விதி மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க புதிய திட்டம்.. ஜவுளிக்கடை அண்ணாச்சியாக மாறிய போலீசார்

போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்க, மிகவும் நூதனமான புதிய திட்டம் ஒன்றை போலீசார் அமல்படுத்தியுள்ளனர்.

போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்க, மிகவும் நூதனமான புதிய திட்டம் ஒன்றை போலீசார் அமல்படுத்தியுள்ளனர். இப்படி ஒரு திட்டத்தை அனேகமாக இதற்கு முன் யாரும் நிச்சயமாக கேள்விபட்டிருக்கவே முடியாது.

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

உலக அளவில் சாலை விபத்துக்களின் காரணமாக மிக அதிகமான உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்திய சாலைகளில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சராசரியாக 1.50 லட்சம் பேர் தங்கள் உயிரை பரிதாபமாக இழக்கின்றனர்.

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்கள்தான் சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணம். இதுகுறித்து போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலானோர் விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை.

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதங்களை விதிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது (இதைப்பயன்படுத்தி கொண்டு ஒரு சில போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர் என்பது தனிக்கதை).

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

இதன்படி போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அத்துடன் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமும், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

ஆனால் ஒரு சில வாகன ஓட்டிகள், அதனையும் செலுத்தாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்துள்ளனர். அப்படி நிலுவையில் உள்ள அபராதங்களை வசூலிக்க, தற்போது புதிய யுக்தி ஒன்றை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

தள்ளுபடி. ஆம், தள்ளுபடிதான் அந்த புதிய யுக்தி. 'One Time Traffic Fine Settlement Scheme' என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக நிலுவையில் உள்ள அபராதங்களை தள்ளுபடி விலையில் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

போலீசார் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. 2018ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் தள்ளுபடி பெறுவதற்கான தகுதி உடையவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

இந்த சூழலில் இந்த திட்டத்தின் முதற்கட்டம் கடந்த டிசம்பர் 1ம் தேதியே தொடங்கப்பட்டு விட்டது. 2019ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வரை முதற்கட்ட திட்டம் அமலில் இருக்கும். இந்த கால கட்டத்தில், நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்துவோருக்கு 65 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

அதாவது நிலுவையில் உள்ள மொத்த அபராத தொகையில் 35 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும். எஞ்சிய 65 சதவீத அபராத தொகைக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த 65 சதவீத தள்ளுபடியை பெற விரும்பினால், நிலுவையில் உள்ள அபராதங்களை டிசம்பர் 1-ஜனவரி 14க்குள் செலுத்த வேண்டும்.

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

இதன்பின் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம், 2019ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அமலுக்கு வருகிறது. 2019ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி வரை இரண்டாம் கட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில், நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்துவோருக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

அதாவது நிலுவையில் உள்ள மொத்த அபராத தொகையில் 50 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும். எஞ்சிய 50 சதவீத தொகையை செலுத்த வேண்டியது இல்லை. முதல் கட்டத்தில் செலுத்தினால் 65 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் செலுத்தினால் 50 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

கொல்கத்தா போலீசார்தான் இப்படி ஒரு வித்தியாசமான திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். கொல்கத்தா போலீஸ் மற்றும் கொல்கத்தா டிராபிக் போலீஸின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் ஆன்லைன் வாயிலாக அபராத தொகையை செலுத்தலாம்.

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

இதுதவிர அபராத தொகையை வசூலிப்பதற்கு என கொல்கத்தா நகரம் முழுவதும் சுமார் 25 கவுன்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கால கட்டத்திற்கு பிறகும், அபராத தொகையை செலுத்தாமல் உள்ளவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என பைனான்ஸியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அபராதங்களை இப்படியும் வசூலிக்கலாம்... ஜவுளிக்கடைக்காரர் ரேஞ்சுக்கு கீழே இறங்கிய போலீசார்...

வாகனத்தின் ஓனர்ஷிப்பை மாற்றம் செய்யவும், இன்சூரன்ஸை புதுப்பிக்கவும், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் (Pollution Under Control-PUC) பெறவும், எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்ற என்ஓசி (No Case Pending) பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: Kolkata Police

Most Read Articles
English summary
Kolkata Police Introduces ‘One Time Traffic Fine Settlement Scheme’. Read in Tamil
Story first published: Wednesday, December 5, 2018, 9:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X