சென்னையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு!

By Saravana Rajan

சென்னையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய சொகுசு கார் ஷோரூம் திறக்கப்பட்டு இருக்கிறது. ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான விஎஸ்டி நிறுவனம் இந்த ஷோரூமை விஎஸ்டி கிராண்டர் என்ற பெயரில் திறந்துள்ளது.

சென்னையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு!

பூந்தமல்லியில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூமை ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோஹித் சூரி மற்றும் விஎஸ்டி கிராண்டர் டீலரின் இயக்குனர் வி.டி.ரவீந்திரா ஆகியோர் திறந்து வைத்தனர்.

சென்னையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு!

விற்பனை, சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை அனைத்து சேவைகளையும் வழங்கும் வகையில் இந்த புதிய ஷோரூம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஷோரூம் 2,318 மீட்டர் சதுர பரப்பில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு!

இந்த ஷோரூமில் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் சொகுசு கார்களையும் முன்பதிவு செய்து வாங்கலாம். வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான அனுபவத்தை வழங்கும் விதத்தில், அனைத்து வசதிகளுடன் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு!

ஜாகுவார் எக்ஸ்இ, எக்ஸ்எஃப், எஃப் பேஸ், எக்ஸ்ஜே, எஃப் டைப் உள்ளிட்ட ஜாகுவார் சொகுசு கார்களும், லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், ரேஞ்ச்ரோவர் எவோக், புதிய டிஸ்கவரி, புதிய ரேஞ்ச்ரோவர் வெலர், ரேஞ்ச்ரோவர் ஆகிய சொகுசு கார் மாடல்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன.

சென்னையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு!

இந்த ஷோரூமுடன் இணைந்த சர்வீஸ் மையத்தில் ஒரே நேரத்தில் 17 கார்களை பழுதுபார்க்கும் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. பயிற்சி பெற்ற அனுபமிக்க பணியாளர்களை கொண்டு இங்கு கார்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகள் செய்யப்படுகிறது.

சென்னையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு!

வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்கும் விதத்தில், இந்த புதிய ஷோரூமை திறந்துள்ளதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோஹித் சூரி தெரிவித்தார். இந்த நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட ஷோரூம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் என விஎஸ்டி மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஜேஎல்ஆர் #jlr
English summary
JLR Opens New Car Showroom in Chennai.
Story first published: Friday, July 13, 2018, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X