34 ஆண்டு கால பந்தம் முடிகிறது... ஜிப்ஸிக்கு பிரியாவிடை கொடுக்க கண்ணீருடன் தயாராகிறது இந்தியா...

இந்திய மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்திருந்த ஜிப்ஸி கார், 34 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீருடன் பிரியாவிடை பெறுகிறது.

இந்திய மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்திருந்த ஜிப்ஸி கார், 34 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீருடன் பிரியாவிடை பெறுகிறது.

இந்திய ராணுவத்தின் கிங்... 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய சாலைகளை விட்டு கம்பீரமாக விடைபெறுகிறது ஜிப்ஸி

மாருதி சுஸுகி ஜிப்ஸி கார் கடந்த 1985ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது. அன்று முதல் இன்று வரை இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு காராகவே மாருதி சுஸுகி ஜிப்ஸி திகழ்ந்து வருகிறது.

இந்திய ராணுவத்தின் கிங்... 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய சாலைகளை விட்டு கம்பீரமாக விடைபெறுகிறது ஜிப்ஸி

இந்திய ராணுவத்தின் கிங் என்ற ஒரு செல்லப்பெயர் ஜிப்ஸிக்கு உண்டு. ஆம், கடந்த 1991ம் ஆண்டில் இருந்து ஜிப்ஸி கார்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் பணியாற்றும் இந்திய ராணுவத்திற்கு தோளோடு தோள் கொடுத்த கார் இது.

இந்திய ராணுவத்தின் கிங்... 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய சாலைகளை விட்டு கம்பீரமாக விடைபெறுகிறது ஜிப்ஸி

ராணுவம் மட்டுல்லாது இந்திய அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரும் கூட ஜிப்ஸி கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள மொத்த ஜிப்ஸி கார்களில் 90 சதவீத கார்கள் ராணுவம், அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம்தான் உள்ளது.

இந்திய ராணுவத்தின் கிங்... 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய சாலைகளை விட்டு கம்பீரமாக விடைபெறுகிறது ஜிப்ஸி

ஆப் ரோடு டிரைவிங்கிற்கு ஏற்ற காராக ஜிப்ஸி உள்ளது. எனவே ஆப் ரோடு டிரைவிங் மேற்கொள்வதில் ஆர்வமுள்ள பலரின் தேர்வாக இன்றளவும் ஜிப்ஸி திகழ்ந்து வருகிறது. இப்படி பல்வேறு பெருமைகள் வாய்ந்த ஜிப்ஸி இந்திய சாலைகளை விட்டு பிரியாவிடை பெற போகிறது.

இந்திய ராணுவத்தின் கிங்... 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய சாலைகளை விட்டு கம்பீரமாக விடைபெறுகிறது ஜிப்ஸி

ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், ஏர் பேக் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் கட்டாயமாக கார்களில் இடம்பெற வேண்டும் என்ற மிக கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் இந்தியாவில் வெகு விரைவில் அமலுக்கு வரவுள்ளன.

இந்திய ராணுவத்தின் கிங்... 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய சாலைகளை விட்டு கம்பீரமாக விடைபெறுகிறது ஜிப்ஸி

ஆனால் அந்த விதிகளுக்கு உட்படும் வகையிலான அப்டேட்களை, ஜிப்ஸி காரில் செய்வதற்கு, மாருதி சுஸுகி நிறுவனம் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே 2019ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜிப்ஸி காரின் உற்பத்தி நிறுத்தப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ராணுவத்தின் கிங்... 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய சாலைகளை விட்டு கம்பீரமாக விடைபெறுகிறது ஜிப்ஸி

அதற்கு ஏற்ற வகையில் புதிய ஜிப்ஸி கார்களுக்கான புக்கிங்களையும் முன்கூட்டியே நிறுத்தி விட மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது தற்போது நடந்து கொண்டிருக்கும் நவம்பர் மாதம் முழுக்க புதிய ஜிப்ஸி கார்களுக்கான புக்கிங் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்திய ராணுவத்தின் கிங்... 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய சாலைகளை விட்டு கம்பீரமாக விடைபெறுகிறது ஜிப்ஸி

ஆனால் அடுத்து வரவுள்ள டிசம்பர் மாதத்தில் இருந்து ஜிப்ஸி கார்களுக்கான புக்கிங்களை நிறுத்தி விட மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. எனவே புதிய ஜிப்ஸி காரை வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு.

இந்திய ராணுவத்தின் கிங்... 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய சாலைகளை விட்டு கம்பீரமாக விடைபெறுகிறது ஜிப்ஸி

உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட உள்ளதால், தற்போது புக்கிங் செய்து வரும் வாடிக்கையாளர்களிடம் முழு பணத்தையும் உடனே செலுத்தும்படி, மாருதி சுஸுகி நிறுவன டீலர்கள் வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்திய ராணுவத்தின் கிங்... 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய சாலைகளை விட்டு கம்பீரமாக விடைபெறுகிறது ஜிப்ஸி

மாருதி சுஸுகி ஜிப்ஸி காரில் பொருத்தப்பட்டுள்ள 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 80 பிஎச்பி பவர் மற்றும் 103 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. ஜிப்ஸி கார் சராசரியாக ஒரு லிட்டருக்கு 12 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும்.

இந்திய ராணுவத்தின் கிங்... 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய சாலைகளை விட்டு கம்பீரமாக விடைபெறுகிறது ஜிப்ஸி

ஜிப்ஸி காருக்கு என இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஜிப்ஸி கார் இந்திய சாலைகளை விட்டு விடைபெற இருக்கும் செய்தி, அதன் ரசிகர் பட்டாளங்களை கவலையடைய செய்துள்ளது.

இந்திய ராணுவத்தின் கிங்... 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய சாலைகளை விட்டு கம்பீரமாக விடைபெறுகிறது ஜிப்ஸி

ஜிப்ஸி கார் கடந்த 1985ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அதன் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய சாலைகளை விட்டு பிரியாவிடை பெறுகிறது மாருதி சுஸுகி ஜிப்ஸி.

Most Read Articles

பிரியாவிடை பெறவுள்ள மாருதி ஜிப்ஸி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Maruti Suzuki Gypsy To Be Discontinued By March 2020: Bookings To Stop From December 2018. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X