மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர், பிரெஸ்ஸா கார்களுக்கு மலைபோல் குவிந்த புக்கிங்!!

மாருதி கார், மாருதி கார் விற்பனை, மாருதி கார் புக்கிங், மாருதி கார் காத்திருப்பு காலம், மாருதி ஸ்விஃப்ட், மாருதி டிசையர், மாருதி பலேனோs

By Saravana Rajan

நாட்டின் மொத்த கார் விற்பனையில் 50 சதவீத மார்க்கெட் பங்களிப்பை மாருதி கார் நிறுவனம் பெற்றிருக்கிறது. மேலும், மாருதி பிராண்டில் அறிமுகமாகும் பெரும்பாலான கார்களுக்கு அபரிதமான புக்கிங் கிடைப்பதும் வழக்கமான விஷயம்தான்.

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர், பிரெஸ்ஸா கார்களுக்கு மலைபோல் குவிந்த புக்கிங்!!

அந்த வகையில், தற்போது புதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய 4 கார்களுக்கும் எக்கச்சக்கமான முன்பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. மொத்தமாக 1.10 லட்சம் வாடிக்கையாளர்கள் மேற்கண்ட 4 கார்களையும் முன்பதிவு செய்துவிட்டு காத்து கிடக்கின்றார்கள்.

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர், பிரெஸ்ஸா கார்களுக்கு மலைபோல் குவிந்த புக்கிங்!!

ஏற்கனவே, புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு மாதங்களிலேயே 1 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். கடந்த இரண்டு மாதங்களாக விற்பனையில் டாப் 10 பட்டியலில் மாருதி ஸ்விஃப்ட் 4வது இடத்தில் இருந்து வருகிறது.

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர், பிரெஸ்ஸா கார்களுக்கு மலைபோல் குவிந்த புக்கிங்!!

அதேபோன்று, மாருதி டிசையர் காரின் விற்பனையும் படு அசத்தலாக இருந்து வருகிறது. மாதத்திற்கு 18,000 கார்கள் என்ற சராசரி அளவில் சென்று கொண்டிருக்கிறது. முதல் 5 மாதங்களில் விற்பனையில் 1 லட்சம் யூனிட்டுகளை கடந்து சாதனை படைத்தது

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர், பிரெஸ்ஸா கார்களுக்கு மலைபோல் குவிந்த புக்கிங்!!

இந்த கார்களை புக்கிங் செய்து மாதக் கணக்கில் வாடிக்கையாளர்கள் காத்து கிடக்கின்றனர். இந்த சூழலில், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைந்து டெலிவிரி கொடுக்கும் பணிகளில் மாருதி கார் நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது.

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர், பிரெஸ்ஸா கார்களுக்கு மலைபோல் குவிந்த புக்கிங்!!

புதிதாக அமைக்கப்பட்ட குஜராத் ஆலையில் மாருதி பலேனோ கார் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரே ஒரு உற்பத்தி பிரிவில் பலேனோ உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், குஜராத் ஆலையில் 2 புதிய கார் உற்பத்தி பிரிவுகளை அமைத்து உற்பத்தியை அதிகரிக்க மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி திட்டமிட்டுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர், பிரெஸ்ஸா கார்களுக்கு மலைபோல் குவிந்த புக்கிங்!!

ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக மேம்பபடுத்தப்பட இருக்கிறது. 2020ம் ஆண்டில் இந்த ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 7.5 லட்சம் யூனிட்டுகளாக அதிகரிக்கப்பட இருக்கிறது. இதன்மூலமாக, அனைத்து மாருதி கார்களின் காத்திருப்பு காலமும் வெகுவாக குறையும் வாய்ப்பு ஏற்படும்.

Source: Moneycontrol

Most Read Articles
English summary
Maruti Suzuki has been recording a high demand for their Swift, Baleno, Dzire and Vitara Brezza offerings in India. The four cars combined, have registered 1,10,000 units of pending orders, waiting to be delivered to customers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X