இந்தியாவில் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்; இந்தாண்டு இறுதியில் விற்பனை

பெரிய கார் நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யவதில் சற்று மெதுவாக செயல்படும் நிலையில் சிறிய நிறுவனங்கள் தற்போது எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் களமிறங்கியுள்ளனர்.

By Balasubramanian

மும்பை மையமாக கொண்டு செயல்படும் ஸ்டோர்ம் என்ற கார் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காருக்கு தி ஸ்டோர்ம் ஆர்3 என பெயரிட்டுள்ளது. இந்த காரின் மாடலும் காரில் உள்ள அம்சங்களும் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

இந்தியாவில் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்; இந்தாண்டு இறுதியில் விற்பனை

இந்த கார் வழக்கமான கார்கள் இருக்கும் 4 வீல்கள் இல்லாமல் 3 வீல்கள் கொண்டது. முன்பக்கம் 2 வீல்களும், பின்பக்கம் ஒரு வீலும் இருக்கிறது. இந்த மாடல் இந்தியாவில் உள்ள டிராபிக்கை கருத்தில் கொண்டு எளிதாக அதில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்; இந்தாண்டு இறுதியில் விற்பனை

இந்த கார் பியூர், கரண்ட், போல்ட், என்ற மூன்று வேரியண்ட்களில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜில் வேரியண்ட்களை பொருத்து சுமார் 80-120 கி.மீ வரை பயணம் செய்யும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்; இந்தாண்டு இறுதியில் விற்பனை

இந்த காரின் பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியும் உள்ளது. அதாவது இந்த கார் 2 மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. இதன் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 3-6 மணி நேரம் வரை ஆகும்.

இந்தியாவில் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்; இந்தாண்டு இறுதியில் விற்பனை

இந்த காரில் ஏ.சி. வசதி, பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங், உள்ளிட்ட பெட்ரோல்/டீசல் காரில் உள்ள பெரும்பாலான வசதிகளை இந்த காரும் கொண்டுள்ளது. இதற்கு முன்று வீல்கள்மட்டும் இருப்பதால் குறுகிய ரோடுகள் மற்றும் திருப்பங்களில் எளிதாக பயணிக்கலாம்.

இந்தியாவில் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்; இந்தாண்டு இறுதியில் விற்பனை

மேலும் இந்த காரின் குறுகலான இடத்தில் காரை பார்க் செய்ய ரிமோட் அசிஸ்டட் பார்க்கிங் என்ற வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுகலா இடத்தில் டிரைவர்கள் தங்களின் மொபைல் போனை பயன்படுத்தி காரை பார்க் செய்ய முடியும்.

இந்தியாவில் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்; இந்தாண்டு இறுதியில் விற்பனை

தி ஸ்டோர்ம் ஆர் 3 ரக காரின் முக்கிய கவர்ச்சியே அதன் விலை தான். இதை ரூ 3 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை பயன்பாட்டை அதிகரிக்க எலெக்ட்ரிக் கார்களுக்கு அரசு சுமார் ரூ1 லட்சம்த்திற்கும் அதிகமாக மானியம் வழங்கி வருகிறது.

இந்தியாவில் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்; இந்தாண்டு இறுதியில் விற்பனை

இந்த காருக்கும் அந்த மானியம் கிடைத்தால், இந்த விலை ரூ 2 லட்சத்திற்கும் குறைவாக இந்த கார் விற்பனைக்கு வரும். இதனால் நடுத்தவர மக்கள் மத்தியில் இந்த காருக்கு அதிக மவுசு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் விற்பனைக்கு வந்தால் இது தான் இந்தியாவில் விலை குறைந்த எலெக்ட்ரிக் காராக இருக்கும்.

இந்தியாவில் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்; இந்தாண்டு இறுதியில் விற்பனை

மத்திய அரசு 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஓடும் அனைத்துக்கார்களையும், எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு இந்த கார் பெரும் பலனளிக்கும் என நாம் நம்பலாம்.

இந்தியாவில் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்; இந்தாண்டு இறுதியில் விற்பனை

இந்த ஆண்டு இறுதியில் இந்த கார் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் எவ்வளவு எண்ணிக்கையில் தயாரிப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

Source : Carandbike

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
English summary
India’s Most Affordable Electric Car With 120 Km Range And Starting Price Of Rs 3 Lakh Launched!. Read in Tamil
Story first published: Tuesday, April 10, 2018, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X