நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

மாருதி சுசூகி நிறுவனமானது, இலவச சிறப்பு சர்வீஸ் முகாமை நாடு முழுவதும் நடத்துகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில், கார்கள் இலவசமாக சர்வீஸ் செய்து தரப்படவுள்ளன.

By Arun

மாருதி சுசூகி நிறுவனமானது, இலவச சிறப்பு சர்வீஸ் முகாமை நாடு முழுவதும் நடத்துகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில், கார்கள் இலவசமாக சர்வீஸ் செய்து தரப்படவுள்ளன. மாருதி சுசூகி நிறுவன கார் உரிமையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

புதிய தீம் உடன் உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பு ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினம் வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. 'பிளாஸ்டிக் மாசுபாட்டை அழிப்போம்' என்பதுதான் நடப்பாண்டிற்கான தீம்.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு, உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஏற்படுத்தப்படும். அரசாங்கங்கள், என்ஜிஓக்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இந்த பணியில் ஈடுபடுவார்கள்.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

கைகோர்த்தது மாருதி சுசூகி

அவர்களுடன் இம்முறை மாருதி சுசூகி நிறுவனமும் இணைந்துள்ளது. ஆம், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாருதி சுசூகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மாருதி சுசூகி நிறுவன கார்களுக்கு, இலவச சர்வீஸ் என்பதுதான், அந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்பு.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

சுற்றுச்சூழலை மாசாக்குவதில் கார்களுக்கு பெரும் பங்கு

நமது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் கார்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. கார்களின் எண்ணிக்கை அபரிமிதமான முறையில் பெருகி வருவதால், சுற்றுச்சூழலின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட விஷ வாயுக்களை கார்கள் வெளிவிடுகின்றன. குளோபல் வார்மிங், அமில மழை ஏற்பட இவைதான் முக்கிய காரணம். இதனால் சுற்றுச்சூழலோடு சேர்த்து, மனிதர்களின் உடல் நலமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

சர்வீஸ் செய்தால் ஓரளவு தவிர்க்கலாமே...

குறிப்பாக பழைய மற்றும் மோசமான முறையில் பராமரிக்கப்படும் கார்களால்தான், சுற்றுச்சூழலுக்கு அதிக ஆபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே கார்களை சரியான முறையில் சர்வீஸ் செய்வதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை ஓரளவிற்கு தவிர்க்கலாம்.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

என்னவெல்லாம் செய்யறாங்க...

எனவேதான், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இலவச சர்வீஸ் என்ற அறிவிப்பை மாருதி சுசூகி நிறுவனம் செய்துள்ளது. இந்த இலவச சர்வீஸ் சிறப்பு முகாமில், மாசு கட்டுப்பாட்டு சோதனை, ஏர் மற்றும் ப்யூயல் பில்டர் ஆய்வு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

ஸ்பார்க் ப்ளக் மற்றும் ப்யூயல் ஓஸ் ஆகியவையும் சரிபார்க்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இது மட்டும் அல்லாமல், கார் டிரை வாஸ் செய்யப்பட்டும் தரப்படும். தண்ணீரை சேமிப்பதற்காகதான் டிரை வாஸ் மட்டும் செய்கிறோம் என மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

இந்த இலவச சர்வீஸ் சிறப்பு முகாமில், காரின் மூலமாக சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், இலவசமாக சர்வீஸ் செய்யப்பட்டு தரப்படும். எஸ்ஐஏஎம் (Society of Indian Automobile Manufacturers) என்ற அமைப்புடன் இணைந்து, இந்த இலவச சிறப்பு முகாமை, மாருதி சுசூகி நிறுவனம் நடத்துகிறது.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

2 ஆயிரம் சர்வீஸ் சென்டர்களில்...

மாருதி சுசூகி நிறுவனத்திற்கு என நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற டீலர் ஒர்க் ஷாப்கள் உள்ளன. இந்த சர்வீஸ் சென்டர்கள் அனைத்திலும், வரும் ஜுன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை, இலவச சர்வீஸ் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

மாருதி சுசூகி நிறுவனத்தின் காரை வைத்திருப்பவர்கள், அருகாமையில் உள்ள சர்வீஸ் சென்டர்களை, ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை அணுகி பயன்பெறலாம்.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

இந்த இலவச சர்வீஸ் முகாம் மூலமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிப்பு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் என மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் (சர்வீஸ்) பார்த்தோ பானர்ஜி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

பசுமையான சுற்றுச்சூழலுக்கு மாற வாகனங்களை நன்கு சர்வீஸ் செய்வது அவசியம் எனவும் பார்த்தோ பானர்ஜி தெரிவித்துள்ளார். மாருதி சுசூகி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

இதையும் கடைபிடிக்கலாமே பாஸ்...

இவை எல்லாம் தவிர இன்னும் சில வழிகள் மூலமாக கார் உரிமையாளர்கள் நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். புதிய கார் வாங்கும்போதே, அதன் எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு என அந்த காரில் உள்ள அம்சங்கள் ஆகியவற்றை பார்த்து வாங்கலாம்.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

இந்த 2 அம்சங்களிலும் அதிக ரேட்டிங் கொடுக்கப்பட்டிருந்தால், நிச்சயமாக அது சுற்றுச்சூழலுக்கு உகந்த காராகதான் இருக்கும். அப்படிப்பட்ட கார்களை பார்த்து தேர்வு செய்து வாங்கலாம்.

நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்..!!! 10 நாள் செம ஹேப்பி..!!!

எல்லாவற்றுக்கும் மேலாக சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமானால், கூடுமானவரை காரை தவிர்த்து விட்டு, பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை தேர்வு செய்யலாம். தவிர்க்க முடியாத சமயங்களில் மட்டும் காரை பயன்படுத்தலாம்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Offers Free Services To Mark World Environment Day. read in tamil.
Story first published: Thursday, May 31, 2018, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X