கியா ஆப்டிமா கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

கியா ஆப்டிமா செடான் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.

கியா ஆப்டிமா கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்குவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. டீலர்களை துவங்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருவதுடன், புதிய ஆலையை கட்டமைக்கவும் முடிவு செய்து பணிகளில் ஈடுபட்டுள்ளது.

கியா ஆப்டிமா கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கார் மாடல்களையும் தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், தற்போது கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆப்டிமா செடான் கார் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.

கியா ஆப்டிமா கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

பொதுவாக அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஆனால், முக்காடு எதுவும் போடாத நிலையில், இந்த கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கியா ஆப்டிமா கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

இந்த காரில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முத்தாய்ப்பான க்ரில் அமைப்பு, எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், வலிமையான பம்பர்கள் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மிகவும் பிரிமியம் செடான் கார் மாடலாக வடிவமைப்பில் மிளிர்கிறது.

கியா ஆப்டிமா கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

வெளிப்புறத்தில் மட்டுமில்லாமல், உட்புறத்திலும் மிக பிரிமியம் அம்சங்களை பெற்றிருக்கிறது. அகலமான தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், டிஜிட்டல் மற்றும் அனலாக் மீட்டர்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் கார்டன் பிரிமியம் ஆடியோ சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

கியா ஆப்டிமா கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

வெளிநாடுகளில் மூன்று விதமான பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 1.6 லிட்டர் டீல் எஞ்சின் ஆப்ஷனும் எதிர்பார்க்கலாம். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும்.

கியா ஆப்டிமா கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த கார் அதற்கு மேலான ரகத்தில் நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருப்பது இந்த காரின் சிறப்பம்சங்கள் மூலமாக தெரிய வருகிறது.

Source: Carwale

Most Read Articles
English summary
Kia Optima sedan spied in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X