இளைஞர்களை கவரும் புதிய டிசைன் உடன் 2019ல் மீண்டும் வருகிறது மாருதி சென் கார்

2019ம் ஆண்டு புதிய மாருதி சென் கார் விற்பனைக்கு வரவுள்ளது. மாருதி நிறுவனம் சென் காரின் விற்பனையை நிறுத்தியதில் இருந்து அதன் புதிய மாடலை டிசைன் செய்து வருகிறது. தற்போது அந்நிறுவனம் டிசைன் செய்த மாடலுக

By Balasubramanian

2019ம் ஆண்டு புதிய மாருதி சென் கார் விற்பனைக்கு வரவுள்ளது. மாருதி நிறுவனம் சென் காரின் விற்பனையை நிறுத்தியதில் இருந்து அதன் புதிய மாடலை டிசைன் செய்து வருகிறது. தற்போது அந்நிறுவனம் டிசைன் செய்த மாடலுக்கு ஒய்1கே என்ற கோடு எண்ணை வழங்கியுள்ளது. இந்த மாடல் அந்நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகப்படுத்திய கான்செப்ட்விஷன் எஸ் என்ற மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை கவரும் புதிய டிசைன் உடன் 2019ல் மீண்டும் வருகிறது மாருதி சென் கார்

இந்த புதிய மாடல் கார் ஆல்டோ காருக்கு சற்று அதிகமான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அல்ட்ரா ஸ்மால் எஸ்யூவி காராக விற்பனைக்கு வரவுள்ளது. இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு அமோக வரவேற்ப்பு கிடைத்துள்ள நிலையில் இந்த காரை குறைந்த விலை எஸ்யூவியாக கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இளைஞர்களை கவரும் புதிய டிசைன் உடன் 2019ல் மீண்டும் வருகிறது மாருதி சென் கார்

இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் இதன் டிசைன் உருவாக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்திய விஷன் எஸ் கான்செப்ட்டில் பெரிய அளவில் எந்த மாற்றங்களையும் அந்நிறுவனம் செய்யாது என பேசப்படுகிறது.

இளைஞர்களை கவரும் புதிய டிசைன் உடன் 2019ல் மீண்டும் வருகிறது மாருதி சென் கார்

மாருதி நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்திய இக்னீஷ் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பலர் ஹெட்ச் பேக் - எஸ்யூவி காரின் க்ராஸ் ஓவர் டிசைனை அதிகம் விரும்புகின்றனர்.

இளைஞர்களை கவரும் புதிய டிசைன் உடன் 2019ல் மீண்டும் வருகிறது மாருதி சென் கார்

இதனால் அந்நிறுவனம் சென் காரையும் க்ரோஸ் ஓவர் டிசைனில் உருவாக்கியுள்ளது. மார்கெட்டில் காம்பெக்ட் எஸ்யூவிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இதனால் இந்த காரும் அதிகமாக விற்பனையாகும் என தெரிகிறது.

இளைஞர்களை கவரும் புதிய டிசைன் உடன் 2019ல் மீண்டும் வருகிறது மாருதி சென் கார்

பழைய மாருதி காருக்கும் இதற்கும் டிசைனில் எந்த விதத்தில் ஒத்து போவதில்லை. ஏன் ஹெட்ச் பேக் - எஸ்யூவி க்ராஸ் ஓவர் செக்மெண்டில் இந்த கார் புதிதாக விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் வருகை கார் மாடிஃபிகேஷன் செய்பவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் விலை குறைவு என்பதாலும், அதிக மாடிஃபிகேஷன் செய்ய வாய்ப்புகள் இருப்பதாலும் அவர்கள் இந்த காரின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இளைஞர்களை கவரும் புதிய டிசைன் உடன் 2019ல் மீண்டும் வருகிறது மாருதி சென் கார்

மாருதி நிறுவனமும் இந்த ஒய்1கே காரின் விற்பனையை பெரிதும் எதிர்நோக்கியுள்ளது. இந்த கார் இந்தியாவில் பெரும் விற்பனையை பெரும் என்ற நம்பிக்கையை அந்நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் எஸ்யூவி ரக காரின் வளர்ச்சி தான்.

இளைஞர்களை கவரும் புதிய டிசைன் உடன் 2019ல் மீண்டும் வருகிறது மாருதி சென் கார்

இந்த காருக்கு அந்நிறுவனம் சென் என பழைய காரின் பெயரை வைக்க முக்கிய காரணம் மக்கள் மத்தியில் இந்த காரை எளிதாக கொண்டு செல்வது தான். மற்றபடி இந்த பழைய காருக்கும் இந்த காருக்கும் எந்த விதமான சம்மந்தமும் கிடையாது.

இளைஞர்களை கவரும் புதிய டிசைன் உடன் 2019ல் மீண்டும் வருகிறது மாருதி சென் கார்

மார்கெட்டிங்கிற்கு அதிகம் செலவு செய்யாமல் மக்கள் மத்தியில் இந்த காரை கொண்டு செல்ல இந்த காருக்கு சென் என்று பெயர் வைத்தால் ஏற்கனவே சென் கார் குறித்து மக்கள் மத்தில் உள்ள நற்பெயர் இந்த காருக்கும் தானாக கிடைக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இளைஞர்களை கவரும் புதிய டிசைன் உடன் 2019ல் மீண்டும் வருகிறது மாருதி சென் கார்

இந்த ஒய்1கே கார் 1.0 லி பெட்ரோல் இன்ஜின் உடன் ஏஎம்டி கியர் பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏஎம்டி, சிவிடி போன்ற ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் மக்கள் மத்தியில் அதிகமாக விற்பனையாகி வரும் நிலையில் இந்த காரிலும் அந்த ஆப்ஷனை மாருதி நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

இளைஞர்களை கவரும் புதிய டிசைன் உடன் 2019ல் மீண்டும் வருகிறது மாருதி சென் கார்

மாருதி நிறுவனம் ஏற்கனவே சுஸூகி காரை சக்ஸஸ் செய்த நிலையில் தற்போது இந்த சென் காரையும் அதிக ஆண்டுகளுக்கு சிறந்த விற்பனையில் இருக்கும் அளவிற்கு காரை ஹிட் செய்ய அந்நிறுவனம் விரும்புகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Maruthi zen is coming back next year as crossover. Read in Tamil
Story first published: Tuesday, August 21, 2018, 11:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X