எம்ஜி ஆர்எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் சோதனை: ஸ்பை படங்கள்!!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு போட்டியாளராக கருதப்படும் எம்ஜி ஆர்எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்பை படங்களின் மூலமாக சோதனை செய்யப்படும் மாடல் இடது கை ஸ்

By Saravana Rajan

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு போட்டியாளராக கருதப்படும் எம்ஜி ஆர்எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களும் வெளியாகி இருக்கின்றன.

எம்ஜி ஆர்எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் சோதனை: ஸ்பை படங்கள்!!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவின் SAIC நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்க எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

எம்ஜி ஆர்எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் சோதனை: ஸ்பை படங்கள்!!

இந்தியாவில் எஸ்யூவி மாடலுடன் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. அதன்படி, தனது ஆர்எக்ஸ்5 எஸ்யூவியை இந்தியாவில் தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருக்கிறது. அங்க அடையாளங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்டு அந்த எஸ்யூவி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

எம்ஜி ஆர்எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் சோதனை: ஸ்பை படங்கள்!!

ஸ்பை படங்களின் மூலமாக சோதனை செய்யப்படும் மாடல் இடது கை ஸ்டீயரிங் வீல் கொண்ட மாடலாக தெரிய வந்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த சோதனை செய்யப்பட்டு வருகிறது.

எம்ஜி ஆர்எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் சோதனை: ஸ்பை படங்கள்!!

வி வடிவிலான க்ரில் அமைப்பு, சி வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், ரூஃப் ரெயில்கள், ஸ்பாய்லர் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக தெரிகின்றன. இரட்டை வண்ண அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எம்ஜி ஆர்எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் சோதனை: ஸ்பை படங்கள்!!

வெளிநாடுகளில் விற்பனையாகும் எம்ஜி ஆர்எக்ஸ்5 எஸ்யூவி இரண்டு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. 166 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்ல 1.5 லிட்டர் எஞ்சின் மற்றும் 217 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

எம்ஜி ஆர்எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் சோதனை: ஸ்பை படங்கள்!!

இந்த எஸ்யூவியானது 6 ஸ்பீடு அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டாப் வேரியண்ட் மாடலானது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது.

எம்ஜி ஆர்எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் சோதனை: ஸ்பை படங்கள்!!

இந்த புதிய எஸ்யூவி மாடல் குஜராத் மாநிலம், ஹலோல் பகுதியில் அமைந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படும். இந்த ஆலையை செயிக் நிறுவனம் கையகப்படுத்தியது நினைவிருக்கலாம்.

எம்ஜி ஆர்எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் சோதனை: ஸ்பை படங்கள்!!

அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த எஸ்யூவியைத் தொடர்ந்து ஹேட்ச்பேக் ரக கார் மாடலையும், செடான் ரக காரையும் அறிமுகம் செய்ய இருக்கிறது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம்.

Source:TeamBHP

Most Read Articles
English summary
Chinese firm SAIC-owned British automaker MG Motors is all set to enter the Indian market in 2019. Now, TeamBHP has spotted the MG RX5 SUV being tested on Indian roads. The MG RX5 was spotted in Pune and the SUV is finished in heavily camouflaged livery.
Story first published: Tuesday, June 26, 2018, 18:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X