பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த மினி கார்கள்!!

பெங்களூரில் மினி கார்களை கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் ஓட்டி பார்க்கும் நிகழ்வு கடந்த வார இறுதியில் நடந்ததது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு மினி கார்களை ஆர்வமுடன் ஓட்டி பார்த்தனர். மேலும், மினி கார்கள

By Saravana Rajan

பெங்களூரில் மினி கார்களை கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் ஓட்டி பார்க்கும் நிகழ்வு கடந்த வார இறுதியில் நடந்ததது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு மினி கார்களை ஆர்வமுடன் ஓட்டி பார்த்தனர். மேலும், மினி கார்களில் இருக்கும் தொழில்நுட்ப உச்சத்தையும் நேரில் உணர்ந்து சிலிர்த்தனர்.

பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த மினி கார்கள்!!

கடந்த 18 மற்றும் 19 தேதிகளில் மினி அர்பன் டிரைவ் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள மேக்கோ கார்டோபியா கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து மினி பிராண்டு கார்களையும் இந்த பந்தய களத்தில் வைத்து ஓட்டி பார்க்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற்றனர்.

பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த மினி கார்கள்!!

மினி கன்ட்ரிமேன், மினி கூப்பர், மினி கன்வெர்ட்டிபிள் மற்றும் 3 டோர் மினி கார் மாடல்களை வாடிக்கையாளர்களை ஓட்டி பார்த்தனர். பந்தய களத்தில் மினி கார்களின் செயல்திறனை ஓட்டி பரிசோதித்து பார்த்து வாடிக்கையாளர்கள் சிலிர்த்தனர். இது ஒரு புதுவித அனுபவத்தை தந்ததாகவும் தெரிவித்தனர்.

பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த மினி கார்கள்!!

கோ- கார்ட் பந்தய களத்தில் மினி கார்களை ஓட்டி பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து மினி நிறுவனத்தின் பயிற்றுனர்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். அதன்படி, வாடிக்கையாளர்கள் ஓட்டி பார்த்து மகிழ்ந்தனர்.

பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த மினி கார்கள்!!

அதிகபட்ச ஆக்சிலரேசனில் செலுத்துவது மற்றும் பிரேக்கை செவ்வனே பயன்படுத்தி காரை உடனடியாக நிறுத்துவதற்குமான இரண்டு முக்கிய உத்திகள் குறித்து காரை ஓட்டிய வாடிக்கையாளர்களுக்கு பயிற்றுனர்கள் ஆலோசனைகளை கூறினர். இதன்மூலமாக, மினி கார்களின் பிரேக் செயல்திறன் குறித்து வாடிக்கையாளர்கள் நேரிடையாக உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த மினி கார்கள்!!

வளைவுகளில் திரும்பும்போது வேகத்தை குறைத்து, மீண்டும் வேகம் எடுப்பது, ஸ்டீயரிங் பேலன்ஸ் உள்ளிட்டவை குறித்தும் மினி கார் நிறுவனத்தின் பயிற்றுனர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் ஆலோசனைகளை கேட்டு தெரிந்துகொண்டனர்.

பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த மினி கார்கள்!!

இந்த நிகழ்ச்சியின்போது மினி காரை ஓட்டுபவர் தவறு செய்தாலும், விபத்தில் சிக்காத வண்ணம் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளும், கட்டமைப்பு முறைகளையும் கையாளப்பட்டு இருந்தன. இதனால், நம்பிக்கையுடன் பலரும் மினி கார்களின் உச்சபட்ச செயல்திறனை தெரிந்து கொள்ளும் விதத்தில் ஓட்டினர்.

பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த மினி கார்கள்!!

பிரேக்கிங் டெஸ்ட் என்ற முறையானது மினி கன்ட்ரிமேன் காரில் மட்டும் வழங்கப்பட்டது. அதிகபட்சமாக பிரேக் பிடிக்கும்போது ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பம் எந்தளவு செம்மையாக செயல்பட்டு காரை பாதுகாப்பாக நிறுத்துகிறது என்பதையும் இந்த நிகழ்வின் மூலமாக பலரும் நேரில் உணர்ந்து கொண்டனர்.

பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த மினி கார்கள்!!

வழியில் வைக்கப்பட்டிருந்த தடைகளின் மீது கவனத்தை செலுத்துவதைவிட, தடையை தாண்டி வெளியேறும் பகுதி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மினி நிறுவனத்தின் பயிற்றுனர்கள் கார்களை ஓட்டியவர்களுக்கு ஆலோசனைகளை தந்தனர்.

பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த மினி கார்கள்!!

இந்த நிகழ்வின் மூலமாக மினி கார்களை பந்தய களத்தில் ஓட்டும் உற்சாகமான அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற்றதுடன் முறைப்படி காரை ஓட்டுவதற்கான பல ஆலோசனைகளையும், உத்திகளையும் பயிற்றுனர்கள் மூலமாக தெரிந்து கொண்டனர். இது நிச்சயமாக அவர்களது கார் ஓட்டும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.

பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த மினி கார்கள்!!

பெங்களூரை தொடர்ந்து சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே, சண்டிகர் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் வரும் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்வு மினி கார் பிரியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த அனுபவத்தை தரும் என்று கூறலாம்.

பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த மினி கார்கள்!!

மினி கூப்பர் கார் ரூ.29.70 லட்சத்திலும், மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் மாடல் ரூ.37.10 லட்சத்திலும், மினி கன்ட்ரிமேன் ரூ.34.9 லட்சத்திலும், மினி க்ளப்மேன் ரூ.40.30 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் இந்தியாவில் கிடைக்கின்றன.

Most Read Articles
மேலும்... #மினி #mini
English summary
MINI India has officially introduced their experience event to showcase the popular 'go-kart' characteristics of their products – MINI Urban Drive. The first edition of the event was held at Meco Kartopia go-karting circuit in Bangalore, on the 18th and 19th of August 2018. MINI Urban Drive will be extended to Hyderabad, Chennai, Mumbai, Pune, Chandigarh and Delhi in the coming months.
Story first published: Tuesday, August 21, 2018, 11:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X