ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

ஒரு கிலோ மீட்டருக்கு 70 பைசா என்ற வீதத்தில், வெறும் 70 ஆயிரம் ரூபாய் செலவில் 1 லட்சம் கிலோ மீட்டர்கள் தொலைவை காரில் கடந்து, இந்தியர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

ஒரு கிலோ மீட்டருக்கு 70 பைசா என்ற வீதத்தில், வெறும் 70 ஆயிரம் ரூபாய் செலவில் 1 லட்சம் கிலோ மீட்டர்கள் தொலைவை காரில் கடந்து, இந்தியர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் சூழலில் படைக்கப்பட்டுள்ள இந்த சாதனை குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை உண்டாக்கி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகிய 2 பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக முன்வைக்கப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான்.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. ஆனால் பொதுமக்கள் மத்தியில், எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து இன்னும் அவ்வளவாக விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றே சொல்லலாம்.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்கள் வெகுவாக பயன்பாட்டிற்கு வந்து விட்டன. ஆனால் இந்திய சாலைகளில் ஒன்றிரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை காண்பது என்பதே மிக அரிதான விஷயமாக உள்ளது.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

என்றாலும் ஒரு சிலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி கொண்டுதான் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் டெல்லியை சேர்ந்த ரஞ்சன் ரேய். எலெக்ட்ரிக் கார் ஒன்றில் 1 லட்சம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்த இந்தியாவின் முதல் நபர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ரஞ்சன் ரேய்.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, மஹிந்திரா இ2ஓ (Mahindra e2o) எலெக்ட்ரிக் காரை, ரஞ்சன் ரேய் வாங்கினார். மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் கார் குறித்த விளம்பரம் செய்தித்தாளில் வெளியாகியிருந்தது. அந்த விளம்பரம்தான், மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என ரஞ்சன் ரேயை தூண்டியது.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

எலெக்ட்ரிக் வாகனங்கள் என்றாலே பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். அதே தயக்கம் ரஞ்சம் ரேயிக்கும் இருக்கவே செய்தது. என்றாலும் மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரை துணிந்து வாங்கினார் ரஞ்சன் ரேய். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

ஆம், மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரில் 1 லட்சம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்து முடித்து விட்டார் ரஞ்சன் ரேய். இந்திய அளவில் புதிய சாதனை படைத்திருப்பது குறித்து ரஞ்சன் ரேய் கூறுகையில், ''இது எனக்கு பெருமை மிகுந்த தருணம்'' என்றார்.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

கடந்த 4 ஆண்டுகளாக, மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரை ரஞ்சன் ரேய் பயன்படுத்தி வருகிறார். இதன்மூலம்தான் 1 லட்சம் கிலோ மீட்டர்கள் என்ற இலக்கை அவரால் எட்ட முடிந்திருக்கிறது. இந்த 1 லட்சம் கிலோ மீட்டர்கள் பயணிப்பதற்காக அவர் செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

வெறும் 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே. உண்மைதான். மின்சாரத்திற்காக வெறும் 70 ஆயிரம் ரூபாயை மட்டுமே ரஞ்சன் ரேய் செலவிட்டுள்ளார். அதாவது ஒரு கிலோ மீட்டர் பயணிக்க வெறும் 70 பைசா மட்டுமே செலவாகியுள்ளது.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரை பயன்படுத்துவதன் மூலமாக, நாம் எவ்வளவு எரிபொருளை மிச்சம் பிடிக்கிறோம் என்பதை, காரின் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் ரஞ்சன் ரேய் 8,333 லிட்டர் எரிபொருளை மிச்சம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

இதுவே பெட்ரோல் அல்லது டீசல் காராக இருந்திருந்தால், 1 லட்சம் கிலோ மீட்டர்கள் பயணிக்க எவ்வளவு செலவாகியிருக்கும்? என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள். ஒரு லட்சம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்து விட்ட பின்பும் கூட ரஞ்சன் ரேயின் காரினுடைய பேட்டரி இன்னும் நல்ல நிலையில்தான் உள்ளது.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

மஹிந்திரா இ2ஓ காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 95-100 கிலோ மீட்டர்கள் வரை ரஞ்சன் ரேயினால் பயணிக்க முடிந்திருக்கிறது. ரஞ்சன் ரேயின் சாதனையில் மற்றொரு சுவாரசியமான விஷயமும் அடங்கியுள்ளது.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

