மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

மாருதி சுஸுகி ஓம்னி ஒரு காலத்தில் உங்களின் குடும்ப காராக இருந்திருக்கலாம். அல்லது உங்களை பள்ளிக்கு அழைத்து சென்று வந்த உற்ற தோழனாக இருந்திருக்கலாம்.

மாருதி சுஸுகி ஓம்னி ஒரு காலத்தில் உங்களின் குடும்ப காராக இருந்திருக்கலாம். அல்லது உங்களை பள்ளிக்கு அழைத்து சென்று வந்த உற்ற தோழனாக இருந்திருக்கலாம். இப்படி எண்ணற்ற சுகமான நினைவுகளை கொடுத்த ஓம்னி 36 ஆண்டுகளுக்கு பின் பிரியாவிடை பெறுகிறது.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

எவர் மீதும் அன்பை பொழியக்கூடிய குணம் வாய்ந்த இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஓம்னி (Omni). இந்தியாவில் ஓம்னி காரை தெரியாமல் எவரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்திய மக்களின் வாழ்க்கையுடன் மாருதி சுஸுகி ஓம்னி கார் பின்னி பிணைந்துள்ளது.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் கார் மாருதி சுஸுகி 800 (Maruti Suzuki 800). கடந்த 1983ம் ஆண்டில், மாருதி சுஸுகி 800 கார் லான்ச் ஆனது. இதற்கு அடுத்த ஓராண்டில், அதாவது 1984ம் ஆண்டில் மாருதி சுஸுகி ஓம்னி அறிமுகம் செய்யப்பட்டது.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

எனவே மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த இரண்டாவது கார் என்ற பெருமையும் ஓம்னிக்கு உள்ளது. மாருதி சுஸுகி ஓம்னி காரானது MPV (Multi-Purpose Vehicle) எனப்படும் பன்முக பயன்பாட்டு வாகன வகையை சேர்ந்தது.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

மாருதி சுஸுகி ஓம்னி முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது 800 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இன்றும் கூட 800 சிசி இன்ஜினுடன்தான் மாருதி சுஸுகி நிறுவனம் ஓம்னி காரை விற்பனை செய்து வருகிறது.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

இடைப்பட்ட இவ்வளவு ஆண்டுகளில் புதிய ஜென்ரேஷன் அல்லது ஃபேஸ்லிப்ட் மாடல் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் மாருதி சுஸுகி ஓம்னி காரின் டிசைன் மட்டும் அவ்வப்போது மாற்றப்பட்டது. என்றாலும் அடிப்படை டிசைன் எந்த ஒரு சமயத்திலும் மாற்றம் செய்யப்படவே இல்லை.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

இந்த சூழலில் இந்திய மக்களின் வாழ்வில் இரண்டற கலந்திருந்த மாருதி சுஸுகி ஓம்னிக்கு பிரியாவிடை கொடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. விற்பனை குறைவு காரணமாக ஓம்னி காரின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்த போகிறது என்று மட்டும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடாதீர்கள்.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

பிரச்னை அதுவல்ல. மாருதி சுஸுகி ஓம்னி அறிமுகம் செய்யப்பட்டு பல தசாப்தங்கள் கடந்து விட்டன. ஆனால் இன்றளவும் அதன் விற்பனை அப்படி ஒன்றும் பெரிதாக சரியவில்லை. ஒரு மாதத்திற்கு சராசரியாக 7,000 ஓம்னி கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்து வருகிறது. எனவே நிச்சயமாக பிரச்னை அதுவல்ல.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

பாரத் புதிய வாகன பாதுகாப்பு மதிப்பிட்டு திட்டத்தின் (Bharat New Vehicle Safety Assessment Program-BNVSAP) மிகவும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகின்றன. மாருதி சுஸுகி ஓம்னி கார் இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்காது.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

எனவேதான் ஓம்னி காரின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தவுள்ளது. அதாவது 2020ம் ஆண்டு அக்டோபருக்கு பிறகு ஓம்னி கார் உற்பத்தி செய்யப்படாது. இந்த செய்தி ஓம்னி காரின் ரசிகர் பட்டாளங்கள் மத்தியில் கவலையை உண்டாக்கியுள்ளது. சிலர் கண்ணீர் சிந்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

மாருதி சுஸுகி ஓம்னி லான்ச் செய்யப்பட்டு தற்போது வரை 34 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. மாருதி சுஸுகி ஓம்னி உற்பத்தி நிறுத்தம் செய்யப்படவுள்ள 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் நெருங்க இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே உள்ளன.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

ஆக மொத்தத்தில் 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மக்களிடம் இருந்து மாருதி சுஸுகி ஓம்னி கார் பிரியாவிடை பெறவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பெயர் வாங்கி கொடுத்த கார்கள் என்றால், அனைவர் மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது மாருதி சுஸுகி 800 மற்றும் ஓம்னி ஆகியவைதான்.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

இதில், மாருதி சுஸுகி 800 காரின் உற்பத்தி கடந்த 2013ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இதேபோன்றதொரு காரணத்திற்காகதான் மாருதி சுஸுகி 800 காரின் உற்பத்தியும் நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது அதே பாணியில் மாருதி சுஸுகி ஓம்னியும் பிரியாவிடை பெறவுள்ளது.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

மாருதி சுஸுகி ஓம்னி காரில், 796 சிசி, 3 சிலிண்டர், எப்8டி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல், எல்பிஜி-பெட்ரோல், சிஎன்ஜி-பெட்ரோல் ட்ரிம்களில் மாருதி சுஸுகி ஓம்னி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

மாருதி சுஸுகி ஓம்னி காரின் இன்ஜின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவர் மற்றும் 59 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த காரில் 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் தற்போது விற்பனையாகும் இந்தியாவின் ஒரே கார் மாருதி சுஸுகி ஓம்னி மட்டுமே.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

ஏனெனில் டாடா நானோவில் கூட தற்போது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி ஓம்னி காரின் விலை 2.93 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதன்மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் மலிவான விலை கொண்ட கார்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

எதிர்காலத்தில் எவ்வளவு நவீன வசதிகளுடன் கூடிய கார்கள் வந்தாலும் மாருதி சுஸுகி ஓம்னியை மட்டும் இந்த தேசம் நிச்சயம் மறக்காது. ஏனெனில் இவ்வளவு ஆண்டுகளில் பலரது குடும்ப காராக மாருதி சுஸுகி ஓம்னி திகழ்ந்து வந்துள்ளது. அவ்வளவு ஏன்? உங்களின் குடும்ப காராக கூட இது இருந்திருக்க கூடும்.

மறந்து விடாதே தேசமே.. நீங்கா நினைவுகளை கொடுத்து விட்டு 36 ஆண்டுகளுக்கு பின் விடைபெறுகிறது ஓம்னி

இன்று வளர்ந்து பெரியவர்களாகியுள்ள பலர் மாருதி சுஸுகி ஓம்னியில்தான் பள்ளிக்கு சென்று வந்திருக்க கூடும். எனவே மாருதி சுஸுகி ஓம்னி காருடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நினைவுகள் நிச்சயமாக இருக்கும். அப்படிப்பட்ட நினைவுகள் எளிதில் அழிந்து விடக்கூடியவை அல்ல. மாருதி சுஸுகி ஓம்னியை இந்தியா ஒருபோதும் மறக்காது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Omni To Be Discontinued After 2020 October. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X