்டாம் இடத்தை கியா கார் பிராண்டும் பிடித்திருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மூன்றாம் இடத்தை ஹூண்டாய் நிறுவனம் பிடித்துள்ளது இது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 ஃபோர்டு, பிஎம்டபிள்யூ எல்லாம் டூப்பு; ஹூண்டாய் தான் டாப்பு.. அமெரிக்க நிறுவனம் கண்டுபிடிப்பு

பட்டியலில் உள்ள முதல் மூன்று இடங்களையும் தென்கொரிய கார் நிறுவனங்கள் தான் பெற்றுள்ளது. இதில் ஜெனிசிஸ் பிராண்டை ஹூண்டாய் நிறுவனம் தான் வைத்திருக்கிறது. எனினும் அதில் கியா நிறுவனத்தினற்கு பங்கு இருக்கிறது.

 ஃபோர்டு, பிஎம்டபிள்யூ எல்லாம் டூப்பு; ஹூண்டாய் தான் டாப்பு.. அமெரிக்க நிறுவனம் கண்டுபிடிப்பு

தற்போது மூன்றாவது இடத்திற்கு வந்துள்ள ஹூண்டாய் நிறுவனம் உலகின் சிறந்த கார் பிராண்ட்களாக கருதப்படும் ஃபோர்ஷே, ஃபோர்டு, சேவர்லே, நிஸான், பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் எல்லாம் பின்னுக்கு தள்ளி ஹூண்டாய் முன்னேறியுள்ளது.

 ஃபோர்டு, பிஎம்டபிள்யூ எல்லாம் டூப்பு; ஹூண்டாய் தான் டாப்பு.. அமெரிக்க நிறுவனம் கண்டுபிடிப்பு

பட்டியலின் படி 100 காருக்கு 74 கார்களில் பிரச்னை இருப்பதாக கூறி ஹூண்டாய் பிராண்டிற்கு மூன்றாவது இடமும், 72 கார்களில் பிரச்னை இருப்பதாக கூறி கியா பிராண்டிற்கு இரண்டாம் இடமும் பிடித்துள்ளது. நான்வது இடத்தை ஃபோர்ஷே நிறுவனம் 79 கார்களில் பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறுது.

 ஃபோர்டு, பிஎம்டபிள்யூ எல்லாம் டூப்பு; ஹூண்டாய் தான் டாப்பு.. அமெரிக்க நிறுவனம் கண்டுபிடிப்பு

இது மட்டும் இல்லாமல் ஹூண்டாய் பிராண்டின் காரான ஹூண்டாய் டக்சன் கார் சிறிய ரக எஸ்யூவி கார்களில் சிறந்த ரேங்கை பெற்றுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் முடிவில் அந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எல்லா நிறுவனங்களும் தங்கள் காரின் தரத்தை அதிகரித்து வருகின்றன.

 ஃபோர்டு, பிஎம்டபிள்யூ எல்லாம் டூப்பு; ஹூண்டாய் தான் டாப்பு.. அமெரிக்க நிறுவனம் கண்டுபிடிப்பு

ஆண்டிற்கு ஆண்டு ஒவ்வொரு 100 கார்களுக்கும் முதல் 90 நாட்களில் பிரச்னை ஏற்படும் கார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

டிரைவ் ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
hyundai beats bmw ford and more in car quality. Read in Tamil
Story first published: Saturday, June 23, 2018, 17:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X