பேட்டரியில் இயங்கும் ஆட்டோரிக்ஷா மாடல்களை காட்சிப்படுத்தியது மஹிந்திரா!!

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை டெல்லியில் நடந்த மூவ் 2018 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தி இருக்கிறது. லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கும் இந்த ஆட்டோரிக்ஷா இரண்டு மாடல்களில் வருக

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை டெல்லியில் நடந்த மூவ் 2018 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தி இருக்கிறது. லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கும் இந்த ஆட்டோரிக்ஷா இரண்டு மாடல்களில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது.

பேட்டரியில் இயங்கும் ஆட்டோரிக்ஷா மாடல்களை காட்சிப்படுத்தியது மஹிந்திரா!!

ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரி ஆகிய இரண்டு மாடல்களில் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த இரு வாகனமும் மூன்று மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட வடிவமைப்பில் உள்ளது. வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப இதனை தேர்வு செய்து கொள்ளலாம்.

பேட்டரியில் இயங்கும் ஆட்டோரிக்ஷா மாடல்களை காட்சிப்படுத்தியது மஹிந்திரா!!

இந்த வாகனம் புதிய லித்தியம் அயன் பேட்டரியால் இயங்குவதால் மற்ற பேட்டரிகளை காட்டிலும் அதீத செயல் திறன், நீடித்து உழைக்கும் தண்மை, குறைத்த செலவு போன்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

இந்திய வாகன சந்தை எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளதால் கண்டிப்பாக நாங்களும் அதற்கு உதவி புரிய கடமைபட்டுளோம் என்றார் மஹிந்திரா & மஹிந்திராவின் மேனேஜிங் டைரக்டர் திரு. பவன் கோயன்கா.

பேட்டரியில் இயங்கும் ஆட்டோரிக்ஷா மாடல்களை காட்சிப்படுத்தியது மஹிந்திரா!!

இதன் விளைவாகவே மஹிந்திரா ட்ரியோ வாகனத்தை சரியான நேரத்தில் நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்றார். பொது போக்குவரத்து சந்தையில் இந்த மஹிந்திரா ட்ரியோ எலக்ட்ரிக் வாகனம் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

பேட்டரியில் இயங்கும் ஆட்டோரிக்ஷா மாடல்களை காட்சிப்படுத்தியது மஹிந்திரா!!

இந்த எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவின் மற்றுமோர் சிறப்பம்சம் யாதெனில் தொலைதூர பயணத்திற்கும் ஏற்றவாறு இதன் செயல் திறன் மற்றும் பேட்டரி இருக்கும் என்பதே. பொதுவாக எலக்ட்ரிக் பைக் மற்றும் கார்கள் இந்த தேவையை பூர்த்தி செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சந்தையில் மஹிந்திரா ட்ரியோவிற்கு தனிப்பெயர் இப்போதே கிட்டிவிட்டது.

பேட்டரியில் இயங்கும் ஆட்டோரிக்ஷா மாடல்களை காட்சிப்படுத்தியது மஹிந்திரா!!

மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனப் பிரிவு தலைமை செயல் அதிகாரி மகேஷ் பாபு கூறுகையில், "இந்த எலக்ட்ரிக் வெஹிகிள் அடுத்த யுகத்தை ஞாபகப்படுத்துவது மட்டுமின்றி எதிர்காலத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் பல்வேறு பரிணாமங்கள் மற்றும் அதிக உற்பத்தி போன்றவற்றால் இந்தியாவின் தொலைதூர பயணிகளுக்கு இந்த மஹிந்திரா ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரி அமையும் என்றார்.

பேட்டரியில் இயங்கும் ஆட்டோரிக்ஷா மாடல்களை காட்சிப்படுத்தியது மஹிந்திரா!!

இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் உள்தோற்றங்கள் பல எலக்ட்ரிக் வெஹிகிளை விட தனித்த குணம் பெற்றிருக்கிறது. இந்த தன்மை இந்திய எலக்ட்ரிக் வெஹிகிள் பிரிவில் ஒரு சகாப்தம் என அந்நிறுவனம் கூறுகிறது. இந்த வாகனம் வருடம் தோறும் அதன் முதலாளிகள் மற்றும் டிரைவர்களுக்கு 20 முதல் 25 சதவிகிதம் வரை லாபத்தை பெற்று தரும் என உறுதிபூண்டுள்ளது.

பேட்டரியில் இயங்கும் ஆட்டோரிக்ஷா மாடல்களை காட்சிப்படுத்தியது மஹிந்திரா!!

அன்றாட பயணத் தேவைகளுக்கு ஏதுவாய் இந்த மஹிந்திரா ட்ரியோ மற்றும் யாரி வடிவமைக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளுங்கள். இந்த இரு எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்கள் ஹார்டு டாப் மற்றும் சாப்ட் டாப் என இரு வகைகளில் கிடைக்கிறது. இதிலிருக்கும் டெலிமாட்டிக்ஸ் டெக்னாலஜி கொண்டு வாகனத்தின் ரேஞ்ச் , சார்ஜ் நிலை போன்றவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

பேட்டரியில் இயங்கும் ஆட்டோரிக்ஷா மாடல்களை காட்சிப்படுத்தியது மஹிந்திரா!!

மஹிந்திரா இந்திய வாகன உலகத்தின் எதிர்காலத்தை நோக்கி பயணம் சென்று கொண்டிருக்கிறது இதன் மூலம் நமக்கு தெரிகிறது. அவர்கள் மாஸ் மொபிலிட்டி பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இதுவே சரியான நேரம் என நம்புகின்றனர். எனவே அவர்கள் மாஸ் மொபிலிட்டி மற்றும் எலக்ட்ரிக் யுகத்தை கருத்தில் கொண்டு அதில் பயணித்து வெற்றி பெறுகின்றனர்.

சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பம் கீழே இணைக்கப்பட்டுள்ளது,

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has showcased their latest electric vehicle, the Treo three-wheeler. The lithium-ion battery-powered Mahindra Treo three-wheeler was showcased at the ongoing Move Summit 2018 in New Delhi.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X