ரூ.1.20 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் ரூ.1.20 லட்சம் கோடியை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

By Saravana Rajan

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் ரூ.1.20 லட்சம் கோடியை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.1.20 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

உலகின் நீண்ட பாரம்பரியம் கொண்ட ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் தயாரிப்பு நிறுவனங்கள் உலக பொருளாதார சரிவின்போது நிதி நெருக்கடியில் சிக்கின. இந்த நிலையி்ல், அந்த இரு நிறுவனங்களையும், டாடா மோட்டார்ஸ் 2008ம் ஆண்டில் கையகப்படுத்தியது.

ரூ.1.20 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

கையகப்படுத்தியது முதல் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தில் டாடா மோட்டார்ஸ் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. இதனால், அந்த நிறுவனங்களின் வர்த்தகம் மிகச் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது.

ரூ.1.20 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

இந்த நிலையில், நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சியையும், வர்த்தகத்தையும் மனதில் வைத்து அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1.20 லட்சம் கோடியை முதலீடு செய்ய இருப்பதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் துணையுடன் ஆண்டுக்கு தலா ரூ.40,519 கோடி என்ற அளவில் இந்த முதலீடு செய்யப்பட இருப்பதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது.

ரூ.1.20 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்களின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது. புதிய மின்சார கார்கள் மற்றும் புதிய பெட்ரோல், டீசல் கார் மாடல்கள் தயாரிப்புக்கு இந்தத முதலீடு பயன்படுத்தப்படும்.

ரூ.1.20 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

உலக அளவில் இது ஒரு மிகப்பெரிய முதலீட்டு திட்டமாகவே பார்க்கப்படுகிறது. உலக அளவில் 99 புதிய மாடல்களை களமிறக்குவதற்கு ஜாகுவார் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவில் மட்டும் 10 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்யப்படும் என்று ஜாகுவார் லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது.

ரூ.1.20 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

புத்தம் புதிய மாடல்கள், பழைய மாடல்களை மேம்படுத்துவதற்குமாக இந்த முதலீட்டு நிதி செல்ல இருக்கிறது. புதிய சந்தைகளில் அடியெடுத்து வைப்பதற்கும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த உலகின் பாரம்பரியம் மிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் டாடா கைகளின் வந்தபிறகு புதிய உத்வேகத்துடன் பீடு நடைபோட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Jaguar Land Rover to invest Rs. 1.2 lakh crore in 3 years
Story first published: Tuesday, June 26, 2018, 17:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X