ஹோண்டா அமேஸ் வருகை: மாருதி டிசையர் விற்பனையில் சுணக்கம்!!

விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 மாடலாக இருந்து வந்த மாருதி டிசையர் கார் கடந்த மாதம் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு பின்தங்கியது. புதிய ஹோண்டா அமேஸ் வருகை காரணமாக, மாருதி டிசையர் விற்பனையில் சிறிது

விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 மாடலாக இருந்து வந்த மாருதி டிசையர் கார் கடந்த மாதம் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு பின்தங்கியது. புதிய ஹோண்டா அமேஸ் வருகை காரணமாக, மாருதி டிசையர் விற்பனையில் சிறிது சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

ஹோண்டா அமேஸ் வருகை: மாருதி டிசையர் விற்பனையில் சுணக்கம்!!

மாருதி சுசூகி நிறுவனத்தின் உன்னத படைப்பான டிசையர் கார் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையில் விற்பனையில் தொடர்ந்து இந்தியாவின் நம்பர்-1 கார் மாடலாக இருந்து வந்தது. இந்த நிலையில், அண்மையில் வெளிவந்த புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனையில் மிகச் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

ஹோண்டா அமேஸ் வருகை: மாருதி டிசையர் விற்பனையில் சுணக்கம்!!

இதன் எதிரொலியால் மாருதி டிசையர் கடந்த மாதம் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 25,647 டிசையர் கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 21,990 டிசையர் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

ஹோண்டா அமேஸ் வருகை: மாருதி டிசையர் விற்பனையில் சுணக்கம்!!

புதிய ஹோண்டா அமேஸ் காரின் வருகை காரணமாகவே, டிசையர் விற்பனையில் சற்று சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் 10,180 அமேஸ் கார்களும், ஆகஸ்ட் மாதத்தில் 9,644 அமேஸ் கார்களும் விற்பனையாகி இருக்கின்றன. ஹோண்டா அமேஸ் காரின் வருகை புதிய மாருதி டிசையர் காருக்கு கடும் போட்டியை கொடுத்துள்ளது.

ஹோண்டா அமேஸ் வருகை: மாருதி டிசையர் விற்பனையில் சுணக்கம்!!

இந்த புதிய ஹோண்டா அமேஸ் காரில் உள்ள பல புதிய தொழில்நுட்பங்கள் இதன் முந்தைய கார்களை விடை சிறப்பாய் அமைந்தது பெரும்பலம் . இந்த மேம்பாடுகள் இதனை முதல் இடத்தில வைக்க ஏதுவாய் அமைந்தன. காரின் உள்பக்கம் பல வித மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இதன் நீளம் இன்னும் 4 மீட்டர் என்ற அளவிலேயே உள்ளது.

ஹோண்டா அமேஸ் வருகை: மாருதி டிசையர் விற்பனையில் சுணக்கம்!!

இந்த இரண்டாம் யுக ஹோண்டா அமேஸ் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும்1.5 லிட்டர் டீசல் என்ஜின் மாடல்களில் கிடைக்கிறது. இது இரண்டுமே அதீத செயல்பாடு கொண்டவைகள் தாம். ஹோண்டா அமேஸ் பெட்ரோல் 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க்கையும் அளிக்க வல்லது. மற்றொரு புறம் டீசல் என்ஜின் 99BHP திறனையும் 200NM டார்க்கையும் அளிக்க வல்லது. இந்த என்ஜின்கள் 5 ஸ்பீட் மேனுவல் அல்லது 7 ஸ்டெப் CVT தொழில்நுட்பத்தால் ஆனா கியரில் இயங்க வல்லது. மேலும் டீசல் வாகன பிரிவில் CVT கியர் கொண்ட ஒரே வாகனம் ஹோண்டா அமேஸ் தான்.

ஹோண்டா அமேஸ் வருகை: மாருதி டிசையர் விற்பனையில் சுணக்கம்!!

மறுபுறத்தில், மாருதி டிசையர் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இந்த நிலையில், இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் டிசையருடன் மல்லுக் கட்ட துவங்கி விட்டது.

ஹோண்டா அமேஸ் வருகை: மாருதி டிசையர் விற்பனையில் சுணக்கம்!!

இத்துணை போட்டிகளையும் தாண்டி மாருதி சுசூகி தனது விற்பனை சாதனையை படத்தைதான் காரணம் முப்பது ஆண்டு காலமாக அதனின் விரிந்த விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை மய்யங்களே. ஹோண்டா நிறுவனத்திற்கு அப்படியோர் செல்வாக்கு அமைய இன்னும் சிறுது காலம் ஆகும்.

ஹோண்டா அமேஸ் வருகை: மாருதி டிசையர் விற்பனையில் சுணக்கம்!!

விலைப்பட்டியல் வரிசையில் மாருதி டிசையர் ரூ.5.45 லட்சத்தை தன் ஆரம்ப விலையாக கொண்டுள்ளது. ஹோண்டா அமேஸ் வாகனம் சற்றே உயர்ந்து ரூ.5.60 லட்ச ஆரம்ப விலையில் கிடைக்கிறது. மேற்படி கூறிய அனைத்து கோட்பாடுகளையும் மனதில் கொண்டால், இவை இரண்டுமே அதற்கேற்ற தனி ஸ்டைலில் முத்திரை பதித்துள்ளன. ஆகவே வாடிக்கையாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு இரண்டில் ஒன்றை தொடலாம்.

ஹோண்டா அமேஸ் வருகை: மாருதி டிசையர் விற்பனையில் சுணக்கம்!!

இந்த காம்பெக்ட் செடான் வாகனங்கள் இந்திய ஆட்டோமொபைல் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் குறைந்த விலை நிரந்த தரம் மற்றும் எரிபொருள் சிக்கனம் போன்றவை இதன் பக்கம் மக்களை இழுக்கிறது. ஹட்ச் பாக் வாகன விரும்பிகள் இந்த காம்பெக்ட் செடான் அல்லது சிறிய வகை ஸ்மாலர் செடான் கொண்டு பயணத்தை மிருதுவாக்கலாம்.

Most Read Articles
English summary
Maruti Dzire Becomes Second Best-Selling Car In India After Four Months: The Maruti Suzuki Dzire has been a big seller ever since its third iteration was launched last year. The compact-sedan, based on the popular Swift hatchback, is available in petrol and diesel formats. The new model can also be opted with an AGS (Auto Gear-Shift) AMT unit; another thing which increases its desirability.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X