மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள்!

மஹிந்திரா எஸ்201 எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. டேஷ்போர்டு டிசைன் மிக அழகாக உள்ளது. கருப்பு மற்றும் க்ரீம் வண்ணத்திலான இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சென்டர் கன்சோலி

மஹிந்திரா எஸ்201 எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில், இந்த எஸ்யூவியின் இன்டீரியர் மிக பிரிமியமாகவும், அதிக வசதிகளுடன் வருவது தெரியவந்துள்ளது.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள்!

சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக அல்டுராஸ் எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, சாங்யாங் டிவோலி எஸ்யூவியையும் விரைவில் தனது பிராண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மஹிந்திரா.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள்!

மஹிந்திரா இன்ஃபர்னோ என்ற பெயரில் இந்த புதிய எஸ்யூவி மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருப்பது காடிவாடி தளம் வெளியிட்டு இருக்கும் ஸ்பை படம் மூலமாக தெரிய வருகிறது.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள்!

டேஷ்போர்டு டிசைன் மிக அழகாக உள்ளது. கருப்பு மற்றும் க்ரீம் வண்ணத்திலான இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சென்டர் கன்சோலில் பெரும் பகுதியை தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆக்கிரமித்துள்ளது. இதுதவிர, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கியர் லிவர், ஸ்டீயரிங் வீல் என அனைத்துமே கவர்ச்சிகரமாக இருக்கிறது.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள்!

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்ஸ் கேமரா, ரியர் ஏசி வென்ட்டுகள் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள்!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல ஸ்டீல் வீல்கள் மற்றும் 17 அங்குல மெஷின் கட் அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள்!

இந்த புதிய 5 சீட்டர் எஸ்யூவி 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடலகளுடன் போட்டி போடும்.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள்!

இந்த புதிய எஸ்யூவி மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வருகிறது.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள்!

டிசைன், வசதிகள், பட்ஜெட் என அனைத்து விதத்திலும் சிறப்பான தேர்வாக இருக்கும் என தெரிகிறது. மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு மிக நேரடி போட்டியை அளிக்கும். இது மிக பிரிமீயம் மாடலாக இந்த செக்மென்ட்டில் நிலைநிறுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா
English summary
From the newly-leaked spy images of the Mahindra S201, it is evident that it has one of the best interiors in its segment. Being based on the SsangYong Tivoli sold in global markets, the Mahindra S201 features upmarket interiors with enough features.
Story first published: Wednesday, December 5, 2018, 13:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X