ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்!!

ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியாகி இருக்கிறது. அடையாளங்கள் சற்றே மறைக்கப்பட்ட நிலையில், தயாரிப்பு நிலை மாடலாக அறிமுகமாகி இருக்கிறது.

By Saravana Rajan

ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு சரிக்கு நிகரான மாடலாக எதிர்பார்க்கப்படும் இந்த புதிய எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்!!

அடையாளங்கள் சற்றே மறைக்கப்பட்ட நிலையில், தயாரிப்பு நிலை மாடலாக வீடியோ மூலமாக அறிமுகம் செய்துள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். மேலும், இது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்!!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மாடலானது ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி ஏ0 பிளாட்ஃபார்மில் மாறுதல்களுடன் உருவாக்கப்பட இருக்கிறது. இந்தியா வர இருக்கும் மாடலில் வெளிப்புற டிசைன் மற்றும் இன்டீரியரில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்!!

புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியானது பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் புத்தம் புதிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்!!

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியிலும் பொருத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்!!

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் உருவாக்கப் பணிகளை புரொஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ரூ.8,000 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்ய ஃபோக்ஸ்வேகன் குழுமம் முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் புதிய ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். அதன் பின்னர், இந்திய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றங்களுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். 2021ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேர் போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
German automaker Volkswagen is gearing up for the unveiling of its new compact SUV named as the T-Cross. In the Indian market, the Volkswagen T-Cross will lock horns with the Hyundai Creta. Ahead of its unveil, Volkswagen has released a new video of the T-Cross finished in camouflaged livery.
Story first published: Monday, July 16, 2018, 11:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X