ஸ்விப்ட் மூலம் சாதனை படைத்த கையோ, டு விளையாட்டை ஆரம்பித்த மாருதி சுஸுகி.. ஹூண்டாய் என்ன ஆகப்போகுதோ..

மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அத்துடன் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அதன் உற்பத்தி கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அத்துடன் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அதன் உற்பத்தி கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்விப்ட் மூலம் சாதனை படைத்த கையோடு விளையாட்டை ஆரம்பித்த மாருதி சுஸுகி.. ஹூண்டாய் என்ன ஆகப்போகுதோ..

மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார், கடந்த 2005ம் ஆண்டு மே மாதம், இந்திய மார்க்கெட்டில் லான்ச் செய்யப்பட்டது. ஹேட்ச்பேக் வகையை சேர்ந்த ஸ்விப்ட் காரின் விற்பனை அன்று முதல் இன்று வரை கொஞ்சமும் சரியாமல் உள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் வழங்கிய அமோக ஆதரவுதான் காரணம்.

ஸ்விப்ட் மூலம் சாதனை படைத்த கையோடு விளையாட்டை ஆரம்பித்த மாருதி சுஸுகி.. ஹூண்டாய் என்ன ஆகப்போகுதோ..

10 லட்சம் ஸ்விப்ட் கார்கள் விற்பனை என்ற சாதனை மைல்கல்லை, கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் எட்டியது. இந்த சாதனை படைக்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள்ள ஸ்விப்ட் காரின் மூலம் மற்றொரு சாதனையை மாருதி சுஸுகி படைத்துள்ளது.

ஸ்விப்ட் மூலம் சாதனை படைத்த கையோடு விளையாட்டை ஆரம்பித்த மாருதி சுஸுகி.. ஹூண்டாய் என்ன ஆகப்போகுதோ..

ஆம், 20 லட்சம் ஸ்விப்ட் கார்கள் விற்பனை என்ற மற்றொரு சாதனை மைல்கல்லை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது எட்டியுள்ளது. இந்த சாதனையை படைக்க மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சுமார் 13 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் தேவைப்பட்டுள்ளது.

Recommended Video

மஹிந்திரா அல்டுராஸ் ஆஃப் ரோடு டிரைவ் - முதல் அபிப்ராயம்
ஸ்விப்ட் மூலம் சாதனை படைத்த கையோடு விளையாட்டை ஆரம்பித்த மாருதி சுஸுகி.. ஹூண்டாய் என்ன ஆகப்போகுதோ..

மாருதி சுஸுகி ஸ்விப்ட் காருக்கான வெயிட்டிங் பீரியட் அதிகமாக உள்ளது. எனவே வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக, ஸ்விப்ட் காரின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகரித்துள்ளது. கடந்த 2018 ஏப்ரல்-அக்டோபர் கால கட்டத்தில், 1.39 லட்சம் ஸ்விப்ட் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

ஸ்விப்ட் மூலம் சாதனை படைத்த கையோடு விளையாட்டை ஆரம்பித்த மாருதி சுஸுகி.. ஹூண்டாய் என்ன ஆகப்போகுதோ..

இந்த எண்ணிக்கையானது, 2017ம் ஆண்டு ஏப்ரல்-அக்டோபர் கால கட்டத்துடன் ஒப்பிடுகையில், 45 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்விப்ட் காரானது, ஐந்தாம் தலைமுறை ஹார்டெக்ட் (Heartect) பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டது.

ஸ்விப்ட் மூலம் சாதனை படைத்த கையோடு விளையாட்டை ஆரம்பித்த மாருதி சுஸுகி.. ஹூண்டாய் என்ன ஆகப்போகுதோ..

1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களில் மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், பெட்ரோல் இன்ஜின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

ஸ்விப்ட் மூலம் சாதனை படைத்த கையோடு விளையாட்டை ஆரம்பித்த மாருதி சுஸுகி.. ஹூண்டாய் என்ன ஆகப்போகுதோ..

அதே நேரத்தில் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவர், 190 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் பெட்ரோல் வேரியண்ட்கள், ரூ.4.99 லட்சம் முதல் ரூ.7.76 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஸ்விப்ட் மூலம் சாதனை படைத்த கையோடு விளையாட்டை ஆரம்பித்த மாருதி சுஸுகி.. ஹூண்டாய் என்ன ஆகப்போகுதோ..

இதன் டீசல் வேரியண்ட்கள் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.8.76 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 உள்ளிட்ட கார்களுடன் மாருதி சுஸுகி ஸ்விப்ட் போட்டியிட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Swift Surpassing The 20 Lakh Sales Mark In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X