புத்தம் புதிய மஹிந்திரா 7 சீட்டர் எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது!

மஹிந்திரா நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எம்பிவி காரின் அறிமுக விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

By Saravana Rajan

மஹிந்திரா நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எம்பிவி காரின் அறிமுக விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

புத்தம் புதிய மஹிந்திரா 7 சீட்டர் எம்பிவி கார் வருகை விபரம்!!

எம்பிவி கார் மார்க்கெட்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா கார்களின் மார்க்கெட்டை குறி வைத்து புத்தம் புதிய மாடலை மஹிந்திரா நிறுவனம் களமிறக்க உள்ளது. யு321 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய எம்பிவி கார் தீவிர சாலை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

புத்தம் புதிய மஹிந்திரா 7 சீட்டர் எம்பிவி கார் வருகை விபரம்!!

அடிக்கடி வெளியாகும் ஸ்பை படங்களில் இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு இணையான உடல்வாகுடன் இருப்பதால், மாருதி எர்டிகா காரைவிட அதிக இடவசதி கொண்டதாகவும், அதற்கு இணையான பட்ஜெட்டில் வரும் என்பதும் ஆவலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

புத்தம் புதிய மஹிந்திரா 7 சீட்டர் எம்பிவி கார் வருகை விபரம்!!

இந்த நிலையில், இந்த புதிய எம்பிவி கார் வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புத்தம் புதிய மஹிந்திரா 7 சீட்டர் எம்பிவி கார் வருகை விபரம்!!

புதிய மஹிந்திரா எம்பிவி காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், மல்டி ஸ்போக் அலாய் சக்கரங்களுடன் வர இருக்கிறது. டிசைனிலும் சிறப்பானதாக இருக்கும்.

புத்தம் புதிய மஹிந்திரா 7 சீட்டர் எம்பிவி கார் வருகை விபரம்!!

இந்த காரின் உட்புறம் மிகச் சிறப்பான அம்சங்களை பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதிகளுடன் வர இருக்கிறது.

புத்தம் புதிய மஹிந்திரா 7 சீட்டர் எம்பிவி கார் வருகை விபரம்!!

இந்த புதிய காரில் சாங்யாங் நிறுவனத்தின் துணையுடன் தயாரிக்கப்பட்டுள்ள புதிய 1.6 லிட்டர் எம்ஃபால்கன் டீசல் எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்சின் அதிகபட்சமாமகக 125 பிஎச்பி பவரையும் 305 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

புத்தம் புதிய மஹிந்திரா 7 சீட்டர் எம்பிவி கார் வருகை விபரம்!!

பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய மஹிந்திரா 7 சீட்டர் எம்பிவி கார் வருகை விபரம்!!

இந்த காரில் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். மாருதி எர்டிகாவுக்கு இணையான விலையிலும், இன்னோவா காரின் இடவசதியுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: ET

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra U321 MPV launch details revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X