வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக பலினோ காரின் உற்பத்தியை அதிகரித்தது மாருதி சுஸுகி..

வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக பலினோ காரின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம், பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலினோவை லான்ச் செய்தது. அதிகம் விற்பனையாகும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக பலினோ திகழ்கிறது.

வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக பலினோ காரின் உற்பத்தியை அதிகரித்தது மாருதி சுஸுகி..

கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-5 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி பலினோ தவறாமல் இடம்பிடித்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டது முதல் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 4.5 லட்சம் பலினோ கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக பலினோ காரின் உற்பத்தியை அதிகரித்தது மாருதி சுஸுகி..

இந்தியா மட்டுமல்லாது, ஜப்பான் நாட்டிற்கும் பலினோ கார் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனமானது, இந்தியாவில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்த முதல் தயாரிப்பு பலினோதான் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக பலினோ காரின் உற்பத்தியை அதிகரித்தது மாருதி சுஸுகி..

இதுதவிர கிழக்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், மாருதி சுஸுகி பலினோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் கூட இதே நிலைதான் காணப்படுகிறது.

வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக பலினோ காரின் உற்பத்தியை அதிகரித்தது மாருதி சுஸுகி..

வாடிக்கையாளர்கள் வழங்கிய அமோக ஆதரவின் காரணமாக, பலினோ காருக்கு அதிக டிமாண்ட் நிலவி வந்தது. இதனால் பலினோ காருக்கான காத்திருப்பு காலமும் (Waiting Period) அதிகமாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் வெயிட்டிங் பீரியட் 9 மாதங்கள் வரை சென்றது.

வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக பலினோ காரின் உற்பத்தியை அதிகரித்தது மாருதி சுஸுகி..

அதாவது பலினோ கார் டெலிவரி கிடைக்க வேண்டும் என்றால், வாடிக்கையாளர்கள் 9 மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்ற சூழல் நிலவியது. எனவே தட்டுப்பாட்டை குறைப்பதற்காக, பலினோ காரின் உற்பத்தியை அதிகரிக்க மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்தது.

வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக பலினோ காரின் உற்பத்தியை அதிகரித்தது மாருதி சுஸுகி..

உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே வாடிக்கையாளர்களின் வெயிட்டிங் பீரியட்டை குறைக்க முடியும் என மாருதி சுஸுகி நிறுவனம் நம்பியது. இதன்படி கடந்த 8 மாதங்களில் மட்டும், பலினோ காரின் உற்பத்தியானது, 34 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக பலினோ காரின் உற்பத்தியை அதிகரித்தது மாருதி சுஸுகி..

உற்பத்தி அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, கடந்த 8 மாதங்களில், மாருதி சுஸுகி பலினோ காரின் சராசரி மாத விற்பனை 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி-ஆகஸ்ட் மாதம் வரையிலான கால கட்டத்தில், பலினோ காரின் சராசரி மாத விற்பனை வெறும் 14 ஆயிரமாக மட்டுமே இருந்தது.

வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக பலினோ காரின் உற்பத்தியை அதிகரித்தது மாருதி சுஸுகி..

இந்தியாவில், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களில் பலினோ விற்பனையாகிறது. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவர், 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். அதே நேரத்தில் டீசல் இன்ஜினானது அதிகபட்சமாக 75 பிஎச்பி பவர், 190 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.

Most Read Articles

மாருதி சுஸுகி பலினோ குறித்த செய்தியை மேலே படித்தீர்கள். இங்கே மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்றொரு முன்னணி மாடலான புதிய 2018 ஸ்விப்ட் காரின் ஆல்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

English summary
Maruti Suzuki Increased Production of Baleno To Cut Down Waiting Period. Read in Tamil
Story first published: Saturday, September 15, 2018, 18:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X