இந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனை.. யார் வேண்டுமானாலும் வாங்கலாம்..

இந்திய ராணுவம் பயன்படுத்திய மாருதி ஜிப்ஸி கார்கள் தன்னிடம் உள்ளதாகவும், தேவைப்படுபவர்கள் அணுகலாம் எனவும் பேஸ்புக்கில் ஒருவர் அறிவித்துள்ளார். அதன் விலை விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.

By Arun

இந்திய ராணுவம் பயன்படுத்திய மாருதி ஜிப்ஸி கார்கள் தன்னிடம் உள்ளதாகவும், தேவைப்படுபவர்கள் அணுகலாம் எனவும் பேஸ்புக்கில் ஒருவர் அறிவித்துள்ளார். அதன் விலை விபரங்களையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹெலிகாப்டர் என்ன பிரமாதம்.. இந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு..

உலகின் மிக பலம் வாய்ந்த ராணுவங்களுள் இந்திய ராணுவமும் ஒன்று. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்திய ராணுவத்தின் கிங் என்று மாருதி ஜிப்ஸி காரை குறிப்பிடலாம். ஆப் ரோடு பயணங்களுக்கு உகந்ததாக கருதப்படும் மாருதி ஜிப்ஸி பெட்ரோல் எஸ்யூவி கார், 1985ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டர் என்ன பிரமாதம்.. இந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு..

எனினும் கடந்த 1991ம் ஆண்டில் இருந்துதான் மாருதி ஜிப்ஸி கார்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. தற்போது மாருதி ஜிப்ஸி கார், தன் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் உள்ளது. அதன் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஹெலிகாப்டர் என்ன பிரமாதம்.. இந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு..

இந்திய ராணுவத்திடம் 30,000 மாருதி ஜிப்ஸி கார்கள் உள்ளன. தற்போது அந்த கார்களுக்கு பதிலாக, டாடா சபாரி ஸ்ட்ரோம் கார்களை இந்திய ராணுவம் பயன்படுத்த தொடங்கி விட்டது. இதனால் பழைய மாருதி ஜிப்ஸி கார்களை இந்திய ராணுவம் அப்புறப்படுத்தி வருகிறது.

ஹெலிகாப்டர் என்ன பிரமாதம்.. இந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு..

இந்த சூழலில் இந்திய ராணுவம் பயன்படுத்திய மாருதி ஜிப்ஸி கார்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதனை வாங்க விருப்பமுள்ளவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும், புனேவை சேர்ந்த நிலேஷ் ஜென்டே என்பவர் பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் என்ன பிரமாதம்.. இந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு..

இது தொடர்பான நிலேஷ் ஜென்டேவின் பதிவில், ''இந்திய ராணுவம் அகற்றிய 1999-2008 மாடல் ஜிப்ஸி கார்கள் என்னிடம் விற்பனைக்கு உள்ளன. பாடி லைன் நல்ல நிலையில் உள்ளது. அனைத்து பார்ட்களும் அப்படியே உள்ளன'' என கூறப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் என்ன பிரமாதம்.. இந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு..

மாருதி ஜிப்ஸி காரின் மாடல் மற்றும் கன்டிஷனை பொறுத்து, 1 லட்ச ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரையிலான விலையில், விற்பனை செய்யப்படும். அடுத்த 15 ஆண்டுகளுக்கான வேலிடிட்டி உடன், இதனை புதிய வாகனமாக ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம் எனவும் நிலேஷ் ஜென்டே தனது பதிவில் கூறியுள்ளார்.

இந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனை.. யார் வேண்டுமானாலும் வாங்கலாம்..

இதனிடையே இந்திய ராணுவம் பயன்படுத்திய மாருதி ஜிப்ஸி கார்களை வாங்க விருப்பமுள்ளவர்கள், 9421252599, 8208338220 என்ற எண்களிலும், கோகுல்நகர், கத்ராஜ்-கொந்தாவா ரோடு, புனே என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த போன் நம்பர் மற்றும் முகவரி, நிலேஷ் ஜென்டேவால் பதிவிடப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் என்ன பிரமாதம்.. இந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு..

மாருதி ஜிப்ஸி கார்களை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்தியாவில் உள்ள கார் ஆர்வலர்கள் பலரின் விருப்பமான காராக மாருதி ஜிப்ஸி திகழ்கிறது. குறிப்பாக ஆப் ரோடு பயணம் மேற்கொள்ள விரும்புவர்களின் முதல் சாய்ஸ் மாருதி ஜிப்ஸிதான்.

ஹெலிகாப்டர் என்ன பிரமாதம்.. இந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு..

இந்திய ராணுவத்தில் 1991ம் ஆண்டு தொடங்கிய மாருதி ஜிப்ஸி காரின் பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு மாருதி ஜிப்ஸி காருக்கு இந்திய ராணுவம் குட் பை சொல்லியுள்ளது. மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் கூட மாருதி ஜிப்ஸி மூலம் சுலபமாக பயணிக்கலாம்.

ஹெலிகாப்டர் என்ன பிரமாதம்.. இந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு..

அத்துடன் இதன் விலையும் கூட மலிவானதுதான். இதன் காரணமாக நாடு முழுவதும் மாருதி ஜிப்ஸி கார் புகழ்பெற்று விளங்கியது. எனினும் அதை விட மிகவும் நவீனமான மற்றும் முரட்டுத்தனமான கார்களை இந்திய ராணுவத்திற்கு வாங்க வேண்டும் என அதிகாரிகள் முடிவு செய்தனர்.

ஹெலிகாப்டர் என்ன பிரமாதம்.. இந்திய ராணுவத்தின் கார்கள் விற்பனைக்கு வந்தாச்சு..

இதில், தேர்வானதுதான் டாடா சபாரி ஸ்ட்ரோம். ராணுவத்திற்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள டாடா சபாரி ஸ்ட்ரோம் ஆர்மி எடிசன் காரில், பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Army used Maruti Gypsy for sale. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X