அடுத்தாண்டு வருகிறது மஹிந்திராவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி

மஹிந்திய நிறுவனத்தின் புதிய எம்பிவி காரான மஹிந்திரா மராஸ்ஸோ காரின் பெயர் அறிமுக விழா இன்று நடந்தது. இந்த கார் முன்னதானக யூ321 என்ற கோட் பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. அப்பொழுது அந்நிறுவனத்தின் நிர

By Balasubramanian

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எம்பிவி காரான மஹிந்திரா மராஸ்ஸோ காரின் பெயர் அறிமுக விழா இன்று நடந்தது. இந்த கார் முன்னதானக யூ321 என்ற கோட் பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. அப்பொழுது அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோன்கா என்பவவரிடம் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

அடுத்தாண்டு வருகிறது மஹிந்திராவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி

அதற்கு பதில் அளித்த அவர் 2019-2020ம் நிதியாண்டில் அது வெளியாகும் என கூறினார். ஆனால் அது எந்த கார் என்பது குறித்த தகவலை அவர் கூறவில்லை. மஹிந்திரா நிறுவனத்தின் கேயூவி 100 கார் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தாண்டு வருகிறது மஹிந்திராவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி

ஏனெனில் மஹிந்திரா கேயூவி100 காரில் பேஸ் லிப்ட் வெர்ஷன் சமீபத்தில் வெளியானது அப்பொழுது அந்நிறுவனம் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனிற்காக அந்நிறுவனம் பணியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே 2019ம் ஆண்டு அந்நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் கார்களை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அடுத்தாண்டு வருகிறது மஹிந்திராவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி

இதில் ஒரு கார் கேயூவி 100 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் தான்.மேலும் கேயூவி 100 காருக்கும் மஹிந்திரா இ2ஓ பிளஸ் காரில் உள்ள அதே பவர் டிரைன் தான் வருமா என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்க புதிய எலெக்ட்ரிக் பவர் டிரைன் இந்த காரில் பொருத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

அடுத்தாண்டு வருகிறது மஹிந்திராவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி

தற்போது மஹிந்திரா நிறுவனம் இ2ஓ பிளஸ் எனும் ஹெட்ச் பேக் காரையும், இ வெரிட்டோ எனும் செடன் காரையும் இ சூப்பரோ எனும் சிறிய கமர்ஷியல் வாகனத்தையும் விற்பனை செய்து வருகிறது. இந்த பட்டிலயில் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அடுத்த ஆண்டு சேர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தாண்டு வருகிறது மஹிந்திராவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி

இதற்கிடையில் கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் எக்ஸ்யூவி ஏரோ கூப் என்ற காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் தயாரிக்கப்படும் என்ற பேச்சு நிலவியது. தற்போது மஹிந்திரா நிறுவனம் முழு சார்ஜில் 350 கி.மீ. பயணிக்கும் அளவிற்கு திறன் கொண்ட பேட்டரியை வடிவமைத்து வருகிறது. இந்த பேட்டரி தயார் ஆனவுன் இந்த கார் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra To Launch Its Electric SUV In The First Half Of FY 2019-20. Read in tamil
Story first published: Tuesday, July 31, 2018, 19:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X