ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: படங்களுடன் விபரம்!!

பொலிவு கூட்டப்பட்ட புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த காரின் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பொலிவு கூட்டப்பட்ட புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த காரின் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: படங்களுடன் விபரம்!!

ஹேட்ச்பேக் கார்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட க்ராஸ்ஓவர் கார் மாடல்களில் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையிலான ஐ20 ஆக்டிவ் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிப்ரவரியில் புதுப்பொலிவுடன் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: படங்களுடன் விபரம்!!

இந்த நிலையில், ஐரோப்பிய மார்க்கெட்டிற்கான ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் விரைவில் இந்தியாவில் வர இருக்கிறது. இந்த காரின் முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: படங்களுடன் விபரம்!!

புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரில் முகப்பில் புதிய க்ரில் அமைப்புக்கு மாறி இருக்கிறது. அதேபோன்று, டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் நம்பர் பிளேட் அமைப்புகளிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: படங்களுடன் விபரம்!!

அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஐரோப்பிய மாடலில் ஃபான்டம் பிளாக் என்ற கருப்பு வண்ண கூரையுடன் புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முக்கிய மாற்றமாக இருக்கும்.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: படங்களுடன் விபரம்!!

புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரின் உட்புறத்தில் டிசைன் மாற்றங்கள் இல்லை. அதேநேரத்தில், புதிய சீட் கவர்கள் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது புதுப்பொலிவு தருகிறது.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: படங்களுடன் விபரம்!!

ஐரோப்பிய மாடலில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் ஆகியவை புதிய அம்சங்களாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இது கூடுதல் எரிபொாருள் சிக்கனத்தை தரும். மோதல் மற்றும் தடம் மாறுதல் குறித்த எச்சரிக்கை தரும் வசதியும் கூடுதலாக சேர்க்கப்ப்ட்டு இருக்கிறது.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: படங்களுடன் விபரம்!!

இந்தியா வரும் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் எஞ்சின் 81 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் 88 பிஎச்பி பவரையும், 219 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: படங்களுடன் விபரம்!!

தற்போது பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் தக்க வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸ் இருப்பதால், ஹண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கொண்டு வருமா என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்: படங்களுடன் விபரம்!!

இந்த ஆண்டின் பிற்பாதியில் புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. அண்மையில் விற்பனைக்கு வந்த ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் மற்றும் ஃபியட் அர்பன் க்ராஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Hyundai i20 Active facelift revealed. Hyundai has unveiled the new 2018 i20 Active with subtle cosmetic changes. Hyundai had launched the new 2018 Elite i20 at the Auto Expo 2018 and now the company has revealed the facelifted i20 Active.
Story first published: Monday, April 30, 2018, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X