டாடா ஹாரியர் எஸ்யூவி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்!

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட்டின் 5 சீட்டர் மாடலுக்குத்தான் ஹாரியர் என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 7 சீட்டர் மாடல் வேறு பெயரில் வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் ஃபியட் 2.0 லிட்டர் டீசல் எஞ்சி

By Saravana Rajan

பெரும் ஆவலைத் தூண்டியுள்ள டாடா ஹாரியர் எஸ்யூவியின் பெயர் அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான பிரத்யேக இணையப் பக்கமும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யூவியை சந்தைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வரும் இவ்வேளையில், இந்த புதிய எஸ்யூவி மாடல் குறித்த முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்.

டாடா ஹாரியர் எஸ்யூவி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்!

வெவ்வேறு பெயர்கள்

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட்டின் அடிப்படையில் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என்று இரண்டு எஸ்யூவி மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இதில், முதலில் வர இருக்கும் 5 சீட்டர் மாடலுக்குத்தான் ஹாரியர் என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 7 சீட்டர் மாடல் வேறு பெயரில் வர இருக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்!

டாடா ஹாரியர் 5 சீட்டர் எஸ்யூவி மாடலானது 2019ம் ஆண்டு ஜனவரியில் ஷோரூம்களுக்கு வந்துவிடும் என்பது யூகமாக உள்ளது. இந்த ஹாரியர் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்ச்சர் ஆகிய மாடல்கலுக்கு போட்டியாக இருக்கும். 7 சீட்டர் மாடலானது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கும்.

டாடா ஹாரியர் எஸ்யூவி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்!

பிளாட்ஃபார்ம்

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி உருவாக்கப்பட்ட லேண்ட்ரோவர் எஸ்550 பிளாட்ஃபார்மின் அடிப்படையில்தான் இந்த புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் தரைதள அமைப்பு, ஸ்டீயரிங் சிஸ்டம் மற்றும் இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷன் அமைப்புடன் இந்த புதிய ஹாரியர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், விலை குறைப்புக்காக பல உதிரிபாகங்கள் மாற்றப்பட்டுள்ளன. லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் ஹாரியர் ஆகிய இரண்டு எஸ்யூவிகளுமே 2,741மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கும்.

டாடா ஹாரியர் எஸ்யூவி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்!

ஃபியட் எஞ்சின்

ஃபியட் க்றைஸ்லர் நிறுவனத்திடம் இருந்து 2.0 லிட்டர் டீசல் எஞ்சினை சப்ளை பெற்று டாடா ஹாரியர் எஸ்யூவியில் பொருத்த இருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்த எஞ்சின் 140 எச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். 7 சீட்டர் மாடலிலும் இதே எஞ்சின்தான் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆனால், அந்த மாடலில் 170 எச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும்.

டாடா ஹாரியர் எஸ்யூவி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் இசட்எஃப் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக உருவாக்கி இருக்கும் 4 வீல் டிரைவ் சிஸ்டமும், டிரைவிங் மோடு ஆப்ஷன்களும் இடம்பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

டாடா ஹாரியர் எஸ்யூவி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்!

டிசைன்

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் மற்றும் ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது, புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்பது கணிப்பாக இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கிிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்ட ஏராளமான நவீன அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்!

கேபின்

போட்டியாளர்களைவிட அதிக இடவசதி, ஏராளமான தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை வண்ண டேஷ்போர்டு, தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மெமரி வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற உயர் வகை கார்களுக்கான பல வசதிகளை இந்த கார் அளிக்கும்.

டாடா ஹாரியர் எஸ்யூவி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இந்த கார் போட்டியாளர்களைவிட குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என்பதும் யூகமாக உள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா மட்டுமின்றி, ஜீப் காம்பஸ் மார்க்கெட் வரை எட்டிப்பிடிக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் விலையில் வர இருக்கிறது.

Most Read Articles
English summary
Interesting Things About Tata Harrier SUV.
Story first published: Friday, July 13, 2018, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X