349 கிமீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி கார் பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்தியாவின் முதல் லம்போர்கினி அவென்டேடார் சூப்பர்வெலாஸ் ஜோட்டா சூப்பர் கார் பெங்களூரில் டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவென்டேடார் SVJ சூப்பர் காரானது மெட்டாலிக் நீல வண்ணத்தில் வந்துள்ளது.

இந்தியாவின் முதல் லம்போர்கினி அவென்டேடார் சூப்பர்வெலாஸ் ஜோட்டா சூப்பர் கார் பெங்களூரில் டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

349 கிமீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி கார் பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

லம்போர்கினி அவென்டேடார் காரின் சூப்பர்வெலாஸ் ஜோட்டா என்ற பெயரிலான லிமிடேட் எடிசன் மாடல் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவிற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்கள் ஒதுக்கப்பட்டு முன்பதிவு ஏற்கப்பட்டது.

349 கிமீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி கார் பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

அதில், முன்பதிவு செய்த பெங்களூரை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு இந்த லம்போர்கினி அவென்டேடார் சூப்பர்வெலாஸ் ஜோட்டா கார் (SVJ) கார் டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் லம்போர்கினி அவென்டேடார் SVJ சூப்பர் கார் என்பதுடன் உலக அளவில் மூன்றாவது காரை பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

Image Courtesy: Bren Garage

349 கிமீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி கார் பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கும் லம்போர்கினி அவென்டேடார் SVJ சூப்பர் காரானது மெட்டாலிக் நீல வண்ணத்தில் வந்துள்ளது.

349 கிமீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி கார் பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

கடந்த ஆகஸ்ட் மாதம் பெபுள் பீச் கான்கர்ஸ் டி எலிகன்ஸ் கார் கண்காட்சியில் லம்போர்கினி அவென்டேடார் SVJ கார் அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தமாக 600 கார்கள் மட்டுமே லிமிடேட் எடிசன் மாடலாக உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

349 கிமீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி கார் பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

லம்போர்கினி அவென்டேடார் S மற்றும் SV ஆகிய மாடல்களின் டிசைன் தாத்பரியங்கள் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த காரின் பானட்டில் கூடுதல் ஏர் வென்ட்டுகள் இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில் பெரிய ஸ்பிளிட்டர் இடம்பெற்றுள்ளது.

349 கிமீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி கார் பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த ஸ்பிளிட்டர் அமைப்பு முன்புறத்தில் மோதும் காற்றை லாவகமாக காரின் முன்னோக்கி செல்வதை பாதிக்காத வகையில் பிரித்து பின்னோக்கி அனுப்புகிறது. மேலும்,பிரேக் பிடிப்பதை பொறுத்து, இரண்டு திசைகளில் இந்த ஸ்பிளிட்டர் அமைப்பு காற்றை திசை திருப்பி செலுத்தும்.

349 கிமீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி கார் பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

பின்புறத்தில் சென்டர் ஆர்ம் என்ற தாங்கி அமைப்புடன் கூடிய பெரிய விங் அமைப்பு, டிஃபியூசர் மற்றும் இரட்டை குழல் சைலென்சர் அமைப்பு இடம்பெற்றுள்ளன. இதில், ஆக்டிவ் விங் அமைப்பு காரை அதிக நிலைத்தன்மையுடன் செலுத்துவதற்கு சிறப்பாக துணைபுரிகிறது.

349 கிமீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி கார் பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த காரில் இருக்கும் 6.5 லிட்டர் வி12 டர்போசார்ஜர் இல்லாமல் இயங்கும் சக்திவாய்ந்த எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 770 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அவென்டேடார் SV மாடலைவிட 20 பிஎச்பி கூடுதல் பவரை அளிக்க வல்லது.

349 கிமீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி கார் பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளிலும், 200 கிமீ வேகத்தை 8.6 வினாடிகளிலும் எட்டிவிடும். அதிகபட்சமாக 349 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

349 கிமீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி கார் பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த கார் 1,525 கிலோ எடை கொண்டது. இந்த காரில் லம்போர்கினி நிறுவனம் காப்புரிமை பெற்ற ஆக்டிவ் ஏரோடைனமிக்ஸ் சிஸ்டம் மற்றும் ஏரோ வெக்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட விசேஷ தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. ஏரோ விக்டரிங் மூலமாக, வளைவுகளில் திரும்பும்போது காரின் சக்கரங்களுக்கு சரியான டவுன்ஃபோர்ஸை பிரித்து கொடுப்பதால் அதிக நிலைத்தன்மையை வழங்கும்.

349 கிமீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி கார் பெங்களூர் வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த அரிய சூப்பர் காரின் விலை விபரங்கள் மற்றும் உரிமையாளர் பெயர் வெளியிடப்படவில்லை. இந்த மாத இறுதியில் விலை விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
India's First Lamborghini Aventador SVJ Lands In Bangalore
Story first published: Wednesday, December 19, 2018, 14:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X