முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய ஹூண்டாய் மினி எஸ்யூவி!!

2016ம் ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் கர்லினோ என்ற எஸ்யூவி கான்செப்ட் மாடலை ஹூண்டாய் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த நிலையில், இதன் அடிப்படையிலான புதிய மினி எஸ்யூவி அமெரிக்

By Saravana Rajan

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மினி எஸ்யூவி முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கி இருக்கிறது. ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய ஹூண்டாய் மினி எஸ்யூவி!!

கடந்த 2016ம் ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் கர்லினோ என்ற எஸ்யூவி கான்செப்ட் மாடலை ஹூண்டாய் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த கான்செப்ட் மாடலின் அடிப்படையில் புதிய மினி எஸ்யூவி வர இருப்பதாக வெளியாகும் என்பதால் அப்போதே அதிக ஆவல் எழுந்தது.

முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய ஹூண்டாய் மினி எஸ்யூவி!!

இந்த நிலையில், அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மினி எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த புதிய மினி எஸ்யூவி கர்லினோ எஸ்யூவி கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய ஹூண்டாய் மினி எஸ்யூவி!!

இந்த புதிய எஸ்யூவிக்கு இன்னும் புதிய பெயர் சூட்டப்படாமல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. வழக்கமான ஹூண்டாய் கார்களில் இருப்பது போல அல்லாமல், இந்த காரில் புதிய க்ரில் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகளுடன் ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பது ஸ்பை படங்கள் மூலமாக புலனாகிறது.

முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய ஹூண்டாய் மினி எஸ்யூவி!!

இந்த காரின் சோதனை ஓட்டம் இப்போதுதான் துவங்கி இருப்பதால், அங்க அடையாளங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருக்கிறது. உட்புற வடிவமைப்பு குறித்தும் இப்போது ஸ்பை படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய ஹூண்டாய் மினி எஸ்யூவி!!

இந்த எஸ்யூவி விரைவில் இந்தியாவில் வைத்தும் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து கணிக்க முடியும்.

முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய ஹூண்டாய் மினி எஸ்யூவி!!

2020ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாகவே இந்த எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் ஆகிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய ஹூண்டாய் மினி எஸ்யூவி!!

ஹூண்டாய் நிறுவனத்தின் துணை பிராண்டாக விளங்கும் கியா மோட்டார்ஸ் நிறுவனமும் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. எனவே,இதே எஸ்யூவியின் அடிப்படையில் கியா பிராண்டிலும் புதிய எஸ்யூவி களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது.

Source: Carwale

Most Read Articles
English summary
Hyundai has begun testing their all-new sub-4m SUV. Displayed as the Carlino concept more than two years ago at the Auto Expo 2016 in Delhi, the SUV seems to be quite close to its final form.
Story first published: Thursday, July 26, 2018, 11:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X