ஸைலோ கார் தயாரிப்பு நிறுத்தமா? மஹிந்திரா நிறுவனம் பதில்

மஹிந்திர நிறுவனம் தற்போது ஸைலோ காரின் விற்பனையை நிறுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும், மராஸ்ஸோவின் வருகைக்கு பிறகு ஸைலோவின் விற்பனை சரிந்தால் அது குறித்து அப்பொழுது முடிவு செய்யப்படும் என அந்

By Balasubramanian

மஹிந்திரா நிறுவனம் தற்போது ஸைலோ காரின் விற்பனையை நிறுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும், மராஸ்ஸோவின் வருகைக்கு பிறகு ஸைலோவின் விற்பனை சரிந்தால் அது குறித்து அப்பொழுது முடிவு செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக எம்பிவி ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸைலோ விரைவில் தனது தயாரிப்பை நிறுத்திக்கொள்ளும் என தெரிகிறது.

ஸைலோ கார் தயாரிப்பு நிறுத்தமா? மஹிந்திரா நிறுவனம் பதில்

மஹிந்திரா நிறுவனம் நேற்று தனது எம்பிவி காரா மாராஸ்ஸோ என்ற காரை அறவித்தது. இந்த கார் டொயோட்டா இன்னோவா க்ரெட்டா காருக்கு நேரடி போட்டியாக திகழும். மேலும் இந்த கார் மஹிந்திரா நிறுவனத்தில் ஏற்கனவே வெளியான ஸைலோ காருக்கு மாற்றாக இந்த கார் இருக்கும் என பேசப்பட்டது.

ஸைலோ கார் தயாரிப்பு நிறுத்தமா? மஹிந்திரா நிறுவனம் பதில்

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மஹிந்திரா நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஸைலோ காரின் தயாரிப்பை நிறுத்துவதற்கான தேவை ஏற்படும் வரை அந்த கார் தயாரிக்கப்படும் எனவும் தற்போது 700-800 ஸைலோ கார்கள் ஆண்டிற்கு தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஸைலோ கார் தயாரிப்பு நிறுத்தமா? மஹிந்திரா நிறுவனம் பதில்

மாராஸ்ஸோ காரின் வருகைக்கு பிறகு ஸைலோவின் விற்பனை குறைந்து தயாரிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு சென்றால் அந்த காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்யும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸைலோ கார் தயாரிப்பு நிறுத்தமா? மஹிந்திரா நிறுவனம் பதில்

மஹிந்திரா ஸைலோ காரை பொருத்தவரை கடந்த 2009ம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்து வருகிறது. இந்த கார் அந்நிறுவனம் நாசிக்கில் வைத்திருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரை தயாரிக்க 550 கோடி ரூபாய் செலவு செய்ய அந்நிறுவனம் திட்டடமிட்டது.

ஸைலோ கார் தயாரிப்பு நிறுத்தமா? மஹிந்திரா நிறுவனம் பதில்

மஹிந்திர ஸைலோ நிறுவனம் அந்நிறுவனத்தின் எம்பிவி செக்மெண்டில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இருந்தாலும் இதற்கு நேரடி போட்டியாக உள்ள டொயோட்டா இன்னோவாவின் விற்பனையை இந்த காரால் மிஞ்ச முடியவில்லை. எனினும் ஒரு குறிப்பிடத்தக்க நல்ல விற்பனையை இந்த கார் பெற்றது.

ஸைலோ கார் தயாரிப்பு நிறுத்தமா? மஹிந்திரா நிறுவனம் பதில்

மேலும் 2011ம் ஆண்டு மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமாகியது. அதன் பின் ஸைலோ விற்பனை மெதுவாக குறைய துவங்கியது. இதை சமாளிக்க மஹிந்திரா நிறுவனம் 2012ம் ஆண்டு ஸைலோ காரின் பேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. ஆனாலும் தொடர்ந்து அப்டேட்களை பெறாததால் அதன் விற்பனை வெகுவாக குறைந்தது.

ஸைலோ கார் தயாரிப்பு நிறுத்தமா? மஹிந்திரா நிறுவனம் பதில்

மஹிந்திரா ஸைலோ நிறுவனம் தற்போது டி2, டி4, எச்4 மற்றும் எச்8 ஆகிய 4 வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் டி வேரியன்ட் கார்களில் 2.5 லிட்டர் எம்டிஐஇ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 94 பிஎச்பி பவரையும், 218 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஸைலோ கார் தயாரிப்பு நிறுத்தமா? மஹிந்திரா நிறுவனம் பதில்

மேலும் எச்4 எச்8 என்ற வேரியன்ட்களில் 2.2 லிட்டர் எம் ஹாக் இன்ஜினை கொண்டது. இது 120 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த இரண்டு இன்ஜின்களிலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஸைலோ கார் தயாரிப்பு நிறுத்தமா? மஹிந்திரா நிறுவனம் பதில்

மஹிந்திரா நிறுவனம் நேற்று பெயர் வெளியிட்ட மராஸ்ஸோ கார் இந்தாண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸைலோ விற்பனை நிறுத்தப்படுவதற்குள் மராஸ்ஸோ எம்பிவி செக்மெண்டில் நல்ல விற்பனையை எட்டி விடும் என அந்நிறுவனம் நம்புகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Xylo will not stop Production In India. Read in Tamil
Story first published: Wednesday, August 1, 2018, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X