ஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...

ஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார் உள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள கூடுதல் புள்ளி விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியா-இங்கிலாந்து இடையே எதிர்கால தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்வு, புது டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், பல்வேறு புள்ளி விபரங்களை வெளியிட்டார்.

ஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...

இதன் மூலம் இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் வெறும் 22 நபர்கள் மட்டுமே சொந்தமாக கார் வைத்திருக்கும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது இந்தியாவின் ரேஷியோ 22 கார்கள்/1000 குடிமக்கள் என்ற விகிதத்தில் உள்ளது.

ஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...

ஒப்பீட்டளவில் பார்த்தால், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை காட்டிலும் இது மிக மிக குறைவாகும். அமெரிக்காவில், ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் சராசரியாக 980 பேர் சொந்தமாக கார் வைத்துள்ளனர். இதுவே இங்கிலாந்தில் ஆயிரம் பேருக்கு 850 பேர் சொந்தமாக கார் வைத்துள்ளனர்.

ஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...

ஆனால் அடுத்த 2 தசாப்தங்களில், இந்தியாவில் பாசஞ்சர் கார் ஓனர்ஷிப் 775 சதவீதம் அதிகரிக்கும் என சர்வதேச ஆற்றல் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. அதாவது 2040ம் ஆண்டில், இந்தியாவில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 175 கார்கள் இருக்கும் என புரிந்து கொள்ளலாம்.

ஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...

இந்தியாவின் பயணிகள் மற்றும் கமர்ஷியல் வாகன செக்மெண்ட், கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றின் ஆரம்ப கட்ட தாக்கங்கள் இருந்தபோதிலும், அதன் வளர்ச்சி நன்றாக இருக்கிறது.

ஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான அறிக்கை இதனை உறுதி செய்கிறது. அப்படி இருந்தும் கூட, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை காட்டிலும், தற்போதைய நிலையில் இந்தியா இந்த விஷயத்தில் மிகவும் பின்தங்கி காணப்படுகிறது.

ஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...

அமெரிக்கா, இங்கிலாந்து மட்டுமல்லாது, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையிலும் இந்தியா பின்தங்கிதான் காணப்படுகிறது. நியூசிலாந்தில் ஒவ்வொரு ஆயிரம் பேரிலும், 774 பேர் சொந்தமாக கார் வைத்துள்ளனர்.

ஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...

எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த எண்ணிக்கையானது, ஆஸ்திரேலியாவில் 740 ஆகவும், கனடாவில் 662 ஆகவும், ஜப்பானில் 591 ஆகவும், சீனாவில் 164 ஆகவும் உள்ளது என தெரியவந்துள்ளது.

Most Read Articles
English summary
India Has Merely 22 Cars Per 1,000 Citizens: Niti Aayog Chief Executive Amitabh Kant. Read in Tamil
Story first published: Friday, December 14, 2018, 13:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X