சச்சின் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. நீங்கள் கூட வாங்கலாம்..

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார், செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த காரை யார் வேண்டுமானாலும் வாங்கலாம்.

By Arun

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார், செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த காரை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சச்சின் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. நீங்கள் கூட வாங்கலாம்..

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் என்றால், அதில் சச்சின் டெண்டுல்கர்தான் கடவுள் என்பார்கள். இப்படி ரசிகர்களால், கடவுள் அந்தஸ்தில் வைத்து கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட் வீரர்தான் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். இந்திய கிரிக்கெட் அணிக்காக இவர் படைத்த சாதனைகள் ஏராளம்.

சச்சின் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. நீங்கள் கூட வாங்கலாம்..

கிரிக்கெட்டை போல், கார்கள் மீதும் சச்சின் டெண்டுல்கருக்கு அலாதி பிரியம். கவர்ச்சிகரமான மற்றும் ஆடம்பரமான பல கார்களை சச்சின் டெண்டுல்கர் சொந்தமாக வைத்துள்ளார். பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. நீங்கள் கூட வாங்கலாம்..

கடந்த 2012ம் ஆண்டில்தான் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கு முன்பிருந்தே, பிஎம்டபிள்யூ கார்களை அவர் பயன்படுத்தி வருகிறார்.

சச்சின் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. நீங்கள் கூட வாங்கலாம்..

2002 பிஎம்டபிள்யூ எக்ஸ்5எம் (BMW X5M) கார் ஒன்றை சச்சின் டெண்டுல்கர் சொந்தமாக வைத்திருந்தார். தனது தினசரி பயணங்களுக்கு இந்த காரை சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்தி வந்தார். பின்னர் இந்த காரை சச்சின் டெண்டுல்கர் விற்பனை செய்து விட்டார். தற்போது இந்த கார் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

சச்சின் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. நீங்கள் கூட வாங்கலாம்..

இந்த காரின் நிறம் லாங் பீச் ப்ளூ (Long Beach Blue). இந்தியாவில் உள்ள மிகவும் அரிதான எஸ்யூவி வகை கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரின் ரெகுலர் மாடலைதான் பலர் தேர்ந்து எடுப்பார்கள். ஆனால் இது எம் வெர்ஷன் (M-version). அதாவது ரெகுலர் மாடலை காட்டிலும், இது அதிக பவர்புல் என கருதப்படுகிறது.

சச்சின் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. நீங்கள் கூட வாங்கலாம்..

இந்த காருக்கு ஏற்கனவே 4 உரிமையாளர்கள் இருந்ததாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் யூஸ்டு கார் மார்க்கெட்டில், இந்த கார் இதுவரை மூன்று முறை விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது இதன் விலை 21 லட்ச ரூபாய்.

சச்சின் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. நீங்கள் கூட வாங்கலாம்..

இந்த கார் 72 ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது. இந்த காரில் 4.6ஐஎஸ் (4.6is) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4,619 சிசி வி8 (V8) பெட்ரோல் இன்ஜினான இது, அதிகபட்சமாக 347 பிஎச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாயும் வல்லமை வாய்ந்தது.

சச்சின் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. நீங்கள் கூட வாங்கலாம்..

5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை இந்த கார் பெற்றுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 7 வினாடிகளில் இந்த கார் எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 239 கிலோ மீட்டர்கள்.

சச்சின் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. நீங்கள் கூட வாங்கலாம்..

ஆனால் தற்போதைய நிலையில், இந்த விலைக்கு இந்திய கார் மார்க்கெட்டில் ஏராளமான புதிய எஸ்யூவி கார்களே கிடைக்கின்றன. ஆனால் அவை பிஎம்டபிள்யூ எக்ஸ்5எம் அளவுக்கு வேகமானதாக இருக்குமா? என்பது கேள்விக்குறியே.

சச்சின் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. நீங்கள் கூட வாங்கலாம்..

இவை எல்லாவற்றையும் விட இந்த காரை சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்தியுள்ளார். இதை விட இந்த காருக்கு வேறு என்ன சிறப்பு வேண்டும்? சச்சின் இந்த காரை வைத்திருந்த சமயத்தில், அடிக்கடி இந்த காரில்தான் வலம் வருவார். இதனை பலமுறை பார்க்க முடிந்திருக்கிறது.

சச்சின் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. நீங்கள் கூட வாங்கலாம்..

இந்த காரில், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், ஆடியோ சிஸ்டம், ரிமோட் லாக்கிங், அலாய் வீல்ஸ், லெதர் சீட்ஸ், ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல், எலக்ட்ரிக் சீட்ஸ், பவர் மிரர்ஸ், பார்க்கிங் சென்சார், ஏர்பேக்ஸ், சன்ரூப் என பல்வேறு வசதிகள் உள்ளன.

சச்சின் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. நீங்கள் கூட வாங்கலாம்..

இந்த கார் தேவைப்படுபவர்கள் Acierto Multi Trade Pvt Limited நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். போன்: +91-9969471365, இமெயில் முகவரி: [email protected]

Most Read Articles
English summary
Master Blaster Sachin’s BMW Car is on Sale. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X