'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

மாருதி சுஸூகி நிறுவனத்தின் பலினோ கார், விற்பனையில் இமாலய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஹுண்டாய் நிறுவனத்தை ஓரங்கட்டி, மாருதி சுஸூகி படைத்த அந்த புதிய சாதனை குறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்

By Arun

மாருதி சுஸூகி நிறுவனத்தின் பலினோ கார், விற்பனையில் இமாலய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஹுண்டாய் நிறுவனத்தை ஓரங்கட்டி, மாருதி சுஸூகி படைத்த அந்த புதிய சாதனை குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

மாருதி சுஸூகி நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக மாடலான பலினோ, கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. லான்ச் செய்யப்பட்டது முதலே மாருதி சுஸூகி பலினோ கார், விற்பனையில் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

தற்போது பலினோ கார் 4 லட்சம் வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட வெறும் 3 ஆண்டுகளுக்கு உள்ளாக, 4 லட்சம் பலினோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது மாருதி சுஸூகி நிறுவனம்.

'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

இதன்மூலமாக மிக குறுகிய காலத்தில், அதிக அளவில் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் கார் என்ற சாதனையை, மாருதி சுஸூகி நிறுவனத்திற்கு பெற்று தந்துள்ளது பலினோ. இந்தியாவில் தயாரிக்கப்படும் பலினோ கார், உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

தற்போதை நிலையில் இந்தியாவில், 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் என மொத்தம் 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் மாருதி சுஸூகி பலினோ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

எனினும் ஐரோப்பாவில், 1.2 லிட்டர் டியூயல் ஜெட் இன்ஜின் ஆப்ஷனுடன் பலினோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு வருமா? வராதா? என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.

'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் லான்ச் செய்யப்பட்டு விட்ட மாருதி சுஸூகி பலினோ கார், கீ லெஸ் என்ட்ரி, க்ரோம் ப்ளேட்டட் டோர் ஹேண்டில்கள், தனித்துவமான க்ரோம் பார் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

அதுமட்டுமல்லாமல் 16 இன்ச் அலாய் வீல்கள், ரியரில் பார்க்கிங் கேமரா, ரூஃப் ஸ்பாய்லர் உள்ளிட்ட வசதிகளையும் மாருதி சுஸூகி பலினோ கார் பெற்றுள்ளது. இத்துடன் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

இபிடி உடன் (Electronic Brakeforce Distribution) ஏபிஎஸ் (Anti-lock Braking System) பிரேக் வசதி மாருதி சுஸூகி பலினோ காரில் வழங்கப்பட்டுள்ளது. முன்பகுதியில் 2 ஏர் பேக்குகளும் (டிரைவர், பாசஞ்சர்) கொடுக்கப்பட்டுள்ளன.

'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

பகல் நேரத்திலும் இயங்கும் எல்இடி விளக்குகள், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்கள், 7 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என மாருதி சுஸூகி பலினோ காரில் பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

பலினோ கார் இந்தியாவில் 5.47 லட்சம் முதல் 8.64 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம், டெல்லி) விற்பனை செய்யப்படுகிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட்டான மாருதி பலினோ ஆல்பா 1.3 கார்தான் 8.64 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகிறது.

'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

மாருதி சுஸூகி பலினோ கார், 3,995 எம்எம் நீளமும், 1,510 எம்எம் உயரமும், 1,745 எம்எம் அகலமும் உடையது. 2,520 எம்எம் என்ற நீண்ட வீல் பேஸை, பலினோ கார் பெற்றுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 180 கிலோ மீட்டர்கள்.

'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 12.36 வினாடிகளில், மாருதி சுஸூகி பலினோ கார் எட்டி விடும். ஒரு லிட்டருக்கு 21 கிலோ மீட்டர்கள் மைலேஜ் கிடைக்கும் என மாருதி சுஸூகி நிறுவனம் கூறியுள்ளது.

'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை!

ஹுண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார்தான், மாருதி சுஸூகி பலினோ காரின் மிக முக்கியமான போட்டியாளர். எனினும் எலைட் ஐ20 காரை காட்டிலும், பலினோதான் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Made in india maruti suzuki baleno sales cross 4 lakh units. Read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X