இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க இசுஸு திட்டம்!

அண்மையில் எம்யூ- எக்ஸ் எஸ்யூவியின் இடைசீர்த்திருத்த மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது இசுஸு நிறுவனம். இந்த நிலையில், அதிக வர்த்தக வாய்ப்புள்ளதாக கருதப்படும் காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்

இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை இசுஸு பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க இசுஸு திட்டம்!

அண்மையில் எம்யூ- எக்ஸ் எஸ்யூவியின் இடைசீர்த்திருத்த மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது இசுஸு நிறுவனம். இந்த நிலையில், அதிக வர்த்தக வாய்ப்புள்ளதாக கருதப்படும் காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய மாடலை அறிமுகம் செய்வது குறித்த யோசனை இசுஸு நிறுவனத்திடம் உள்ளது.

இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க இசுஸு திட்டம்!

உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இசுஸு தயாரித்து வருகிறது. இந்த எஸ்யூவியை இந்தியாவிலும் களமிறக்குவதற்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து இசுஸு நிறுவனத்தின் இந்தியப் பிரிவு பரிசீலித்து வருவதாக மணிகன்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க இசுஸு திட்டம்!

போட்டியாளர்களைவிட அதிக சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி பெற்றிருக்கும். எனினும், இதுவரை உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என இசுஸு இந்தியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்கனர் கென் தகஷிமா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க இசுஸு திட்டம்!

தற்போது இந்தியாவில் இசுஸு நிறுவனம் எம்யூ- எக்ஸ் எஸ்யூவி மாடலையும், டி- மேக்ஸ் பிக்கப் டிரக்கில் மூன்று விதமான மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில், புதிய காம்பேக்ட் எஸ்யூவி தனது எதிர்கால விற்பனை வளர்ச்சிக்கு நிச்சயம் அவசியமானதாக கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க இசுஸு திட்டம்!

இசுஸு தயாரித்து வரும் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் இந்தியா போன்ற வளரும் சந்தைகளுக்கான அம்சங்களை பெற்றிருக்கும். குறிப்பாக, ஹைப்ரிட் எஞ்சின் ஆப்ஷன்களிலும் வரும் என்பது தற்போது கிடைத்திருக்கும் தகவல். மேலும், டிசைனில் முற்றிலும் புதிய மாடலாக இந்தியர்களை கவரும்.

இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க இசுஸு திட்டம்!

ஆந்திராவில் உள்ள இசுஸு நிறுவனத்தின் ஆலையில் ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனை பெற்றிருக்கிறது. தாய்லாந்தில் உள்ள ஆலையிலிருந்து எம்யூ- எக்ஸ் எஸ்யூவிக்கான முக்கிய உதிரிபாகங்கள் தருவிக்கப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க இசுஸு திட்டம்!

எதிர்காலத்தில் இங்கேயே உதிரிபாகங்களை பெற்று உற்பத்தி செய்வதற்கான திட்டமும் உள்ளது. இதனால், புதிய காம்பேக்ட் எஸ்யூவியை ஆந்திர ஆலையில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் இசுஸு வசம் அதிகம் உள்ளன.

இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க இசுஸு திட்டம்!

மேலும், இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி இருந்தால் மட்டுமே வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இசுஸு நிறுவனத்தால் பதிவு செய்ய முடியும். எனவே, இசுஸு இந்தியப் பிரிவு நிச்சயம் ஜப்பான் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #இசுஸு
English summary
According to reports, Japanese uitlity vehicle maker Isuzu is considering to introduce a compact SUV in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X