டாக்ஸியாக மாறுகிறது ஆல்டோ கார்; ஓலா உபேருக்கு அடிச்சது “லக்”

மாருதி நிறுவனம் ஆல்டோ காரை டாக்ஸியாக பயன்படுத்தும் வகையில் அதன் டூர் வேரியன்டை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

By Balasubramanian

மாருதி நிறுவனம் ஆல்டோ காரை டாக்ஸியாக பயன்படுத்தும் வகையில் அதன் டூர் வேரியன்டை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் விலை குறைவாக இருப்பதால் ஓலா, உபேர் களில் நீங்கள் டாக்ஸி புக் செய்தால் இனி ஆல்டோ கார் அதிகமாக வரும் என எதிர்பார்க்கலாம். ஓலா உபேர் மூலம் கார் ஓட்டுபவர்களும் இனி அதிக கார்களை இயக்க முடியும்.

டாக்ஸியாக மாறுகிறது ஆல்டோ கார்; ஓலா உபேருக்கு அடிச்சது “லக்”

ஒரு நாட்டில் விற்பனையாகும் சந்தையில் 50 சதவீத பங்கை ஒரு நிறுவனம் வைத்திருக்கிறது என்றால் உலகிலேயே அது மாருதி சுஸூகி நிறுவனம் தான். மாருதி நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவர்கள் வழங்கும் கொடுக்கும் காசுக்கு ஏற்ற பொருள் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் உண்டு பண்ணியது தான்.

டாக்ஸியாக மாறுகிறது ஆல்டோ கார்; ஓலா உபேருக்கு அடிச்சது “லக்”

இந்நிறுவனம் இந்திய மக்களின் தேவையை அறிந்து அனைத்து தரமான மக்களுக்கும் ஏற்ற கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஏன் இந்தியில் குறைந்த எண்ணிக்கையிலா டாக்ஸி ஆப்ரேட்டர்களையும் மனதில் வைத்து அதற்கு தகுந்த கார்களை விற்பனை செய்கிறது.

டாக்ஸியாக மாறுகிறது ஆல்டோ கார்; ஓலா உபேருக்கு அடிச்சது “லக்”

இந்தியாவில் தற்போது செல்போன் ஆப் மூலம் கேப் புக் செய்யும் ஆப்ஷன்கள் வந்த பின்பு டாக்ஸியின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கேப்ஸ்களை புக் செய்தால் மாருதி வேகன் ஆர், மாருதி ஸிப்ட் டிசையர் ஆகிய கார்கள் அதிகமாக ஏன் சிறிய கார்களான ஆல்டோ, டட்சன் கோ ஆகிய கார்களும் டாக்ஸிகளாக செயல்பட்டு வருகிறது.

டாக்ஸியாக மாறுகிறது ஆல்டோ கார்; ஓலா உபேருக்கு அடிச்சது “லக்”

மாருதி நிறுவனம் தற்போது ஆல்டோ கார் டாக்ஸிக்கு ஏற்ற கார் என கருதுகிறது. இதனால் அந்த காரின் டூர் வேரியன்டை வெளியிட விரும்புகிறது. இது பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை என்றாலும் இந்த கார் குறித்த ப்ரவுச்சர் வெளியாகியுள்ளது.

டாக்ஸியாக மாறுகிறது ஆல்டோ கார்; ஓலா உபேருக்கு அடிச்சது “லக்”

தற்போது ஆல்டோ கார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. ஆல்டோ 800 வா ஆல்டோ கே10 காரா என்பது குறித்த தகவல் இல்லை. இந்த காரில் ஏசி மற்றும் பவர் ஸ்டிரீங் ஆகிய வசதிகள் இருக்கிறது. ஏர் பேக் டிரைவர் சீட்டிற்கு மட்டும் ஆப்ஷனாக வருகிறது.

டாக்ஸியாக மாறுகிறது ஆல்டோ கார்; ஓலா உபேருக்கு அடிச்சது “லக்”

என்ட்ரி லேவல் ஆல்டோ 800 ஸ்டாண்டர்டு மாடல் ரூ 2.51 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஆல்டோ கே10 எல்எக்ஸ் வேரியன்ட் ரூ 3.3 லட்ம் விலைக்க விற்பனை செய்யப்படுகிறது. டூர் வேரியன்டை பொருத்தவரை அதுவும் இதே விலையில் தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இதன் சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட கார்கள் ரூ 60 - 70 ஆயிரம் அதிகமாக இருக்கலாம்.

டாக்ஸியாக மாறுகிறது ஆல்டோ கார்; ஓலா உபேருக்கு அடிச்சது “லக்”

தற்போது மாருதி கார்கள் டூர் கார்களாக ஸிப்ட், எக்கோ, செலிரியோ, ஆகிய கார்களை விற்பனை செய்கிறது. புதிதாக வெளிவரவுள்ள எர்டிகா காரும் இந்த டூர் வேரியன்டில் வெளியாகிறது.

டாக்ஸியாக மாறுகிறது ஆல்டோ கார்; ஓலா உபேருக்கு அடிச்சது “லக்”

இதன் மூலம் தற்போது ஓலோ உபேர் போன்ற நிறுவனங்களில் தங்கள் கார்களை இணைக்க பலர் முன் வருவார்கள் பிஸியான நேரத்தில் சில இடங்களில் தற்போது ஓலா உபேர் போன்ற டாக்ஸிகள் கிடைக்காமல் போகும். இனி அந்த பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
2018 Maruti Alto taxi launched in India.Read in Tamil
Story first published: Wednesday, August 1, 2018, 14:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X