முதல்வர் காருக்கு ரூ 13,000 அபராதம்; 8 மாதங்களில் 13 விதிமீறல் நடந்தது அம்பலம்

By Balasubramanian

ஷகீல் அகமது என்ற சமூக ஆர்வலர் மஹாராஷ்டிரா மாநில முதல்வரின் காரில் விதிமுறை மீறலில் ஈடுபட்டாதா என தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேள்வி ஒன்றைய எழுப்பியிருந்தார். அதற்கு கிடைத்த பதிலில் முதல்வரின் காருக்கு ரூ 13,000 ஆபராதம் விதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

முதல்வர் காருக்கு ரூ13,000 அபராதம்; 8 மாதங்களில் 13 விதிமீறில் நடந்தது அம்பலம்

மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டு புல்லட் ப்ரூப் டாடா சபாரி காரை பயன்படுத்துகிறார். இந்த காரில் பல பாதுகாப்பு வசதிகளும் பல தற்காப்பு ஆயுதங்களும் உள்ளன. பொதுவாக மாநில முதல்வர்கள் கார்களில் இது போன்ற அம்சங்கள் நிறைந்திருக்கும். அது போலவே மஹாராஷ்டிரா முதல்வரின் காரிலும் அமைந்துள்ளது.

முதல்வர் காருக்கு ரூ13,000 அபராதம்; 8 மாதங்களில் 13 விதிமீறில் நடந்தது அம்பலம்

இந்த கார் பந்த்ரா பகுதியில் பல்வேறு நேரங்களில் அதிக வேகத்தில் சென்று விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பொருத்தப்பட்ட ஆட்டோமெட்டிக் கேமரா மூலம் அவரது கார் படம் பிடிக்கப்பட்டு அவரது கார் எண்ணிற்கு இ-செல்லான் மூலம் அபாரதம் விதிக்கப்பட்டிருந்தது.

முதல்வர் காருக்கு ரூ13,000 அபராதம்; 8 மாதங்களில் 13 விதிமீறில் நடந்தது அம்பலம்

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்த ஆகஸ்ட் மாதம் வரை அவர் பயன்படுத்தும் ஒரு கார் 5 முறையும், ஒரு கார் 8 முறையும் விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளது. ஒரு முறைக்கு ரூ 1,000 விதம் மொத்தம் அவர் காருக்கு இதுவரை ரூ 13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் காருக்கு ரூ13,000 அபராதம்; 8 மாதங்களில் 13 விதிமீறில் நடந்தது அம்பலம்

இந்த அபராத தொகையை இதுவரை முதல்வரோ அல்லது அம்மாநில அரசோ செலுத்தவில்லை. அதற்கு அம்மாநில டிராபிக் போலீஸ் சார்பில் விளக்கம் ஓன்று அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் காருக்கு ரூ13,000 அபராதம்; 8 மாதங்களில் 13 விதிமீறில் நடந்தது அம்பலம்

முதல்வர் செல்லும் கான்வாயில் செல்லும் கார்களுக்கு வேக கட்டுப்பாடு லிமிட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேமராவில் குறிப்பிட்ட கார்களை மட்டும் அபாராத தொகையில் இருந்து விலக்கு அளிக்கும் ஆப்ஷன் அதில் இல்லை. அதனால் நாங்கள் அந்த செல்லானை மேனுவலாக கேன்சல் செய்துள்ளோம் என விளக்கம் அளித்தனர்.

முதல்வர் காருக்கு ரூ13,000 அபராதம்; 8 மாதங்களில் 13 விதிமீறில் நடந்தது அம்பலம்

பந்த்ரா பகுதியில் உள்ள வொர்லி ஷீலிங்க் பகுதியில் அதிக வேகம் காராணமாக அதிகமாக விபத்து நடந்து வந்தது. இதை கட்டுப்படுத்த போலீசார் அந்த பகுதியில் 40 ஹைடெக் கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

முதல்வர் காருக்கு ரூ13,000 அபராதம்; 8 மாதங்களில் 13 விதிமீறில் நடந்தது அம்பலம்

அந்த கேமராக்கள் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டுபிடித்து அந்த காரின் நம்பரை எடுத்து அந்த நம்பர் காருக்கு இ-செல்லான் மூலம் தானாவே அபராதம் விதிக்கும் இதன் மூலம் போலீசார் அப்பகுதியில் பொதுமக்கள் வாகனங்களில் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த முடியும் என நம்புகின்றனர்.

முதல்வர் காருக்கு ரூ13,000 அபராதம்; 8 மாதங்களில் 13 விதிமீறில் நடந்தது அம்பலம்

இந்த ரோட்டில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டது முதல் மும்பையில் பதிவு செய்யப்படும் அதிக வேகமாக வானகத்தில் சென்றதற்கான வழக்குகளில் பாதி இந்த கேமராக்கள் மூலம் நடத்தப்படுவதேயாகும். இந்த ரோட்டில் பைக்குகளுக்க 60 கீ.மீ. வேகமும், கார்களுக்கு 80 கி.மீ. வேகமாகவும் அதிகபட்ச வேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

01. டாடா மோட்டார்ஸை தலைநிமிர செய்த நெக்ஸான் எஸ்யூவியின் புதிய சாதனை!!

02. மஹிந்திரா மராஸ்ஸோ அறிமுக தேதி விபரம் வெளியானது!!

03. ஸ்கூட்டரில் சிறுவர்கள் வீலிங் செய்தால் இது தான் தண்டனை; பெங்களுரூவில் போலீஸ் அதிரடி

04. ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

05. இங்கிலாந்தை அடுத்து வங்கதேசத்திலும் வெற்றி.. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தமிழகத்திற்கு கவுரவம்..

Most Read Articles

English summary
Maharashtra CM Devendra Fadnavis’ Tata Safari SUVs FINED 13,000 rupees. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X