ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் காருக்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பம்!

உலகின் அழகான கார் மாடல்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் ஜாகுவார் எஃப்-டைப் காரின் அதிசெயல்திரன் மிக்க எஸ்விஆர் மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ஜாகுவார் நிறுவனத்தின் ஸ்பெஷல் வெஹிக்கிள்

By Saravana Rajan

உலகின் அழகான கார் மாடல்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் ஜாகுவார் எஃப்-டைப் காரின் அதிசெயல்திரன் மிக்க எஸ்விஆர் மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் காணலாம்.

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் காருக்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பம்!

ஜாகுவார் நிறுவனத்தின் ஸ்பெஷல் வெஹிக்கிள் ஆபரேஷன்(SVR) பிரிவின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட எஃப்-டைப் எஸ்விஆர் மாடலுக்கு இந்தியாவில் ரூ.2.65 கோடி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் காருக்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பம்!

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடலில் இலகு எடை டைட்டானியம் மற்றும் இன்கோனல் புகைப்போக்கி அமைப்பு மற்றும் ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள் போன்றவற்றுடன் எடை வெகுவாக குறைக்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் சிஸ்டத்தையும் மேம்படுத்தி இருக்கின்றனர். கையாளுமையும் சிறப்பாக இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் காருக்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பம்!

புதிய ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடலில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 567 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இசட்எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் காருக்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பம்!

இந்த புதிய சூப்பர் கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 322 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. கூபே மாடலைவிட கன்வெர்ட்டிபிள் ரக மாடல் சற்று கூடுதல் எடை கொண்டதாக இருக்கிறது. இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 3.7 வினாடிகளில் எட்டிவிடும். ஆனால், டாப் ஸ்பீடு சற்று குறைவாக இருக்கிறது. இந்த மாடல் மணிக்கு 314 கிமீ வேகம் வரை செல்லும்.

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் காருக்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பம்!

இந்த காரில் பைரெல்லி பி- ஸீரோ டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த டயர்கள் சாதாரண எஃப்-டைப் காரில் பொருத்தப்பட்டு இருக்கும் டயர்களைவிட 10 மிமீ அகலம் கூடுதலானது. எஃப்-டைப் கார் ஸ்போர்ட்ஸ் கார் ரகத்திலும், எஃப்-டைப் எஸ்விஆர் மாடல் சூப்பர் கார் ரகத்திலும் குறிப்பிடப்படுகிறது.

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் காருக்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பம்!

புதிய ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் கார் போர்ஷே 911 டர்போ எஸ், ஆடி ஆர்8 வி10 பிளஸ், நிஸான் ஜிடி-ஆர் மற்றும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி-ஆர் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar F-Type Bookings Open In India: British luxury car manufacturer, Jaguar has started accepting bookings for their flagship supercar, the F-Type SVR. The 2018 F-Type SVR is priced at Rs 2.65 crore ex-showroom (India). The car is available in both coupe and convertible formats.
Story first published: Saturday, June 16, 2018, 18:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X