போலீசாருக்கு நவீன கார்கள்... ஸ்பை படம் வெளியானது...

மகாராஷ்டிர மாநில போலீசாருக்கு 100 மகேந்திரா டியூவி 300 கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எஸ்யூவி வகை காரில் ரோந்து செல்லும் முதல் போலீஸ் படை என்ற பெருமை அவர்களுக்கு கிடைக்கவுள்ளது.

By Arun

மகாராஷ்டிர மாநில போலீசாருக்கு 100 மகேந்திரா டியூவி 300 கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எஸ்யூவி வகை காரில் ரோந்து செல்லும் முதல் போலீஸ் படை என்ற பெருமை அவர்களுக்கு கிடைக்கவுள்ளது. இதுபற்றிய விரிவான செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

போலீசாருக்கு நவீன கார்கள் பரிசு... ஸ்பை படம் வெளியானது... எஸ்யூவியில் ரோந்து செல்லும் பாக்கியம்...!!!

இந்தியாவை சேர்ந்த மகேந்திரா அண்டு மகேந்திரா கார் நிறுவனம், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனம் 100 மகேந்திரா டியூவி 300 எஸ்யூவி கார்களை, மகாராஷ்டிரா போலீசுக்கு வழங்குவதாக அறிவிப்பு செய்திருந்தது.

போலீசாருக்கு நவீன கார்கள் பரிசு... ஸ்பை படம் வெளியானது... எஸ்யூவியில் ரோந்து செல்லும் பாக்கியம்...!!!

இதன்படி மகாராஷ்ரா போலீசாருக்கான டியூவி 300 கார்களை, மகேந்திரா நிறுவனம் தற்போது வினியோகம் செய்ய தொடங்கியுள்ளது. அந்த கார்கள் எல்லாம், யார்டில் நிறுத்தப்பட்டிருக்கும் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன.

போலீசாருக்கு நவீன கார்கள் பரிசு... ஸ்பை படம் வெளியானது... எஸ்யூவியில் ரோந்து செல்லும் பாக்கியம்...!!!

மகேந்திரா டியூவி 300 கார்களை ரோந்து பணிக்கு பயன்படுத்த மகாராஷ்ரா போலீஸ் முடிவு செய்துள்ளது. எஸ்யூவி வகை கார் ஒன்றினை, ரோந்து பணியில் ஈடுபடுத்த இருப்பது இதுவே முதல் முறை. அந்த அரிய காட்சியை நாம் விரைவில் காணலாம்.

போலீசாருக்கு நவீன கார்கள் பரிசு... ஸ்பை படம் வெளியானது... எஸ்யூவியில் ரோந்து செல்லும் பாக்கியம்...!!!

மகாராஷ்டிரா போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள மகேந்திரா டியூவி 300 கார்கள், வெள்ளை நிறத்தில் உள்ளன. அதில், சிகப்பு, மஞ்சள், நீலம் என மூன்று நிறங்களும் இடம்பெற்றுள்ளன.

போலீசாருக்கு நவீன கார்கள் பரிசு... ஸ்பை படம் வெளியானது... எஸ்யூவியில் ரோந்து செல்லும் பாக்கியம்...!!!

மாநில போலீஸ் படையில், டெக்னாலஜியை அதிகரிக்க மகாராஷ்ரா அரசு விரும்புவதாகவும், எனவேதான் மகேந்திரா டியூவி 300 கார்களுக்கு சென்றிருப்பதாகவும், அம்மாநில டிஜிபி சதீஸ் மாத்தூர் தெரிவித்துள்ளார்.

போலீசாருக்கு நவீன கார்கள் பரிசு... ஸ்பை படம் வெளியானது... எஸ்யூவியில் ரோந்து செல்லும் பாக்கியம்...!!!

மகாராஷ்டிரா போலீசாருக்கு, மகேந்திரா டியூவி 300 காரின் டி4ப்ளஸ் வேரியண்ட்தான் வழங்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின், 84 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

போலீசாருக்கு நவீன கார்கள் பரிசு... ஸ்பை படம் வெளியானது... எஸ்யூவியில் ரோந்து செல்லும் பாக்கியம்...!!!

மாநகர பகுதிகளில் 16, நெடுஞ்சாலைகளில் 18 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும். இந்த காரில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் ஆப்ஷனலாக ஆட்டோமெட்டிக் கியர் பாக்சும் வருகிறது.

போலீசாருக்கு நவீன கார்கள் பரிசு... ஸ்பை படம் வெளியானது... எஸ்யூவியில் ரோந்து செல்லும் பாக்கியம்...!!!

பவர் ஸ்டியரிங் பொருத்தப்பட்டுள்ள மகேந்திரா டியூவி 300 காரில், பாதுகாப்பிற்காக டியூயல் ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இபிடி உள்ளிட்ட வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

போலீசாருக்கு நவீன கார்கள் பரிசு... ஸ்பை படம் வெளியானது... எஸ்யூவியில் ரோந்து செல்லும் பாக்கியம்...!!!

இந்த செக்மெண்டில் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா, டாட்டா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுக்கு நேரடி போட்டியாக மகேந்திரா டியூவி 300 கார் திகழ்கிறது. இதன் டி4ப்ளஸ் வேரியண்ட் 8.25 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) விலையில் கிடைக்கிறது.

போலீசாருக்கு நவீன கார்கள் பரிசு... ஸ்பை படம் வெளியானது... எஸ்யூவியில் ரோந்து செல்லும் பாக்கியம்...!!!

டி4ப்ளஸ் வேரியண்ட் தவிர மகேந்திரா டியூவி 300 காரில் மேலும் 9 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. இந்த கார் இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

போலீசாருக்கு நவீன கார்கள் பரிசு... ஸ்பை படம் வெளியானது... எஸ்யூவியில் ரோந்து செல்லும் பாக்கியம்...!!!

இதனிடையே மகேந்திரா நிறுவனம், புதிய டியூவி ப்ளஸ் காரை வரும் நாட்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பாடி டைப், 7 பேர் அமரக்கூடிய வகையிலான எஸ்யூவி-ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra TUV300 is Maharashtra Police Department’s latest patrol vehicle. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X