நடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!!

மெர்சிடிஸ் பென்ஸ் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்கள் இல்லாத ஊர்களில் வாடிக்கையாளர் பகுதிகளுக்கே சென்று சர்வீஸ் வசதியை வழங்குவதற்காக நடமாடும் சர்வீஸ் மையத்தை அறிமுகம் செய்துள்ளது. இரண்டாம் நிலை மற்றும்

By Saravana Rajan

வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்கும் முயற்சிகளை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது நடமாடும் சர்வீஸ் மையத்தை அறிமுகம் செய்துள்ளது.

நடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!!

இந்தியாவில் சொகுசு கார்களுக்கான சந்தை மிகச் சிறப்பான வளர்ச்சியை எட்டி வருகிறது. இந்த சந்தையில் ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அடுத்து பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி கார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், வால்வோ கார் நிறுவனத்தின் வருகையால் ஜெர்மனியை சேர்ந்த இந்த மூவேந்தர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!!

இந்த நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், பல்வேறு சிறப்பு திட்டங்களை ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

நடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!!

அதாவது, மெர்சிடிஸ் பென்ஸ் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்கள் இல்லாத ஊர்களில் வாடிக்கையாளர் பகுதிகளுக்கே சென்று சர்வீஸ் வசதியை வழங்குவதற்காக நடமாடும் சர்வீஸ் மையத்தை அறிமுகம் செய்துள்ளது.

நடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!!

சாதாரண சர்வீஸ் மையத்தில் இருக்கும் கட்டமைப்பு வசதிகளுடன் மெர்சிடிஸ் பென்ஸ் 4023 என்ற 40 டன் எடை சுமக்கும் டிரெயிலரை நடமாடும் சர்வீஸ் மையமாக மாற்றி இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ். இந்த நடமாடும் சர்வீஸ் மையத்தின் மூலமாக கார் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் சேவைகளை அளிக்க இருக்கிறது.

நடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!!

மொத்தம் இரண்டு டிரக்குகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முதல் டிரக் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களிலும், மற்றொரு டிரெயிலர் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களிலும் சேவையை வழங்க இருக்கிறது. ஒவ்வொரு டிரக்கும் ரூ.1.5 கோடி மதிப்பீடில் உருவாக்கப்பட்டுள்ளன.

நடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!!

இந்த நடமாடும் சர்வீஸ் மையத்தில் கார்களை பழுது நீக்குவதற்கு தேவையான உபகரணங்கள், கருவிகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட ஊர்களுக்கு இந்த நடமாடும் சர்வீஸ் மைய டிரக் வருகை தரும்.

நடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!!

அப்போது, வாடிக்கையாளர்கள் தங்களது கார்களின் வழக்கமான பராமரிப்புப் பணிகள், பழுதுநீக்கும் வசதிகளை பெற முடியும். "My Mercedes My Service" என்ற திட்டத்தின் கீழ் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம்.

நடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!!

முதல் கட்டமாக இந்த ஆண்டு இறுதி வரை வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகம் உள்ள 15 நகரங்களுக்கு இந்த நடமாடும் சர்வீஸ் மையம் சென்று சேவையை வழங்க இருக்கிறது. அதன்பின்னர், இந்த திட்டத்தை தொடர்வது குறித்து முடிவு அறிவிக்கப்படும்.

நடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!!

அதாவது, வரவேற்பு அதிகம் இருக்கும்பட்சத்தில், கூடுதல் டிரெயிலர்களை சேவையில் ஈடுபடுத்த முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அதிக வரவேற்பு கொடுக்கும் பகுதிகளில் சிறிய அளவிலான சர்வீஸ் மையத்தை திறக்கவும் முடிவு செய்துள்ளது.

நடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!!

இதுவரை கார்களை விற்பனை செய்வதற்கான நடமாடும் ஷோரூம்களை பயன்படுத்தி வந்த சொகுசு கார் நிறுவனங்கள் இப்போது நடமாடும் சர்வீஸ் மைய சேவையையும் வழங்குவது வரவேற்கத்தக்க விஷயம். இதனால், வாடிக்கையாளர்களின் கால விரயமும், தேவையற்ற செலவுகளும் தவிர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mercedes-Benz Launches 'Service on Wheels' Initiative in India.
Story first published: Thursday, July 19, 2018, 15:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X