மாருதி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்டில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்டுகளில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. மாருதி ஸ்விஃப்ட் காரின் ZXi+ காரின் ஏஎம்டி மாடல் ரூ.7.76 லட்சத்திலும், ZDi+ வேரியண்ட

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்டுகளில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்டில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!!

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனானது ஸ்விஃப்ட் காரின் VXi, ZXi ஆகிய பெட்ரோல் வேரியண்ட்டுகளிலும், VDi, ZDi ஆகிய டீசல் வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைத்து வந்தது.

மாருதி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்டில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!!

இந்த நிலையில்,வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், அனைத்து வசதிகளும் நிரம்பிய ZXi+ மற்றும் ZDi+ ஆகிய டாப் வேரியண்ட்டுகளிலும் இனி ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கும் என்று மாருதி அறிவித்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்டில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!!

மாருதி ஸ்விஃப்ட் காரின் ZXi+ காரின் ஏஎம்டி மாடல் ரூ.7.76 லட்சத்திலும், ZDi+ வேரியண்ட் ரூ.8.76 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்களைவிட ரூ.50,000 கூடுதல் விலையில் இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்கள் வந்துள்ளன.

மாருதி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்டில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!!

அனைத்து வசதிகளும் பொருந்திய இந்த புதிய ஏஎம்டி வேரியண்ட்டுகளில் எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இரட்டை வண்ண அலாய் வீல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி, வாய்ஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற முடியும்.

மாருதி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்டில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!!

மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

மாருதி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட்டில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!!

அதிகபட்ச வசதிகளை அளிப்பதால், வாடிக்கையாளர்கள் இனி முழு திருப்தியுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பண்டிகை காலத்தில் மாருதி ஸ்விஃப்ட் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Maruti Suzuki has announced the introduction of its AMT system - auto gear shift (AGS) in the top-end variants of the new-gen Swift hatchback.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X