இன்னோவா, எர்டிகாவை முந்த முடியாமல் தடுமாறும் மஹிந்திரா மராஸ்ஸோ!

கடந்த செப்டம்பர் மாதத்தில் 2,829 மஹிந்திரா மராஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், 3,926 மாருதி எர்டிகா கார்களும், 6,477 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களும் விற்பனையாகி இருக்கின்றன.

கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட, புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் முதல் மாதத்தில் சுமாரான விற்பனையை பதிவு செய்துள்ளது. மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விற்பனை எண்ணிக்கை மற்றும் கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

இன்னோவா, எர்டிகா மார்க்கெட்டை அசைக்க முடியாமல் தவிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து புத்தம் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ 7 சீட்டர் கார் கடந்த மாதம் 3ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் வந்ததால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இன்னோவா, எர்டிகா மார்க்கெட்டை அசைக்க முடியாமல் தவிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ!

எர்டிகாவை விட சற்று கூடுதல் இடவசதியுடன், இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட குறைவான விலை வித்தியாசத்தில் வந்தது. மேலும், விற்பனைக்கு முன்பே முன்பதிவு துவங்கி இருந்ததால், முதல் மாதத்தில் விற்பனை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு முதல் மாத விற்பனை ஆஹோ, ஓஹோ என்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

இன்னோவா, எர்டிகா மார்க்கெட்டை அசைக்க முடியாமல் தவிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ!

கடந்த செப்டம்பர் மாதத்தில் 2,829 மஹிந்திரா மராஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், 3,926 மாருதி எர்டிகா கார்களும், 6,477 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களும் விற்பனையாகி இருக்கின்றன.

இன்னோவா, எர்டிகா மார்க்கெட்டை அசைக்க முடியாமல் தவிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ!

இந்த விற்பனை எண்ணிக்கையின் மூலமாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா கார்களின் விற்பனை புதிய மஹிந்திரா மராஸ்ஸோ வரவால் கடுகளவும் பாதிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.

இன்னோவா, எர்டிகா மார்க்கெட்டை அசைக்க முடியாமல் தவிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ!

மேலும், நவம்பரில் புதிய மாருதி எர்டிகா கார் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையிலும், மாருதி எர்டிகா காரின் விற்பனை மிகச் சிறப்பான எண்ணிக்கைய பதிவு செய்துள்ளது. மாதத்திற்கு 4,000 கார்கள் என்ற விற்பனை இலக்குடன் மஹிந்திரா மராஸ்ஸோ கார் அறிமுகம் செய்யப்பட்டது.

இன்னோவா, எர்டிகா மார்க்கெட்டை அசைக்க முடியாமல் தவிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ!

ஆனால், முதல் மாதத்திலேயே விற்பனை 3,000 கூட தாண்டவில்லை. மேலும், நாசிக்கில் உள்ள மஹிந்திரா ஆலையில் மாதத்திற்கு 7,000 மராஸ்ஸோ கார்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால், மஹிந்திரா எதிர்பார்ப்பை புதிய மராஸ்ஸோ பூர்த்தி செய்யவில்லை.

இன்னோவா, எர்டிகா மார்க்கெட்டை அசைக்க முடியாமல் தவிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ!

எனினும், மஹிந்திரா மராஸ்ஸோ காரில் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும்போது, விற்பனை எண்ணிக்கை மாதத்திற்கு 1,000 யூனிட்டுகள் கூடுதலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னோவா, எர்டிகா மார்க்கெட்டை அசைக்க முடியாமல் தவிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த எஞ்சின் 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இன்னோவா, எர்டிகா மார்க்கெட்டை அசைக்க முடியாமல் தவிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ!

விலை உயர்ந்த வேரியண்டில் ஏராளமான வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், காரை அழகுப்படுத்திக் கொள்வதற்காக விசேஷ ஆக்சஸெரீகளும், பாடி கிட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன. எனினும், முதல் மாத விற்பனை மஹிந்திராவுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

இன்னோவா, எர்டிகா மார்க்கெட்டை அசைக்க முடியாமல் தவிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ!

எனினும், பண்டிகை காலம் துவங்கி இருப்பதால், இந்த மாதத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். அப்படி இருந்தாலும், நவம்பரில் புதிய மாருதி எர்டிகா கார் வர இருப்பதும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் வலுவான மார்க்கெட்டை தொட்டு கூட பிடிக்க முடியாத நிலையில்தான் மஹிந்திரா மராஸ்ஸோ இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா
English summary
Mahindra Marazzo was launched in India during the first week of September 2018. Competing against the Toyota Innova Crysta and the Maruti Suzuki Ertiga, the Marazzo MPV has managed to sell 2,892 units of the MPV in a month.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X