கொஞ்சம் அசந்த பென்சுக்கு விபூதி அடிக்க முயலும் பிஎம்டபிள்யூ... லக்ஸரி கார் மார்க்கெட்டின் கிங் யார்?

2018ம் ஆண்டின் முதல் பாதியில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Arun

2018ம் ஆண்டின் முதல் பாதியில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் முதலிட அரியணையை பிடிக்க மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் மல்லுக்கட்டி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கொஞ்சம் அசந்த பென்சுக்கு விபூதி அடிக்க முயலும் பிஎம்டபிள்யூ... இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் கிங் யார்?

2018ம் ஆண்டின் முதல் 6 மாதங்கள் உருண்டோடி விட்டன. இந்த ஆண்டின் முதல் பாதியில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விபரங்கள் வெளியாகி வருகின்றன. இதில், பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

கொஞ்சம் அசந்த பென்சுக்கு விபூதி அடிக்க முயலும் பிஎம்டபிள்யூ... இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் கிங் யார்?

2018ம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரை மொத்தம் 5,171 கார்களை பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா (பிஎம்டபிள்யூ+மினி) விற்பனை செய்துள்ளது. 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 13 சதவீத வளர்ச்சியாகும்.

கொஞ்சம் அசந்த பென்சுக்கு விபூதி அடிக்க முயலும் பிஎம்டபிள்யூ... இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் கிங் யார்?

இதில், பிஎம்டபிள்யூ இந்தியா தனியாக விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 4,890. 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீத வளர்ச்சி என பிஎம்டபிள்யூ இந்தியா வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளது.

கொஞ்சம் அசந்த பென்சுக்கு விபூதி அடிக்க முயலும் பிஎம்டபிள்யூ... இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் கிங் யார்?

அதே நேரத்தில், மினி இந்தியா 281 கார்களை விற்பனை செய்துள்ளது. 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 30 சதவீத வளர்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ, மினி என இரண்டின் விற்பனையையும் கணக்கிட்டால், 5,171 கார்கள்.

கொஞ்சம் அசந்த பென்சுக்கு விபூதி அடிக்க முயலும் பிஎம்டபிள்யூ... இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் கிங் யார்?

மறுபக்கம் பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்டான பிஎம்டபிள்யூ மோட்டாரேட், 2018ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 208 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. 2018ம் ஆண்டின் 2வது பாதியிலும் விற்பனை அதிகரிக்கும் என பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கொஞ்சம் அசந்த பென்சுக்கு விபூதி அடிக்க முயலும் பிஎம்டபிள்யூ... இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் கிங் யார்?

2017ம் ஆண்டின் ஜனவரி-ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டின் முதல் பாதியில் பெட்ரோல் வேரியண்ட்களின் வளர்ச்சி 92 சதவீதமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் லேட்டஸ்ட் டெக்னாலஜிக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

கொஞ்சம் அசந்த பென்சுக்கு விபூதி அடிக்க முயலும் பிஎம்டபிள்யூ... இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் கிங் யார்?

பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு டஃப் ஃபைட் கொடுத்து கொண்டிருக்கும் நிறுவனங்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ். கடந்த ஜனவரி-ஜூன் வரையிலான 2018ம் ஆண்டின் முதல் பாதியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விற்பனையும் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொஞ்சம் அசந்த பென்சுக்கு விபூதி அடிக்க முயலும் பிஎம்டபிள்யூ... இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் கிங் யார்?

அதாவது 2018ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 8,061 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2017ம் ஆண்டின் முதல் பாதியில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 7,171 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன்மூலமாக 12.4 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

கொஞ்சம் அசந்த பென்சுக்கு விபூதி அடிக்க முயலும் பிஎம்டபிள்யூ... இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் கிங் யார்?

விற்பனையில் இது ஒரு புதிய சாதனையாகும். இந்தியாவில் ஒரு அரையாண்டில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இவ்வளவு எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்வது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு ஒரு அரையாண்டில் இவ்வளவு அதிக அளவிலான கார்கள் விற்பனையானதில்லை.

கொஞ்சம் அசந்த பென்சுக்கு விபூதி அடிக்க முயலும் பிஎம்டபிள்யூ... இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் கிங் யார்?

2018ம் ஆண்டின் ஜனவரி-ஜுன் மாதத்தில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி வகை கார்களின் விற்பனையும், 15.9 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் முதலிட அரியணையில், கடந்த மூன்று ஆண்டுகளாக மெர்சிடிஸ் பென்ஸ்தான் அமர்ந்துள்ளது.

கொஞ்சம் அசந்த பென்சுக்கு விபூதி அடிக்க முயலும் பிஎம்டபிள்யூ... இந்திய லக்ஸரி கார் மார்க்கெட்டின் கிங் யார்?

அந்த அந்தஸ்தை தக்க வைத்து கொள்ள விரும்புவதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. லக்ஸரி கார் நிறுவனங்களான பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவைதான் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

Most Read Articles
English summary
Mercedes-Benz and BMW posts record half-yearly sales in India. Read in tamil
Story first published: Friday, July 6, 2018, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X