அதாவது ரஞ்சன் ரேயின் மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரின் ஓடோ மீட்டர் 99,999 கிலோ மீட்டர்களுடன் நின்று விட்டது. இதில், 5 இலக்க எண்ணிற்கு மேல் சப்போர்ட் செய்யும் வசதியை மஹிந்திரா நிறுவனம் வழங்கவில்லை. ஆனால் 1 லட்சம் என்பது 6 இலக்கத்தில்தான் வரும்.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

எனவேதான் ரஞ்சன் ரேயின் மஹிந்திரா இ2ஓ காரின் ஓடோ மீட்டர் 99,999 கிலோ மீட்டர்களுடன் நின்று விட்டது. இதுகுறித்து ரஞ்சன் ரேய் வேடிக்கையாக கூறுகையில், ''இ2ஓ எலெக்ட்ரிக் கார் 1 லட்சம் கிலோ மீட்டர்கள் பயணிக்கும் என்பதை மஹிந்திரா நிறுவனமே எதிர்பார்த்திருக்காது போல'' என்றார்.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

இந்த சூழலில், கடந்த 4 ஆண்டுகளில் எதிர்கொண்ட பிரச்னைகள் குறித்து ரஞ்சன் ரேய் கூறுகையில், ''1 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்த ஏப்ரல் மாதமே நிறைவு செய்து விட்டேன். இடைப்பட்ட 4 ஆண்டுகளில் எனது காரில் ஒரு சில முறை பிரச்னைகள் ஏற்படவே செய்தது.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

ஒட்டுமொத்தமாக பார்த்தால், சுமார் 6-7 மாதங்கள் சர்வீஸ் சென்டரிலேயே கழிந்திருக்கும். எனினும் பெரும்பாலான பிரச்னைகள் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது. ஆனால் ஒரு சில பிரச்னைகள் தொடரவே செய்தன. எனினும் இந்தியாவில் விற்பனைக்கு வரும் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களில் இந்த ஒரு சில குறைகளும் இருக்காது என நம்புகிறேன்.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

அதாவது அதிக செயல்திறனுடனும், ஒரு முறை சார்ஜ் செய்தால் இன்னும் அதிக கிலோ மீட்டர்கள் பயணிக்கும் வகையிலும் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. இதற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள்தான் துணை புரிய வேண்டும்.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துபவர்களிடம், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கருத்து கேட்கலாம். அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மூலமாக, நடைமுறையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வை கண்டறிய முடியும். ஆனால் அப்படியான ஒரு சிஸ்டம் தற்போது இல்லை.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

இதுதவிர உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இதன்மூலம் தங்களுக்கு அருகில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்களை, எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டாளர்களால் மிக எளிதில் கண்டறிந்து கொள்ள முடியும்'' என்றார்.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

மஹிந்திரா இ2ஓ காரை தொடர்ந்து பயன்படுத்தப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ரஞ்சன் ரேய், ''எனது கார் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்கப்போகிறது? என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். எனவே தொடர்ந்து அந்த காரைதான் பயன்படுத்த உள்ளேன்'' என்றார்.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

அப்படியானால் 2 லட்சம் கிலோ மீட்டர்கள் பயணிப்பது அவரின் அடுத்த இலக்காக இருக்கலாம். அவருக்கு நமது வாழ்த்துக்கள். PlugInIndia என்ற யூ-டியூப் சேனல் நடத்திய நேர்காணலில்தான் ரஞ்சன் ரேய் இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதால், எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் பொதுமக்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக ஃபேம் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு கிமீக்கு 70 பைசா மட்டுமே.. வெறும் ரூ.70 ஆயிரம் செலவில் 1 லட்சம் கிமீக்களை காரில் கடந்து இந்தியர் சாதனை

அதாவது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொதுமக்கள், மத்திய அரசிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை மானியமாக பெற்று கொள்ளலாம். அதே நேரத்தில், சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Most Read Articles

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக கருதப்படும் ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Mahindra e2o Owner Creates History By Completes 1 Lakh kms In His EV. Read in Tamil
Story first published: Wednesday, October 17, 2018, 15:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X