மெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேன் இந்தியாவில் அறிமுகமாகிறது!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் V- Class சொகுசு வேன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேனின் ஸ்டான்டர்டு மாடல் 6 பேர

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் V- Class சொகுசு வேன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய சொகுசு வேனின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேன் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்தியாவில் முதலிடத்தை தக்க வைக்கும் விதத்தில், ரக வாரியாக தொடர்ந்து பல புதிய மாடல்களை வரிசை கட்டி வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ். விற்பனையை ஒரு பொருட்டாக இல்லாமல், வரும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து தேர்வுகளையும் வழங்கும் விதத்தில் வியூகத்துடன் செயல்பட்டு வருகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேன் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், வி- கிளாஸ் சொகுசு வேனை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த சொகுசு ரக வேனுக்கு இருக்கும் வர்த்தக வாய்ப்புகள் குறித்தும் தற்போது ஆய்வு செய்து வருகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேன் இந்தியாவில் அறிமுகமாகிறது!

தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி, வி- கிளாஸ் சொகுசு வேனுக்கு நட்சத்திர ஓட்டல்களில் விருந்தினர்களுக்கான போக்குவரத்து மற்றும் சொகுசு வாடகை கார் வர்த்தகத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனால், வர்த்தக வாய்ப்பு நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையில் வி- கிளாஸ் சொகுசு வேனை அறிமுகம் செய்வதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை கையில் எடுத்துள்ளது பென்ஸ்.

மெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேன் இந்தியாவில் அறிமுகமாகிறது!

மெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேனின் ஸ்டான்டர்டு மாடல் 6 பேர் செல்வதற்கான தனித்தனி இருக்கை வசதியுடன் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. மற்றொரு மாடலில் பெஞ்ச் இருக்கை கொண்டதாக இருக்கும். இதில், 8 பேர் வரை செல்லலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேன் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த சொகுசு வேன் 4,895 மிமீ நீளம் காம்பேக்ட் மாடலிலும், 5,140 மிமீ கொண்ட நடுத்தர நீளம் கொண்ட மாடலிலும், 5,370 மிமீ நீளம் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. இந்த காரில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேன் இந்தியாவில் அறிமுகமாகிறது!

எலெக்ட்ரிக் ஸ்லைடிங் கதவுகள், பனோரமிக் சன்ரூஃப், தெர்மோட்ரோனிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வென்டிலேட்டட் இருக்கைகள், லம்பார் சப்போர்ட் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த காரில் பயணிகளுக்காக 5 லிட்டர் கொள்திரன் கொண்ட குளிரூட்டும் இடவசதியும், வெப்பப்படுத்தும் வசதியுடன் கப் ஹோல்டர்களும் இடம்பெற்றுள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேன் இந்தியாவில் அறிமுகமாகிறது!

வெளிநாடுகளில் இந்த கார் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டீசல் மாடலானது மூன்று விதமான பவரை வெளிப்படுத்தும் விதத்தில் கிடைக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் முன்புற டிரைவிங் சிஸ்டம் கொண்ட மாடலிலும், 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. இந்தியாவில் முன்புற டிரைவிங் சிஸ்டம் கொண்ட மாடலில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேன் இந்தியாவில் அறிமுகமாகிறது!

தற்போது கார் மற்றும் பைக்குகள் இறக்குமதிக்கான விதிகளை மத்திய அரசு தளர்த்தி இருக்கிறது. ஹோமோலாகேஷன் எனப்படும் இந்தியாவுக்கு தக்க மாறுதல்களை செய்யாமல் முதல் 2,500 யூனிட்டுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு கார், பைக் தயாரிப்பாளர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனால், வி- கிளாஸ் சொகுசு மினி வேன் இறக்குமதி செய்து விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி- கிளாஸ் சொகுசு வேன் இந்தியாவில் அறிமுகமாகிறது!

புதிய இறக்குமதி கொள்கையை பயன்படுத்தி, பல உயரிய ரக மாடல்களை இந்தியாவில் பரீட்சயத்து பார்க்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. அதில், வி- கிளாஸ் சொகுசு வேனும் முக்கிய மாடலாக இருக்கும். ரூ.40 லட்சம் முதல் ரூ.48.5 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
German luxury car maker Mercedes-Benz is planning to expand its product portfolio in the Indian market. According to a report from TOI, Mercedes-Benz is considering the V-Class luxury van for India. The Mercedes-Benz V-Class will be targeted towards fleet customers.
Story first published: Saturday, September 22, 2018, 13:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X