இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

இந்தியாவில் இதுவரை வேறு எந்த காராலும் நிகழ்த்த முடியாத புதிய சாதனை ஒன்றை மாருதி சுஸுகி பலினோ படைத்துள்ளது. இதனால் ஹோண்டா, ஹூண்டாய் நிறுவனங்கள் துவண்டு போயுள்ளன.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்று பலினோ (Baleno). பிரீமியம் ஹேட்ச்பேக் வகையை சேர்ந்த பலினோ கார், கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் ஒரு அங்கமாக, இந்தியாவில் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது பலினோ கார். இந்தியாவில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் கார் என்ற பெருமையும் பலினோவுக்கு உள்ளது.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

ஜப்பான் தவிர ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலும் பலினோ காருக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அப்படி இருக்கையில் உள்ளூரான இந்தியாவில் மட்டும் பலினோ கோட்டை விட்டு விடுமா என்ன?

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதலே, பழைய சாதனைகள் பலவற்றை அடித்து நொறுக்கி விட்டு, புதிய சாதனைகளை வரிசையாக படைத்து கொண்டு வருகிறது பலினோ. இன்னும் சொல்லப்போனால் விராட் கோஹ்லி போல.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, டெஸ்ட், ஒரு நாள், டி20 என எந்த வகை போட்டியில் களமிறங்கினாலும், அந்த நாளில் ஏதாவது ஒரு புதிய சாதனையை படைத்து விடுகிறார். பலினோ காரும் கிட்டத்தட்ட அப்படித்தான்.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

பல்வேறு புதிய சாதனைகளை வரிசையாக படைத்து வருகிறது. இந்த வகையில் மற்றொரு இமாலய சாதனை ஒன்றை, பலினோ தற்போது படைத்துள்ளது. ஹூண்டாய் ஐ20, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களை உள்ளடக்கிய இந்த செக்மெண்ட்டில் இதுவரை வேறு எந்த காரும் படைக்காத சாதனை அது.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

அப்படி என்ன சாதனை என கேட்கிறீர்களா? 5 லட்சம் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது பலினோ. ஆம், இந்தியாவில் தற்போது பலினோ காருக்கு 5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாருதி சுஸுகி பலினோ லான்ச் செய்யப்பட்டு சுமார் 38 மாதங்கள்தான் ஆகிறது.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

அதற்குள்ளாக 5 லட்சம் வாடிக்கையாளர்களை பலினோ கார் சென்றடைந்துள்ளது. இந்த செக்மெண்ட்டில் மிகவும் குறுகிய காலத்தில், அதாவது வெகு வேகமாக 5 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லை எட்டிய முதல் கார் மாருதி சுஸூகி பலினோதான்.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

மாதந்தோறும் வெளியாகும் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி பலினோ தவறாமல் இடம்பிடித்து வருகிறது. ஒரு மாதத்திற்கு சராசரியாக 13,157 பலினோ கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்து வருகிறது. இதனை ஒரு நாளைக்கு சராசரியாக 438 கார்கள் என்றும் கூட சொல்லலாம்.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்றொரு முன்னணி தயாரிப்பான ஸ்விப்ட், 20 லட்சம் கார்கள் விற்பனை என்ற பிரம்மாண்ட மைல்கல்லை, கடந்த சில நாட்களுக்கு முன்தான் எட்டியது. இந்திய மார்க்கெட்டில் ஸ்விப்ட் கார், கடந்த 2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

ஸ்விப்ட் காரின் இமாலய சாதனை குறித்த செய்தி வெளியான ஒரு சில தினங்களில், பலினோ காரின் புதிய சாதனை குறித்த செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி நிறுவனமானது தனது பிரீமியம் நெக்ஸா அவுட்லெட்கள் மூலமாக பலினோ காரை விற்பனை செய்து வருகிறது.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

ஆப்பிள் கார் பிளே மற்றும் பகல் நேரத்திலும் எரியும் எல்இடி விளக்குகள், எல்இடி டெய்ல் லேம்ப்ஸ் உள்ளிட்ட பிரீமியம் வசதிகளை பெற்ற மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் ஒரு சில கார்களில் பலினோவும் ஒன்று என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

திருட்டிற்கு எதிரான பாதுகாப்பு சிஸ்டம் (Anti-theft Security System), இபிடி உடனான ஏபிஎஸ் மற்றும் ட்யூயல் ஏர் பேக்ஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களை, பலினோ காரின் அனைத்து வேரியண்ட்களிலும் மாருதி சுஸுகி ஸ்டாண்டர்டாக வழங்கி வருகிறது.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் பலினோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவர், 115 என்எம் டார்க் திறனை உருவாக்கக்கூடியது.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

அதே நேரத்தில் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவர், 190 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. இதுதவிர பெர்ஃபார்மென்ஸ் சார்ந்த பலினோ ஆர்எஸ் காரையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

மாருதி சுஸுகி நிறுவனம் பலினோ காரில் இதுவரையிலும் எந்தவிதமான அப்டேட்டையும் செய்யவில்லை. அப்படி இருந்தும் கூட பலினோவின் விற்பனை சக்கை போடு போட்டு வருகிறது. உண்மையில் வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக, பலினோவின் உற்பத்தியை மாருதி சுஸுகி சமீபத்தில் அதிகரித்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இந்த சாதனையை படைத்த முதல் கார்... தெறிக்க விட்ட பலினோவால் துவண்டு போன ஹூண்டாய், ஹோண்டா

ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுடன் மாருதி சுஸுகி பலினோ போட்டியிட்டு வருகிறது. ஆனால் இந்த கார்களுடன் ஒப்பிடுகையில், ஒவ்வொரு மாதமும் பலினோ கார்கள்தான் அதிகம் விற்பனையாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Baleno Achieves New Milestone: Fastest Car To Cross 5 Lakh Sales Mark. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X