நம்பர்-1 இடத்திற்காக ஃபியட் க்றைஸலர் குழுமத்தை கையகப்படுத்த ஹூண்டாய் திட்டம்!

இத்தாலியை சேர்ந்த ஃபியட் கார் நிறுவனமும், அமெரிக்காவை சேர்ந்த க்றைஸ்லர் நிறுவனம் கூட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகின்றன. இந்த குழுமத்தின் கீழ் ஃபியட், க்றைஸ்லர், ஜீப் மற்றும் டாட்ஜ் ஆகிய கார் நிறுவனங்க

By Saravana Rajan

ஃபியட் க்றைஸ்லர் கார் தயாரிப்பு குழுமத்தை கையகப்படுத்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

நம்பர்-1 இடத்திற்காக ஃபியட் க்றைஸலர் குழுமத்தை கையகப்படுத்த ஹூண்டாய் திட்டம்!

இத்தாலியை சேர்ந்த ஃபியட் கார் நிறுவனமும், அமெரிக்காவை சேர்ந்த க்றைஸ்லர் நிறுவனம் கூட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகின்றன. இந்த குழுமத்தின் கீழ் ஃபியட், க்றைஸ்லர், ஜீப் மற்றும் டாட்ஜ் ஆகிய கார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

நம்பர்-1 இடத்திற்காக ஃபியட் க்றைஸலர் குழுமத்தை கையகப்படுத்த ஹூண்டாய் திட்டம்!

இந்த நிலையில், ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் வர்த்தகம் தொடர்ந்து மந்த நிலையில் இருந்து வருகிறது. மேலும், எதிர்கால சந்தையில் போட்டி போடுவதற்கு மின்சார கார்கள் மற்றும் டிரைவர்லெஸ் கார்களை தயாரிப்பதற்கு அதிக நிதி முதலீடும் தேவைப்படுகிறது.

நம்பர்-1 இடத்திற்காக ஃபியட் க்றைஸலர் குழுமத்தை கையகப்படுத்த ஹூண்டாய் திட்டம்!

இதனால், ஃபியட் க்றைஸ்லர் குழுமம் பெரும்பான்மையான பங்குகளை விற்று முதலீடு திரட்ட முடிவு செய்தது. இதற்காக, அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ கார் குழுமம் மற்றும் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் கார் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தியது. இதில், உருப்படியான தீர்வுகள் கிடைக்கவில்லை.

நம்பர்-1 இடத்திற்காக ஃபியட் க்றைஸலர் குழுமத்தை கையகப்படுத்த ஹூண்டாய் திட்டம்!

இந்த நிலையில், ஃபியட் க்றைஸ்லர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தை கையகப்படுத்த தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன்மூலமாக,உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் என்ற அந்தஸ்தை பிடிக்கவும் ஹூண்டாய் கணக்கு போட்டுள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

நம்பர்-1 இடத்திற்காக ஃபியட் க்றைஸலர் குழுமத்தை கையகப்படுத்த ஹூண்டாய் திட்டம்!

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வசம் ஃபியட் க்றைஸ்லர் குழுமம் செல்வதற்கு விருப்பம் தெரிவிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நம்பர்-1 இடத்திற்காக ஃபியட் க்றைஸலர் குழுமத்தை கையகப்படுத்த ஹூண்டாய் திட்டம்!

ஒருவேளை, ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கையகப்படுத்தினால், அந்த புதிய நிறுவனம் உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு குழுமம் என்ற அந்தஸ்தை பெறும். தற்போதைய கணக்கீடுகளின்படி, புதிய குழுமமானது ஆண்டுக்கு 11.5 மில்லியன் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கும்.

நம்பர்-1 இடத்திற்காக ஃபியட் க்றைஸலர் குழுமத்தை கையகப்படுத்த ஹூண்டாய் திட்டம்!

இதனிடையே, ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் பங்குகள் விலை மேலும் குறைந்தால், உடனடியாக கைப்பற்றும் திட்டத்துடன் ஹூண்டாய் காத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தக்க சமயத்தில் டீலை முடிக்கவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai plans to acquire FCA along with Jeep brand.
Story first published: Saturday, June 30, 2018, 15:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X