காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலம்... சொந்தமாக்கி விட கடும் போட்டி...

காஷ்மீரின் கடைசி மன்னரும், காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தவருமான ஹரி சிங்கின் கார் ஏலத்திற்கு வருகிறது. அதனை சொந்தமாக்கி விட கடும் போட்டி நிலவுகிறது.

காஷ்மீரின் கடைசி மன்னரும், காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தவருமான ஹரி சிங்கின் கார் ஏலத்திற்கு வருகிறது. அதனை சொந்தமாக்கி விட கடும் போட்டி நிலவுகிறது.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பின்னர், கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று, ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாக உருவெடுத்தது இந்தியா. ஆனால் அதே நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும் நடைபெற்றது.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

இதனால் நாடு முழுவதும் இருந்த சமஸ்தானங்கள் எல்லாம் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டன. இந்தியாவுடன் இணைவதா? அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா? என்பது தொடர்பாக சரியான முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் சமஸ்தானங்களுக்கு இருந்தது.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளுடனும் இணையாமல் தனி நாடாக இருக்க வேண்டும் என அப்போதைய காஷ்மீர் மன்னர் ஹரி சிங் முடிவு செய்தார். காஷ்மீரை இறையாண்மை மிக்க தனி நாடாக ஆள வேண்டும் என்பதே மன்னர் ஹரி சிங்கின் விருப்பம்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

ஆனால் பாகிஸ்தான் இதனை கொஞ்சம் கூட விரும்பவில்லை. காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கினர். அத்துடன் காஷ்மீரில் வாழும் பழங்குடி மக்களுக்கு போர்க்கருவிகளை வழங்கி மன்னருக்கு எதிராக போரிட செய்தனர்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

இதனால் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் பெரும் அதிர்ச்சியடைந்தார். ஸ்ரீநகரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் முன்னேறி கொண்டிருந்த சூழலில், உடனடியாக இந்தியாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார் காஷ்மீர் மன்னர் ஹரி சிங்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

பாகிஸ்தான் ராணுவத்தை சமாளிக்க உதவி செய்யும்படி கேட்டு கொண்ட அவர், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க உடனடியாக ஒப்பந்தமும் செய்து கொண்டார். எனவே இந்திய ராணுவம் அதிரடியாக காஷ்மீருக்கு விரைந்து சென்றது.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

இதனால் காஷ்மீரை முழுவதுமாக ஆக்கிரமித்து விட வேண்டும் என்று துடியாய் துடித்து கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துடன் மன்னர் ஹரி சிங் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

எனவே காஷ்மீரின் கடைசி மன்னராக ஹரி சிங் கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வாக்ஸ்ஹால் (Vauxhall) என்ற முன்னணி நிறுவனத்தின் வின்டேஜ் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை பயன்படுத்தி வந்தார். 1924ம் ஆண்டு மாடல் காரான இதன் பெயர் வாக்ஸ்ஹால் 30-98 (Vauxhall 30-98) என்பதாகும்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

காஷ்மீர் கடைசி மன்னரான ஹரி சிங் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த அரிய கார் வரும் டிசம்பர் 2ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் நடைபெறுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு இந்த கார் ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

உலகின் மிகவும் பழமையான மற்றும் பெரிய ஏல நிறுவனங்களில் ஒன்றான பான்ஹாம்ஸ் (Bonhams) என்ற நிறுவனம்தான், காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் காரை ஏலம் விடுகிறது. 1793ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தது.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

அரிதான கார்கள், இரு சக்கர வாகனங்கள், நகைகள், கலை பொருட்கள் என பழமையான பொருட்களை பான்ஹாம்ஸ் நிறுவனம் ஏலம் விட்டு வருகிறது. இதன் முதன்மையான விற்பனை மையங்கள் லண்டன், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாங்காங் உள்ளிட்ட நகரங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

இதனிடையே காஷ்மீர் மன்னர் ஹரி சிங் வசம் இந்த கார் இருந்தபோது தனது விருப்பத்திற்கு ஏற்ப காரில் பல்வேறு மாறுதல்களை அவர் செய்து வைத்திருந்தார். அரிதிலும் அரிதான இந்த காரை ஏலம் எடுக்க இந்தியர்களிடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

ஏனெனில் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக ஹரி சிங் பார்க்கப்படுகிறார். காஷ்மீர் மன்னராக இருந்த காலகட்டத்தில் ஹரி சிங் செய்த சாதனைகளும் ஏராளம்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலத்திற்கு வருகிறது...

அந்த கால கட்டத்திலேயே கட்டாய ஆரம்ப கல்வியை மன்னர் ஹரி சிங் நடைமுறைப்படுத்தினார். குழந்தை திருமண நடைமுறையை அழித்தொழித்தார். தாழ்த்தப்பட்ட சாதியினர் உள்பட அனைவரும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லலாம் என்றும் அறிவித்தார். இப்படி பல சாதனைகளை படைத்த அவர் 1961ம் ஆண்டு மரணமடைந்தார்.

English summary
Last Maharaja Of Kashmir Hari Singh's Rare Vintage Car On Auction In London. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X