பழைய மற்றும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு இடையிலான வித்தியாசங்கள்!!

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி500 எஸ்யூவி மெருகு கூட்டப்பட்டு விற்பனைக்குவந்துள்ளது. ரூ.12.32 லட்சம் என்ற சவாலான விலையில் இந்த புதிய மாடலை பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளத

By Saravana Rajan

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி500 எஸ்யூவி மெருகு கூட்டப்பட்டு விற்பனைக்குவந்துள்ளது. ரூ.12.32 லட்சம் என்ற சவாலான விலையில் இந்த புதிய மாடலை பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. இந்தநிலையில், பழைய மாடலுக்கும், புதிய மாடலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வித்தியாசங்களை இந்த செய்தியில் காணலாம்.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500... பழசு Vs புதுசு!!

2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி500 தற்போது புதுப்பொலிவுடன் மூன்றாவது மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை என்றாலும், குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களை சந்தித்துள்ளது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500... பழசு Vs புதுசு!!

புதிய முகப்பு க்ரில் அமைப்பு, ஹெட்லை்ட, பம்பர் ஆகியவை முக்கிய மாற்றங்களாக வேறுபடுத்துகிறது. க்ரில் அமைப்புக்கு கீழேகா துணை க்ரில் அமைப்பு பிரதான க்ரில் அமைைப்புடன் இணைக்கப்பட்டது போல மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500... பழசு Vs புதுசு!!

க்ரோம் வில்லைகள் பதிக்கப்பட்ட புதிய க்ரில் அமைப்பு, பழைய மாடலில் இருந்த S- வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள் இப்போது புதிய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுக்கு மேலாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இப்போது க்ரில் அமைப்புக்கு கீழே இணைந்ததாக ஏர்டேம் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பம்பரிலும் லேசான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500... பழசு Vs புதுசு!!

பக்கவாட்டில் முக்கிய மாற்றமாக புதிய அலாய் வீல்கள் இடம்பிடித்துள்ளன. விலை உயர்ந்த வேரியண்ட்டில் 18 அங்குல அலாய் வீல்களும், விலை குறைவான வேரியண்ட்டுகளில் 17 அங்குல அலாய் வீல்களும் கொடுக்கப்படுகின்றன. கதவுகளுக்கு கீழ்பகுதியில் புதிய க்ரோம் பீடிங் கொடுக்கப்பட்டு வசீகரம் கூட்டப்பட்டு இருக்கிறது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500... பழசு Vs புதுசு!!

பின்புறத்தில் புதிய எல்இடி விளக்குகள் கொண்ட ஹவுசிங் இடம்பிடித்துள்ளது. ஏற்கனவே இருந்த செங்குத்தான க்ளஸ்ட்டர் எடுக்கப்பட்டு இப்போது முக்கோண வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. நம்பர் பிளேட்டுக்கு மேலாக சற்று பெரிய க்ரோம் சட்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. புதிய ரூஃப் ஸ்பாய்லரும் குறிப்பிடத்தக்க மாற்றமாக கூறலாம்.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500... பழசு Vs புதுசு!!

உட்புற டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டில் மென்மையான உணர்வை தரும் லெதர் கவர் செய்யப்பட்டு இருக்கிறது. சென்டர் கன்சோல் அமைப்பிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பெற்றிருக்கிறது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500... பழசு Vs புதுசு!!

முதல்முறையாக ஸ்மார்ட்வாட்ச் என்ற கைக்கடிகாரம் போன்ற சாதனம் இந்த காருடன் வழங்கப்படுகிறது. இதன்மூலமாக, காரின் எரிபொருள் அளவு, டயர்களில் காற்றழுத்தம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் வசதிகளை இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலமாக பெற முடியும். விபத்து ஏற்பட்டால், தானியங்கி முறையில் அவரச உதவி மையத்திற்கு தகவல் அனுப்பும் வசதியும் உண்டு.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500... பழசு Vs புதுசு!!

டேன் வண்ணத்திலான புதிய லெதர் இருக்கைகள் முக்கிய அம்சமாக கூறலாம். இருக்கைகள் முன்பைவிட சொகுசான உணர்வை அளிப்பதோடு, விசேஷ தையல் வேலைப்பாடுகளும் பிரிமியமான காருக்குரிய அந்தஸ்தை வழங்குகிறது. புதிய அர்காமிஸ் ஆடியோ சிஸ்டம் மிக துல்லியமான தரத்தில் பாடல்களை வழங்கும்.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500... பழசு Vs புதுசு!!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் முக்கிய மாற்றமாக அதிக சக்தியை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 155 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. பழைய எஞ்சினை விட குறைவான அதிர்வுகள் மற்றும் குறைவான எஞ்சின் சுழல்வேகத்தில் அதிக டார்க் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய டர்போசார்ஜர் மூலமாக இது சாத்தியமாக்கப்பட்டு இருக்கிறது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500... பழசு Vs புதுசு!!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி க்ரிம்ஸன் ரெட், மிஸ்டிக் காப்பர் என்ற இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது. இதுதவிர, ஒபுலென்ட் பர்ப்புள், வல்கானோ பிளாக், லேக் சைடு பிரவுன், பியர்ல் ஒயிட் மற்றும் மூன்டஸ்ட் சில்வர் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500... பழசு Vs புதுசு!!

வழக்கம்போல் இதன் ரகத்தில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாகவும், புதுமையான வசதிகளை தரும் மாடலாகவும் வந்துள்ளது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500. வாடிக்கையாளர் மத்தியிலும் இந்த புதிய மாடலுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra claims that the XUV500 has always been a fully-loaded SUV, ever since its launch in 2011. Now, with the third XUV500 model launched, what has changed from before?
Story first published: Saturday, April 21, 2018, 11:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X