ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை உயர்கிறது... முன்பதிவுக்கு முந்துங்கள்!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு இதுவரை 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில், ஏஎம்டி மாடலுக்கு மட்டும் 30 சதவீதத்தினர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பழைய மாடலைவிட பெரிய காராகவும், அதிக இடவசதி மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் சரியான விலையில் வந்திருப்பதால், வாடிக்கையாளர்கள் பெரும் ஆதரவை சான்ட்ரோவுக்கு நல்கியுள்ளனர். இதனால், முன்பதிவு மிகச் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை உயர்கிறது... முன்பதிவுக்கு முந்துங்கள்!

இதுவரை செய்யப்பட்டிருக்கும் முன்பதிவு குறித்த விபரங்களும் வெளியாகி உள்ளன. அதன்படி, புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பெட்ரோல்- மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு 49 சதவீதத்தினர் முன்பதிவு செய்துள்ளனர்.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை உயர்கிறது... முன்பதிவுக்கு முந்துங்கள்!

ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலுக்கு 30 சதவீதத்தினர் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோன்று, சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் மாடலுக்கு 21 சதவீதத்தினர் முன்பதிவு செய்துள்ளனர். ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு குறிப்பிடத்தக்க அளவில் முன்பதிவு கிடைத்திருப்பது ஹூண்டாய் நிறுவனத்துக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை உயர்கிறது... முன்பதிவுக்கு முந்துங்கள்!

இந்தியர்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்கள் பக்கம் கவனத்தை திருப்பிருப்பதை இது உணர்த்துவதாகவே கருத முடியும். இதனிடையே, அறிமுக விழாவில் கூறியது போன்று, தற்போது அறிமுகச் சலுகை விலையாக விற்பனையில் இருக்கிறது. முதலில் முன்பதிவு செய்யும் 50,000 பேருக்கு மட்டுமே தற்போதைய விலை பொருந்தும்.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை உயர்கிறது... முன்பதிவுக்கு முந்துங்கள்!

முன்பதிவு 50,000 தாண்டும்போது, சான்ட்ரோ காரின் விலை அதிகரிக்கப்பட உள்ளது. எனவே, இந்த காரை வாங்க விரும்புவோர் இப்போதே முன்பதிவு செய்து கொள்வது நல்லது. ஏனெனில், கூடிய விரைவில் முன்பதிவு 50,000 எட்டும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை உயர்கிறது... முன்பதிவுக்கு முந்துங்கள்!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் டால் பாய் டிசைன் கான்செப்ட்டில் பட்ஜெட் ரகத்தில் சற்று பெரிய மாடலாக தெரிகிறது. இன்டீரியர் கூட மிக தரமானதாக கொடுக்கப்பட்டு இருப்பது இந்த காரின் மதிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை உயர்கிறது... முன்பதிவுக்கு முந்துங்கள்!

இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றம் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை உயர்கிறது... முன்பதிவுக்கு முந்துங்கள்!

புதிய சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை உயர்கிறது... முன்பதிவுக்கு முந்துங்கள்!

இந்த கார் சிஎன்ஜி மாடலிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 30.5 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை உயர்கிறது... முன்பதிவுக்கு முந்துங்கள்!

ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்படுகின்றன. இந்த கார் ரூ.3.89 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது. டாடா டியாகோ கார் நேரடி போட்டியாளராக இருக்கிறது. அறிமுகமான முதல் மாதத்திலேயே, டாடா டியாகோ காரைவிட விற்பனையில் முந்தி இருக்கிறது.

Most Read Articles
English summary
Hyundai had announced at the launch of the car that the introductory pricing would be only for the first 50,000 units. With 30,000 bookings done in just around 15 days, the Hyundai Santro will soon cross the 50,000 bookings milestone and Hyundai will then hike prices.
Story first published: Friday, November 9, 2018, 11:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X