ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக, பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் கூடிய எஸ் க்ராஸ் காரை அறிமுகம் செய்வது தொடர்பாக, மாருதி சுஸூகி கட்டிக்காத்து வந்த ரகசியங்கள், கூகுளில் தவறுதலாக கசிந்து விட்டன.

By Arun

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக, பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் கூடிய எஸ் க்ராஸ் காரை அறிமுகம் செய்வது தொடர்பாக, மாருதி சுஸூகி கட்டிக்காத்து வந்த ரகசியங்கள், கூகுளில் தவறுதலாக கசிந்து விட்டன. இதன்மூலம் எஸ் க்ராஸ் பெட்ரோல் வேரியண்ட் லான்ச் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதுகுறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

இன்றைய தேதியில், மாருதி சுஸூகி நிறுவனம் வழங்கி வரும் மிகவும் விலை உயர்ந்த யுடிலிட்டி வாகனங்களில் (Utility Vehicle) ஒன்று எஸ் க்ராஸ் (S Cross). கடந்த 2015ம் ஆண்டுதான் எஸ் க்ராஸ் காரை முதல் முறையாக மாருதி சுஸூகி நிறுவனம் லான்ச் செய்தது.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

தொடக்கத்தில் 1.3 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு வந்தது. அதன்பின் கடந்த ஆண்டு, எஸ் க்ராஸ் காரில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் செய்யப்பட்டது. அதே நேரத்தில் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் திடீரென கைவிடப்பட்டது.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

தற்போது 1.3 லிட்டர் டீசல் மல்டிஜெட் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே எஸ் க்ராஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மாருதி சுஸூகி நிறுவனம், எஸ் க்ராஸ் காரில், ஒருபோதும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மட்டும் வழங்கவே இல்லை.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

மாருதி சுஸூகி எஸ் க்ராஸ் காருக்கு நேரடி போட்டியாளராக திகழ்வது ஹூண்டாய் கிரெட்டதான் (Hyundai Creta). ஆனால் எஸ் க்ராஸ் காரில், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லாததது, வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு குறையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

அத்துடன் ஹூண்டாய் கிரெட்டாவின் போட்டியையும், எஸ் க்ராஸ் காரால் சமாளிக்க முடியவில்லை. எனவே, ஹூண்டாய் கிரெட்டா காருக்கு, கடும் சவால் அளிக்கும் வகையில், எஸ் க்ராஸ் காரில், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மாருதி சுஸூகி நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக அவ்வப்போது வதந்திகள் கிளம்பும்.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

ஆனால் இன்றைய தேதி வரை, எஸ் க்ராஸ் காரில், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மாருதி சுஸூகி சேர்க்கவே இல்லை. எனினும் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல், எஸ் க்ராஸ் காரில், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸூகி ஈடுபட்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

மாருதி சுஸூகி நிறுவனம் தனது வழக்கமான டீலர்ஷிப்கள் மூலம் எஸ் க்ராஸ் காரை விற்பனை செய்வது கிடையாது. மாறாக பிரத்யேகமான நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாகதான் எஸ் க்ராஸ் கார்களை மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வரை கூகுளில் சென்று, 'Maruti S Cross petrol' என டைப் செய்து தேடியபோது, முதல் ரிசல்ட் ஆக வந்தது மாருதி சுஸூகி நெக்ஸாவின் ஒரு விளம்பரம்தான். அதில், எஸ் க்ராஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

அதனை க்ளிக் செய்தபோது, மாருதி சுஸூகி நெக்ஸாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் அழைத்து சென்றது. இதன்மூலம் இந்த விளம்பரம் மாருதி சுஸூகி நெக்ஸாவினுடையதுதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக அது போலியானதாக இருக்க முடியாது.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

எனினும் கூகுளில் இருந்து தற்போது அந்த விளம்பரம் நீக்கப்பட்டு விட்டது. அதேபோல் மாருதி சுஸூகி நெக்ஸாவின் இணையதள பக்கத்திற்கு சென்றாலும், எஸ் க்ராஸ் பெட்ரோல் வேரியண்ட் தொடர்பாக எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. கூகுளில் வந்த விளம்பரத்தை நீங்கள் கீழே காணலாம்.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

மாருதி சுஸூகி நிறுவனமானது, எஸ் க்ராஸ் காரில், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளில், ரகசியமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மிக விரைவாக, அதாவது தீபாவளி சமயத்தில், எஸ் க்ராஸ் காரின் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மாருதி சுஸூகி அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக இந்த விளம்பரம் தவறுதலாக வெளியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் எஸ் க்ராஸ் பெட்ரோல் இன்ஜின் காரின் விலை 8.10 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், மும்பை) முதல் தொடங்கும் என அந்த விளம்பரம் கூறுகிறது.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

இதே விலையில்தான் எஸ் க்ராஸ் பெட்ரோல் இன்ஜின் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் எஸ் க்ராஸ் டீசல் இன்ஜின் காரின் விலை 8.60 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், மும்பை) முதல் தொடங்குகிறது.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

அதாவது டீசல் இன்ஜினை காட்டிலும் பெட்ரோல் இன்ஜினின் ஆரம்ப விலை 50 ஆயிரம் ரூபாய் குறைவாக இருக்கலாம். பொதுவாக இந்த செக்மெண்டில், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுக்கு இடையேயான விலை வித்தியாசம் 1-1.5 லட்சம் ரூபாயாக உள்ளது கவனிக்கத்தக்கது.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

மாருதி சுஸூகி நிறுவனம் எஸ் க்ராஸ் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை வழங்கும் என்பதே ஆட்டோமொபைல் வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது. 2018 மாருதி சுஸூகி சியாஸ் காரில் வழங்கப்படும் அதே இன்ஜின்தான் இது.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

ஹூண்டாய் நிறுவனம் மாதந்தோறும் சராசரியாக 10,000க்கும் மேற்பட்ட கிரெட்டா கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் மாருதி சுஸூகி நிறுவனத்தால், சராசரியாக ஒரு மாதத்திற்கு வெறும் 4,000 எஸ் க்ராஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிகிறது.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

ஆனால் ஹூண்டாய் கிரெட்டா காரில், பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் மாருதி சுஸூகி எஸ் க்ராஸ் காரில், தற்போதைக்கு டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது

எனவே எஸ் க்ராஸ் காரில், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை வழங்குவதன் மூலம், ஹூண்டாய் கிரெட்டா காரின் விற்பனை வளர்ச்சியில், பெரும் சேதத்தை ஏற்படுத்த முடியும் என மாருதி சுஸூகி நிறுவனம் திட்டவட்டமாக நம்புகிறது. எனவே இம்முறை வாடிக்கையாளர்கள் நிச்சயமாக, பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய எஸ் க்ராஸ் காரை எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Suzuki S-Cross Petrol Variant Launch Soon, To Rival Hyundai Creta. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X