மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனை விரைவில் நிறுத்தம்!

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனையிலிருந்து விலக்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் விற்பனை ஒற்றை இலக்கத்திலேயே இருக்கிறது. மேலும், அடுத்த ஆண

By Saravana Rajan

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனையிலிருந்து விலக்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனை விரைவில் நிறுத்தம்!

வரும் 2019ம் ஆண்டு முதல் கார்களுக்கு புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. அத்துடன், 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்துடன் கார்களில் எஞ்சின் பொருத்துவது கட்டாயமாக்கப்பட இருக்கிறது.

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனை விரைவில் நிறுத்தம்!

இந்த புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப கார்களை மேம்படுத்துவது அவசியமாகி இருக்கிறது. இதற்கு மிக அதிக அளவிலான முதலீடுகள் தேவைப்படும். இதனால், விற்பனையில் மிக மோசமாக உள்ள கார் மாடல்களை கழற்றி விட பல கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனை விரைவில் நிறுத்தம்!

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் உதவாக்கறை மாடல்களுக்கு கல்தா கொடுக்க மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, விற்பனையில் மிக மோசமாக இருந்து வரும் வைப், நூவோஸ்போர்ட் மற்றும் ஸைலோ கார்களை விற்பனையில் விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனை விரைவில் நிறுத்தம்!

இந்த நிலையில், தற்போது நூவோஸ்போர்ட் எஸ்யூவியை விற்பனையில் இருந்து மஹிந்திரா நிறுவனம் விலக்கிக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக மஹிந்திரா நூவோஸ்போர்ட் விற்பனை ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி வருகிறது. இதனால், நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் விற்பனை நிறுத்தப்பட இருக்கிறது.

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனை விரைவில் நிறுத்தம்!

2012ம் ஆண்டு காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா குவான்ட்டோ கார் ஆரம்பத்தில் ஓரளவு வரவேற்பை பெற்றது. ஆனால், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தொடர்ந்து புதிய மாடல்களின் வருகையால் மஹிந்திரா குவானட்ட்டோ இருந்த இடம் தெரியாமல் போனது.

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனை விரைவில் நிறுத்தம்!

இந்த நிலையில், மஹிந்திரா குவான்ட்டோ எஸ்யூவியை மேம்படுத்தி நூவோஸ்போர்ட் என்ற புதிய பெயரில் மஹிந்திரா களமிறக்கியது. ஆனால், புதிய பெயரில் வந்தாலும் விற்பனையில் சோபிக்கவில்லை. இதனால், தற்போது இந்த மாடல் சந்தையிலிருந்து விலக்கப்பட இருக்கிறது.

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனை விரைவில் நிறுத்தம்!

கடந்த மாதம் ஒரே ஒரு நூவோஸ்போர்ட் எஸ்யூவி மட்டுமே விற்பனையாகி இருப்பதாக மஹிந்திரா வட்டராங்கள் தெரிவிக்கின்றன. எனவே, முதல் வேலையாக நூவோஸ்போர்ட் உற்பத்தியை நிறுத்த மஹிந்திரா முடிவு செய்துவிட்டது.

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனை விரைவில் நிறுத்தம்!

அடுத்து வைப் மற்றும் ஸைலோ கார்களும் இந்த பட்டியலில் இடம்பெறும். ஸைலோ காருக்கு மாற்றாக புதிய மாடல்களை மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கிறது. எனவே, இந்த மாடல்கள் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டாலும், புதிய மாடல்களின் மூலமாக அதனை ஈடுகட்டுவதற்கும், கூடுதல் விற்பனையை பெறுவதற்கும் மஹிந்திரா திட்டம் போட்டுள்ளது.

Source: AutoX

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra NuvoSport to be discontinued soon.
Story first published: Thursday, June 28, 2018, 11:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X