ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியே கசிந்தது

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு இந்திய ராணுவம் சிரமப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ ஆதாரம் வெளியே கசிந்துள்ளது.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு இந்திய ராணுவம் சிரமப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ ஆதாரம் வெளியே கசிந்துள்ளது.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

உலகின் மிகவும் வலிமையான ராணுவங்களில் ஒன்றான இந்திய ராணுவம் பயன்படுத்தி வரும் முக்கியமான கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஜிப்ஸி. கடந்த 1991ம் ஆண்டில் இருந்து ஜிப்ஸி கார்களை இந்திய ராணுவம் உபயோகித்து வருகிறது.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

ஜிப்ஸி காரினுடைய பாடி லைட்வெயிட்டானது. ஆஃப் ரோடு டிரைவிங்கிற்கு ஏற்ற காராக ஜிப்ஸி திகழ்வதற்கு இதுவும் மிக முக்கியமான காரணம். ஆஃப் ரோடு பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களின் பேவரைட் காராக இன்றளவும் ஜிப்ஸிதான் உள்ளது என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

பாலைவனம், மலை பிரதேசம் என மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் இந்திய ராணுவம் பணியாற்றி வருகிறது. எனவேதான் ஆஃப் ரோடிற்கு ஏற்ற ஜிப்ஸி கார்கள் இந்திய ராணுவ வீரர்களால் மிக நீண்ட வருடங்களாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

என்றாலும் அவ்வப்போது ஜிப்ஸி காரும் கூட காலை வாரி விட்டு விடும் என்பதை அப்படியே மறுத்து விட முடியாது. இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்றது.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

ஜெய்சால்மர் பகுதியில் உள்ள பாலைவனத்தின் தளர்வான மணலில் மாருதி சுஸுகி ஜிப்ஸி கார் சிக்கி கொண்டது. வழக்கமாக குழிகளிலும், சேற்றிலும் இது போன்று சிக்கி கொள்ளும் கார்களை, புல்டோசர் அல்லது பெரிய கிரேன்களை கொண்டு மீட்பதை நீங்கள் சாலைகளில் பார்த்திருக்க கூடும்.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

ஆனால் பாலைவன மணலில் சிக்கி கொண்ட ஜிப்ஸியை மீட்க இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் வினோதமான முறையில் டாங்கியை பயன்படுத்தினர். ஆம், போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் டாங்கியை கொண்டுதான் ஜிப்ஸி காரை இந்திய ராணுவ வீரர்கள் மீட்டனர்.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

டாங்கியை கொண்டு ஒரு வாகனத்தை மீட்பது என்பது பொதுவான ஓர் விஷயம் அல்ல. இது மிகவும் அரிதான ஓர் விஷயம். ஜிப்ஸி காரை மீட்க இந்திய ராணுவம் பயன்படுத்தியது டி90 பீஷ்மா (T90 Bhishma) டாங்கி என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

ஜிப்ஸி காரை மீட்பது என்பது புல்டோசர், கிரேன் போன்ற வாகனங்களுக்கு சற்றே கடினமான விஷயமாக இருக்கலாம். என்றாலும் போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் டாங்கிக்கு இது ஒரு விஷயமே அல்ல. ஆனால் இது ஓர் அரிதான விஷயம்.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

பாலைவன மணலில் சிக்கி கொண்ட மாருதி சுஸுகி ஜிப்ஸி காரை இந்திய ராணுவ வீரர்கள் டாங்கியை கொண்டு மீட்கும் வீடியோவை Shantonil Nag என்பவர் வெளியிட்டுள்ளார். அதனை நீங்கள் கீழே காணலாம்.

டாங்கியை கொண்டு எளிதாக மீட்டு விட்டாலும் கூட, மாருதி சுஸுகி ஜிப்ஸி கார் அடிக்கது இது போல் சிக்கி கொள்வதால், ராணுவ வீரர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஜிப்ஸி கார்களுக்கு பதிலாக அதிநவீன டாடா சபாரி ஸ்ட்ரோம் கார்கள் இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

இந்திய ராணுவத்திடம் தற்போது ஆயிரக்கணக்கான மாருதி சுஸுகி ஜிப்ஸி கார்கள் உள்ளன. அவற்றுக்கு பதிலாக, அதிநவீன வசதிகளை கொண்ட டாடா சபாரி ஸ்ட்ரோம் கார்கள் படிப்படியாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

எனவே சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் மாருதி சுஸுகி ஜிப்ஸி கார்களுக்கு இந்திய ராணுவம் குட் பை சொல்ல தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் ராணுவத்தை மட்டுமல்லாது இந்திய சாலைகளை விட்டே விடைபெற போகிறது ஜிப்ஸி.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

ஆம், கார்களில் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் பிரேக் மற்றும் ஏர் பேக் போன்ற பாதுகாப்பு வசதிகள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட மிகவும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் வெகு விரைவில் அமலுக்கு வரவுள்ளன.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

இந்த நெறிமுறைகளுக்கு உட்படும் வகையில் ஜிப்ஸி காரை அப்டேட் செய்ய மாருதி சுஸுகி தயாராக இல்லை. எனவே 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஜிப்ஸி காரின் உற்பத்தியை நிறுத்தி விட மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

மாருதி சுஸுகி ஜிப்ஸி கார்கள் கடந்த 1985ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய சாலைகளை விட்டு மாருதி சுஸுகி ஜிப்ஸி பிரியாவிடை பெறவுள்ளது.

ஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியானது

இதனிடையே ஜிப்ஸி கார் பாலைவன மணலில் சிக்கி கொண்ட இடம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மராக இருக்கலாம் என வீடியோ அடிப்படையில் மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் நிகழ்ந்த சரியான இடம் குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.

Most Read Articles

இந்திய ராணுவத்துடனான தங்களது நிறுவனத்தின் நீண்ட கால உறவை போற்றும் வகையில் ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியிட்ட கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Maruti Suzuki Gypsy Rescued By Indian Army's Battle Tank: Video. Read in Tamil
Story first published: Wednesday, November 14, 2018, 13:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X