ஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..!

By Balasubramanian

ஆடி கார் என்றாலே ஆடம்பரம் தான் அதற்கு முக்கிய காரணம் அதன் விலை, ஆடி கார் வைத்திருப்பவர்கள் பெரும் பணக்கார்களாக இருப்பதால் நம் எல்லோருக்கும் அதன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

ஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..!

ஆடி கார் என்பதை ஆடம்பர வாழ்க்கைக்கான ஒரு அடையாளமாகவே நாம் பார்க்கிறோம். இவ்வாறு மக்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ள ஆடி காரில் உள்ள சில ரகசியங்கள் குறித்து நம்மில் பலருக்கு தெரியாது. அதில் முக்கியமான 10 ரகசியங்களை நாம் கீழே காணலாம்.

ஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..!

பெயர் ரகசியம

நாம் ஆடி என உச்சரிக்கும் இந்த கார் நிறுவனத்தின் பெயரின் சரியான உச்சரிப்பு அவுடி. இந்த நிறுவனத்தை நிறுவியவர் ஆகஸ்ட் ஹார்ச் என்பது தான். இவரது பெயரின் ஹார்ச் என்பதற்கு ஜெர்மன் மொழியில் கவனித்தல் என்று அர்த்தம். அதே அர்த்ததிற்கு லத்தீன் மொழியில் அவுடி என்று பெயர் அந்த பெயரை தான் இந்த நிறுவனத்திற்கு சூட்டியுள்ளனர்.

ஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..!

லோகோ ரகசியம்

ஆடி காரின் லோகோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அதற்கு பலர் ஒலிம்பிக் லோகோவை போன்று விடிவமைத்துள்ளனர் என்று கூறுவர். அதற்கு அர்த்தம் இந்த நிறுவனத்தின் ஆரம்ப காலகட்டத்தில் 4 தனித்தனி நிறுவனங்களை ஒன்றினைத்து உருவாக்கப்பட்டது. இதை உணர்த்ததான் நான்கு வட்டம் இணைந்திருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.

ஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..!

இடபக்க டிரைவை அறிமுகப்படுத்திய ஆடி

ஆடி நிறுவனம் 1921ம் ஆண்டு கே டைப் காரை ரிலீஸ் செய்தது. இந்த கார் இடது பக்க டிரைவ் கொண்டதாக இருந்தது. இந்த மூலம் இடபக்க டிரைவ் கொண்ட காரை தயாரித்த முதல் ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை இந்த கார் பெற்றது.

ஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..!

இரண்டாம் உலக போரில் பங்கெடுப்பு

இரண்டாம் உலகப்போரின் போது கார் தயாரிப்பு ஆலைகள் எல்லாம் ராணுவத்திற்கான வாகனங்களை தயாரிக்கும் ஆலைகளாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து எதிர்நாட்டு படைகளின் குறி கார் தயாரிப்பு ஆலைகளாக இருந்தது. முக்கியமாக ரஷ்ய ஆடி நிறுவனத்தின் மீது குறியாக இருந்தது. இதன் விளைவாக ஆடி கார் தயாரிப்பு ஆலையில் குண்டுகள் விசப்பட்டன. இதையடுத்து அந்த கார் நிறுவனம் பலத்த சேதத்தை சந்தித்து. ஆனால் அதில் இருந்து விரைவாக மீண்டு வந்து தற்போது கார் தயாரிப்பில் சக்கபோடு போட்டு வருகிறது.

ஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..!

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்திற்கு சொந்தமானது.

1970ம் ஆண்டு ஆடி கார் நிறுவனத்தை ஃபோக்ஸ்வாகன் குழுமம் வாங்கியது. அதுவரை ஒரு ஆடி கார் கூடி அமெரிக்காவில் விற்பனையாகவில்லை. ஃபோக்ஸ்வாகன் நிறுவத்தின் கைக்கு வந்த பின்பு தான் அமெரிக்காவில் அடியெடுத்து வைத்தது ஆடி. ஆம் ஆடி காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்தான் தயரித்து வருகிறது. அது மட்டுமல்ல உங்களுக்கு மிகவும் தெரிந்த பென்ட்லி, புகாட்டி, லாம்போர்கினி, போர்ஸை, ஸ்கேனியா, ஸ்கோடா, ஆகிய கார்களையும் ஃபோக்ஸ்வாகன் குழுமம் தனக்கு சொந்தமாக்கி தயாரித்து வருகிறது.

ஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..!

முதல் க்ராஸ் டெஸ்ட் செய்த நிறுவனம்

புதிதாக ஒரு கார் தயாரிக்கப்படும் போது அந்த காரை கார் தயாரிப்பு நிறுவனங்களே பல்வேறு விதமான விபத்துக்களை செயற்கையாக சிக்க வைத்து எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. காருக்கும் இருப்பவருக்கு என்ன விதமான பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து தான் காரை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 1938ம் ஆண்டு ஆடி நிறுவனம் தானாக முன் வந்து முதல் முதலாக க்ரோஸ் டெஸ்டை செய்தது. தற்போது உலகில் முதல் க்ராஸ் டெஸ்ட் செய்த நிறுவனம் ஆடி தான்.

ஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..!

போர்ஸை தயாரித்த ஆர்.எஸ் மாடல்

ஆடி நிறுவனம் 1994 ஆண்டு முதல்முதலில் தயாரித்த ஆர்.எஸ் மாடல் கார் மிகவும் பிரபலம். அந்த மாடல் காரை ஆடி நிறுவனத்திற்கு போட்டி நிறுவனமான போர்ஸை நிறுவனம் தான் ஆடி நிறுவத்திற்காக தயாரித்து கொடுத்தது. ஆடியின் ஆர்எஸ் 2 மாடல் காரில் போர்ஸை நிறுவனத்தின் லோகோவும் இடம் பெற்றிருக்கும்.

ஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..!

லோகோ சர்ச்சை

ஆடி கார் நிறுவனத்தின் லோகோ சர்வதேச ஒலிம்பிக் பேட்டிக்கான லோகோ போல இருப்பதாக மக்கள் மத்தியில் அதிக அளவு பேச்சு இருந்தது. இந்நிலையில் 1995ம் ஆண்டு இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் வழக்கின் தீர்ப்பு ஆடி நிறுவனத்திற்கு சாதகமாக வந்தது.

ஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..!

ரேஸ்களில் கலந்து பிரபலமான ஆடி

1970ம் ஆண்டுகள் வரை ஆடி நிறுவனத்தின் கார்கள் பெரியஅளவில் பிரபலமாகவில்லை. அதன் பின் க்வாட்ரோ என்ற ஆல் வீல் டிரைவ் ரேஸ் காரை உருவாக்கியது. அந்த கார் ரேஸில் கலந்துகொண்ட பின்பு ஆடி கார் நிறுவனத்தில் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்து. ரேஸ் டிராக்கில் பல வெற்றிகளை வாங்கி குவித்தது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
10 Interesting Audi Facts For Car Enthusiasts.Read in Tamil
Story first published: Thursday, May 17, 2018, 19:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X